பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்ததா எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்: விமர்சனம்.!

|

எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் பல ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது

நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது

அதன்படி அண்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பு
பெற்றுள்ளது. அதாவது பட்ஜெட் விலையில் அதிநவீன மென்பொருள் வசதி, சிறந்த கேமராக்கள் மற்றம் சிறந்த தரம் உடன் வெளிவந்துள்ளது.கண்டிப்பாக வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கும், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஐடி ஊழியர்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன்மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

6.6-இன்ச் எச்டி பிளஸ் Notch டிஸ்பிளே

6.6-இன்ச் எச்டி பிளஸ் Notch டிஸ்பிளே

எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் Notch டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1520 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக எல்ஜி நிறுவனம் இரண்டு வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் ஒன் டைம் இலவச ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்டையும் வழங்குகிறது.

க்ரே மற்றும் க்ரீன்

க்ரே மற்றும் க்ரீன்

எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆனது மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் இப்போது பிளிப்கார்ட் மூலம் பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கும். இது க்ரே மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வருகிறது. அதேபோல் இந்த சாதனத்ன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

 மீடியாடெக் எம்டி6762 சிப்செட் வசதி

மீடியாடெக் எம்டி6762 சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6762 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்தளத்தை சார்ந்த LG UX OS வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அமேசான் நிறுவனத்தின் வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்: என்னென்ன பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கும்?அமேசான் நிறுவனத்தின் வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்: என்னென்ன பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கும்?

இராணுவ தர MIL-STD-810G சான்றளிக்கப்பட்ட

மேலும் குவாட் ரியர் கேமராக்கள், சிறந்த மென்பொருள் வசதி மற்றும் இராணுவ தர MIL-STD-810G சான்றளிக்கப்பட்டகட்டமைப்போடு வருகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 13எம்பி மெயின் கேமரா

13எம்பி மெயின் கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 5எம்பி சூப்பர்வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அதிர்வு, அதிர்ச்சி மற்றும் ஈரப்பதம்

குறிப்பாக இந்த சாதனம் உயர் மற்றும் குறைந்த வெப்பநிலை, அதிர்வு, அதிர்ச்சி மற்றும் ஈரப்பதம் உள்ளிட்ட அமெரிக்க இராணுவ பாதுகாப்பு தர சோதனைகளின் ஒன்பது வெவ்வேறு வகைகளை கடந்ததாக் கூறப்படுகிறது.


இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஒரு ஃப்ளாஷ் ஜம்ப் கட் அம்சம் உள்ளது. இது சில இடைவெளிகளுடன் நான்கு ஸ்டில் படங்களை எடுக்க கேமராவை அனுமதிக்கிறது. மேலும் சென்சார்கள் படங்களை எப்போது கைப்பற்றுகிறது என்பதைக் குறிக்க ஃபிளாஷ் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புளூடூத் 5.0, மைக்ரோ

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்/ க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் AI கேம் அம்சமும் உள்ளது, இது செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 3டி சவுண்ட் எஞ்சின் இடம்பெற்றுள்ளது மற்றும் இது பிரத்யே கூகுள் அசிஸ்டென்டபட்டனையும் கொண்டுள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.10,990-ஆக உள்ளது.

பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை தேடும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். அதேபோல் இந்நிறுவனம் இந்த ஆண்டு பல அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG K42 Review In Tamil Camera Battery Price Availability Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X