Home
News

ஆடிப்போன இஸ்ரேல் அரசு.. மோடி போட்ட 17 கையெழுத்து.. அதுல ஒன்னு உலகமகா அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது "வரலாற்று சிறப்புமிக்க" இஸ்ரேல் நாட்டு பயணத்தில், இன்னொரு "சிறப்பான தரமான சம்பவத்தை" செய்து உள்ளார். இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் கூட்டாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட யுபிஐ (UPI) சேவையானது இஸ்ரேலில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ சேவையின் எல்லை தாண்டிய பயன்பாட்டை செயல்படுத்துவதன் மூலம், இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் டிஜிட்டல் மற்றும் நிதி கூட்டாண்மையை ஆழப்படுத்துவதாக அறிவித்தன.

ஆடிப்போன இஸ்ரேல் அரசு.. மோடி போட்ட 17 கையெழுத்து!

இஸ்ரேலில் யுபிஐ சேவை நடைமுறைக்கு வாரும்போது, இரு நாடுகளிலும் உள்ள வணிகங்கள் எளிமைப்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய கட்டணங்களால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பரிவர்த்தனை செலவுகள் (transaction costs) மற்றும் செட்டில்மென்ட் நேரங்களை (settlement times) குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில் யுபிஐ அறிமுகம் குறித்து பிரதமர் மோடி என்ன சொன்னார்? நாங்கள் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நிறுவ முடிவு செய்துள்ளோம். இது ஏஐ, குவாண்டம் மற்றும் முக்கியமான கனிமங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் இஸ்ரேலில் யுபிஐ பயன்பாட்டிற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பிரதமர் கூறினார்.

சிவில் அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் எங்கள் பணிகளை மேலும் மேம்படுத்துவோம். ஒன்றாக சேர்ந்து எதிர்காலத்திற்கு தயாராக - விவசாய தீர்வுகளையும் உருவாக்குவோம். சிறந்த கிராமங்களை உருவாக்குவதில் நாங்கள் பணியாற்றுவோம் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உலகளாவிய வணிகத்தில் யுபிஐ எவ்வாறு உதவும்? இரு நாடுகளுக்கும் இடையிலான யுபிஐ சேவையை, எல்லை தாண்டிய முறையில் செயல்படுத்துவதுன் மூலம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை விரைவாகவும் மலிவாகவும் செய்ய முடியும். இதற்காக இஸ்ரேலின் உள்நாட்டு கட்டண கட்டமைப்பு ஆனது இந்தியாவுடன் இணைக்கப்படும்.

இது ஏன் பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல் பயணமாக பார்க்கப்படுகிறது? இஸ்ரேலில் யுபிஐ சேவை அறிமுகமாகும் என்கிற முடிவுடன் வர்த்தகம், டிஜிட்டல் அமைப்புகள், விவசாயம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தங்களின் தொகுப்பும் இருந்தது, ஏனெனில் மோடியின் இந்த பயணம் புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள உறவுகளை வலுப்படுத்துகிறது.

இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் "காலத்தால் சோதிக்கப்பட்ட" உறவை ஒரு சிறப்பு மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது ஊடக அறிக்கையில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் நேரடியாக தொடர்புடையவை என்று கூறினார்

மேலும் காசாவில் உள்ள மோதலுக்கு அமைதியான தீர்வு காண புது தில்லி முயற்சித்து வருவதாகவும் வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. இரு பிரதமர்களுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, கலாச்சாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் மற்றும் பல துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை வழங்கும் மொத்தம் 17 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டன.

Best Mobiles in India

English summary
UPI in Israel PM Modi Govt to enable cross border use make digital transactions faster and cheap
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X