இந்தியாவில் Nokia 5710 XpressAudio அறிமுகம்-இன்னைக்கே வாங்கிருங்க! என்ன விலை?

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ (Nokia 5710 XpressAudio)எனும் 4ஜி பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தனித்துவமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது.

விலை மற்றும் விற்பனை

விலை மற்றும் விற்பனை

Nokia.com இணையதளத்தில் இன்று முதல் நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனை வாங்க முடியும். அதேபோல் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த போனை வாங்க முடியும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.

இந்தியாவில் முதல் 200MP கேமராவுடன் Motorola Edge 30 Ultra அறிமுகம்.! விலையை சொன்னா வாங்குவீங்களா?இந்தியாவில் முதல் 200MP கேமராவுடன் Motorola Edge 30 Ultra அறிமுகம்.! விலையை சொன்னா வாங்குவீங்களா?

நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ நிறங்கள்

நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ நிறங்கள்

இந்தியாவில் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட Nokia 5710 XpressAudio போன் ஆனது ரெட்/ பிளாக் அல்லது ரெட் / வைட் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நேரம் வந்துவிட்டது.. ஆரம்பமே அமர்க்களம் செய்யும் Flipkart- ரூ.16,000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்!நேரம் வந்துவிட்டது.. ஆரம்பமே அமர்க்களம் செய்யும் Flipkart- ரூ.16,000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்!

இயர்பட்ஸ்

இயர்பட்ஸ்

நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ மொபைல் போன் பின்புறத்தில் ஸ்லைடு-டவுன் பேனலுடன் சாதாரண தோற்றமுடைய ஒரு ஃபீச்சர் போனைப் போல் காட்சியளிக்கிறது. ஆனால் இந்த போனில் இருக்கும் டிவிஸ்ட்டே இந்த ஸ்லைடரின் பின்பக்கம் ஒளிந்துள்ளது. அதாவது இதைத் திறக்கும் போது TWS இன் ஒரு ஜோடி இயர்பட்ஸ் கருவிகள் வெளிப்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ்களை போனுக்குள் வைக்கும் போது இவை சார்ஜ் செய்யப்படும் படி நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது.

WhatsApp செயலியில் வருகிறது சூப்பர் அம்சம்: இனி ரொம்ப நேரம் தேட வேண்டியதில்லை!WhatsApp செயலியில் வருகிறது சூப்பர் அம்சம்: இனி ரொம்ப நேரம் தேட வேண்டியதில்லை!

தனித்துவமான வடிவமைப்பு

தனித்துவமான வடிவமைப்பு

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் போன் டிசைன்களில் இது தனித்துவமான ஒன்றாகும். அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் பல தசாப்தங்களுக்கு முன்பு நாம் மறந்துபோன கிளாசிக் போன்களை திரும்பக் கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 சூப்பரான சிப்செட்

சூப்பரான சிப்செட்

நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போன் ஆனது S30+ சாப்ட்வேர் மூலம் இயக்குகிறது. பின்பு இது Unisoc T107 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக Unisoc T107 சிப்செட் உடன் இணைந்து இயங்கும் ஒரு 4ஜி மோடம்-ஐ கொண்டுள்ளது இந்த புதிய போன்.

ரூ.11,499க்கு அறிமுகமான 5G ஸ்மார்ட்போன்: இந்த அம்சம் கொண்ட உலகின் முதல் போன் இதுதான்!ரூ.11,499க்கு அறிமுகமான 5G ஸ்மார்ட்போன்: இந்த அம்சம் கொண்ட உலகின் முதல் போன் இதுதான்!

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

புதிய நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனில் 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் விஜிஏ கேமரா வசதி கூட உள்ளது. அதேபோல் 3.5MM ஹெட்போன் ஜாக் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போன்.

 அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இதன் இயர்பட்களை மொபைல் உடன் வைத்து சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை பயன்படுத்த
முடியும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக போனுடன் வழங்கப்படும் இந்த TWS இயர்பட்ஸ்களை உயர்-ஸ்பெக் அம்சத்துடன் எதிர்பார்க்க வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இதில் நாய்ஸ் கான்சலேஷன் ( (ANC) போன்ற அம்சங்களை எதிர்பார்க்க முடியாது.

உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!

 வயர்லெஸ் எஃப்எம் ரெடியோ ஆதரவு

வயர்லெஸ் எஃப்எம் ரெடியோ ஆதரவு

மேலும் இந்த போனில் எம்பி3 பிளேயர் மற்றும் வயர்லெஸ் எஃப்எம் ரெடியோ ஆதரவு உள்ளது. பீச்சர் போன்களில் இது தனித்துவமான வசதிகளுடன் வெளிவருவதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Nokia 5710 XpressAudio Launched in India: Specs, price, sale, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X