என்னப்பா சொல்றீங்க? Moto G72-ல இப்படி ஒரு Camera--வா? எப்போ அறிமுகம்?

|

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி72 (Moto G72) எனும் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இணையத்தில் கசிந்த தகவலின்படி, வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மோட்டோ ஜி72

மோட்டோ ஜி72

டிப்ஸ்டர் Paras Guglani வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட்விலையில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

 ட்ரிபிள் ரியர் கேமரா வசதி

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில் 48எம்பி பிரைமரி கேமரா உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி72 மாடல். குறிப்பாகஇந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..

 ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் உள்ளன.பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ போன்.

இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..

 50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ போன்.

Best Mobiles in India

English summary
Moto G72 smartphone to launch in India in September: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X