Just In
- 6 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 9 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 9 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 10 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
வேட்டி- சேலை விநியோகம்.. உண்மைக்கு மாறாக தகவலுக்கு கண்டனம்.. ஓபிஎஸ்-க்கு அமைச்சர் காந்தி பதிலடி!
- Movies
என்ன சொல்றீங்க.. சூர்யா 42 படத்தில் சீதா ராமம் ஹீரோயின் நடிக்கிறாங்களா? அதுவும் அந்த ரோலிலா?
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
CES 2023: பிரமாண்ட போனை இறக்கி சத்தமின்றி சர்ப்ரைஸ் கொடுக்கும் Motorola.!
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் புதிதாக மோட்டோரோலா திங்க் போன் (Motorola ThinkPhone) என்ற புதிய சீரிஸ் ஸ்மார்ட்போனை(smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதரிபார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சிஇஎஸ் 2023
அதுவும் CES 2023 நிகழ்வில் இந்த மோட்டோரோலா திங்க் போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் டீசர் வெளியிட்டுள்ளது. குறிப்பாக லாஸ் வேகாஸில் சிஇஎஸ் 2023 (நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ - Consumer Electronics Show) நிகழ்வு ஜனவரி 5 முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் தான் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா திங்க் போனை அறிமுகம் செய்ய உள்ளது.

லெனோவா லேப்டாப்
மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ThinkPhone பற்றிய சில விவரங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ளது. மோட்டோரோலா திங்க் போன் இடது பக்கத்தில் ஒரு சிவப்பு பட்டனை கொண்டுள்ளது. இந்த சிவப்பு பட்டன் என்ன வேலையைச் செய்யும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதைப் பார்ப்பதற்கு ஒன்பிளஸ் (OnePlus) போன்களில் வரும் அலர்ட் ஸ்லைடர் பட்டர்களைப் போல் காட்சியளிக்கிறது. இந்தத் திங்க்போன், லெனோவா நிறுவனத்திற்குச் சொந்தமான ThinkPad லேப்டாப்களுடன் இணக்கம் ஆகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆபீஸ் வேலைகள்
அதேபோல் இந்த போன் கனெக்ட் டிஸ்ப்ளே, மிரர் போன், வெப்கேம் போன்ற விருப்பங்களை லேப்டாப் உடன் எளிதாக இணைக்க அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தின்க்பேட்டில் உங்களுக்கு வரும் மெசேஜ்களை பார்ப்பதற்கும் கூடுதல் சேவைகளை போன் மூலம் சில நொடியில் அணுகுவதற்கு இந்த போன் பல அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உங்கள் ஆபீஸ் வேலைகளை போனில் அணுக இந்த ஸ்மார்ட்போன் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
குறிப்பாக மோட்டோரோலா திங்க் போன் 6.6-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா
இந்த புதிய மோட்டோரோலா திங்க் போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13 அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
மோட்டோரோலா திங்க் ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.

வயர்லெஸ் சார்ஜிங்..
புதிய மோட்டோரோலா திங்க் போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 68 வாட்ஸ் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜ் வசதி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன். குறிப்பாக உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470