மொத்த போனுக்கும் குட்-பை: ரூ.10,000 பிரிவில் 5ஜி ஆதரவோடு வரும் Moto G53 ஸ்மார்ட்போன்!

|

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலாவின் மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உலகளாவிய மாறுபாடு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டோ ஸ்மார்ட்போனானது BIS India, FCC மற்றும் TDRA உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் தளங்களில் தோன்றி இருக்கிறது.

மொத்த போனுக்கும் குட்-பை: ரூ.10,000 பிரிவில் 5ஜி ஆதரவோடு Moto G53!

Moto G53 5G

அதன்படி Global Certification Forum தளத்தில் XT2335-1 என்ற மாடல் எண் உடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் தோன்றி இருக்கிறது. இந்த மாடல் எண் மோட்டோ ஜி53 இன் உலகளாவிய பதிப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சான்றிதழ் தளத்தில் தோன்றியதன் மூலம் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் உலகளவில் விரைவில் வெளியாக இருப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் தோன்றிய ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி53 தானா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

பல சக்தி வாய்ந்த அம்சங்கள்

மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவலை பார்க்கலாம். பட்ஜெட் விலையில் Moto G53 5G கிடைக்கிறது என்றாலும் இதில் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சக்தி வாய்ந்த அம்சங்கள் இருக்கிறது. இதில் கவனிக்கத்தக் விஷயம் பட்ஜெட் விலையில் 5ஜி போன் என்பது தான்.

6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே

Motorola Moto G53 5ஜி ஸ்மார்ட்போனானது 720 X 1,600 பிக்சல்கள் தீர்மானத்துடனான 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 720 பிக்சல் திர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இந்த பட்ஜெட் விலை Moto G53 5G ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

50 எம்பி பிரதான கேமரா

மோட்டோ அறிமுகம் செய்த இந்த ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என 8 எம்பி கேமரா முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செல்பி கேமரா ஃபேஸ் அன்லாக் ஆதரவுக்காகவும் செயல்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு என 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி ஆதரவும் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 183 கிராம் ஆகும். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MyUI 5.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஐபி52 மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது.

மொத்த போனுக்கும் குட்-பை: ரூ.10,000 பிரிவில் 5ஜி ஆதரவோடு Moto G53!

மோட்டோ ஜி53 5ஜி விலை

மோட்டோ ஜி53 5ஜி இன் நிர்ணய விலை குறித்து பார்க்கையில், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 899 (தோராயமாக ரூ.10,500) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,099 (தோராயமாக ரூ.13,000) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அமோக வரவேற்பு

மோட்டோரோலாவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் உலகளவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே விலைப்பிரிவில் 5ஜி ஆதரவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யும்பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto G53 Launching Soon Globally: Might be the Best 5G smartphone available at Rs.10,000 Price Range

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X