Just In
- 10 hrs ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- 10 hrs ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 11 hrs ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
- 11 hrs ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
Don't Miss
- News
மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய பாஜக எம்பி? விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Lifestyle
கும்பம் செல்லும் சுக்கிரனால் ஜனவரி 22 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Movies
வதந்திகளை நம்பாதீங்க.. விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை!
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
அடேங்கப்பா.. மிலிட்டரி தர ஆதரவுடன் அறிமுகமான Motorola ஸ்மார்ட்போன்: நம்பி வாங்கலாம்.!
லாஸ் வேகாஸில் நடைபெற்ற சிஇஎஸ் 2023 நிகழ்ச்சியில் மோட்டோரோலாவின் லெனோவா திங்க்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பல மேம்பட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லெனோவா திங்க்போன் விலை?
ஆனால் தற்போது லெனோவா திங்க்போன் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தான் இந்த லெனோவா திங்க்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் விலையும் வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் இதன் விலை பற்றிய தகவல் தெரியவரும். இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலாவின் ThinkShield
மால்வேர், ஃபிஷிங், நெட்வொர்க் தாக்குதல்கள் மற்றும் பலவற்றிலிருந்து மேம்பட்ட பாதுகாப்பிற்காக மோட்டோரோலாவின் ThinkShield-ஐ கொண்டுள்ளது. அதேபோல் ஆபிஸ் சார்ந்த வேலைகளை இந்த போனில் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. லெனோவாவின் திங்க்பேட் லேப்டாப்களுடன் இந்த போனை ஒருங்கிணைக்க முடியும். இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய மொபைல் போன்.

தீவிர வெப்பநிலையைத் தாங்கும்
அதேபோல் Lenovo ThinkPhone ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது. எனவே தீவிர வெப்பநிலையைத் தாங்கும். பின்பு தண்ணீருக்கு அடியில் 30 நிமிடங்கள் வரை செயல்பாட்டு நிலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நம்பி வாங்கலாம். குறிப்பாக இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
லெனோவா திங்க்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2400 பிகசல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1
லெனோவா திங்க்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/ 256ஜிபி/ 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதேபோல் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா
மோட்டோரோலாவின் Lenovo ThinkPhone ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லெனோவா திங்க்போன் மாடல். பின்பு 15 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு, 68 வாட்ஸ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். டால்பி அட்மோஸ் மூலம் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய லெனோவா திங்க்போன் மாடல்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470