இது தெரியாம போச்சே.! இப்படி ஒரு Infinix போன் வரும்னு யாருமே சொல்லலையேப்பா.! ச்ச.!

|

கடந்த மாதம் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 (Infinix Zero 20) மற்றும் இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix Zero Ultra) என இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய இன்ஃபினிக்ஸ் நிறுவனம், மேலும் 2 புதிய ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கின்றது.

புதிதாக அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சந்தையில் விற்பனையாகி வரும் இன்ஃபினிக்ஸ் நோட் 12i (Infinix Note 12i) மற்றும் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி (Infinix Zero 5G) ஆகியவற்றின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்கள் இன்ஃபினிக்ஸ் நோட் 12ஐ 2022 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 என்று பெயர் பெற்றுள்ளது.

இது தெரியாம போச்சே.! இப்படி ஒரு Infinix போன் வரும்னு யாருமே சொல்லலையே!

புதுப்பிக்கப்பட்ட இன்ஃபினிக்ஸ் நோட் 12i 2022 ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ G85 ப்ராசஸரால் (MediaTek Helio G85 Processor) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுக்கு பதிலாக AMOLED டிஸ்பிளே மற்றும் 33W அதிவேக சார்ஜிங் ஆகிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இன்ஃபினிக்ஸ் நோட் 12i 2022 ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல, இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மேம்படுத்தப்பட்ட மீடியா டெக் டைமண்சிட்டி 1080 சிப்செட்டால் (MediaTek Dimensity 1080 Chip Set) உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் இன்ஃபினிட்டி 5ஜி பதிப்பு ஸ்மார்ட்போன் டைமண்சிட்டி 900 சிப் செட்டால் (Dimensity 900 chipset) உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, இந்த 2 ஸ்மார்ட்போன்களின் மற்ற அம்சங்களைப் பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இது தெரியாம போச்சே.! இப்படி ஒரு Infinix போன் வரும்னு யாருமே சொல்லலையே!
இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 ஸ்மார்ட் போனின் அம்சங்கள்

மேலே கூறியது போல மாலி G68 GPU-வால் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் மீடியாடெக் டைமெண்சிட்டி 1080 ப்ராசசரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் 8GB RAM மற்றும் 256 GB சேமிப்பு அம்சத்துடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ரய்டு 12 OS-ஆல் இயக்கப்படுகிறது.

இது 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Brightness), 6.78' இன்ச் முழு HD+ ஆகிய அம்சங்கள் கொண்டு வரும் டிஸ்பிளேவின் நடுவில் செல்ஃபி கேமராவிற்கான பன்ச் ஹோல் நாட்ச் (Punch Hole Notch) அம்சத்தை கொண்டுள்ளது. இது 16 MP செல்ஃபி கேமராவுடன் வரும், இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது.

இதில் 50 MP ப்ரைமரி ஷூட்டர் (Primary Shooter), 2MP டெப்த் சென்சார் (Depth Sensor) மற்றும் 2MP மேக்ரோ சென்சார் (Macro Sensor) ஆகியவை உள்ளது. போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் வசதியும் உள்ளது. மேலும், பிரத்தியேகமான மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக்கும் உள்ளது. இந்த இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 ஸ்மார்ட்போனிற்கு சக்தியூட்ட 33W அதிவேக பாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்ட 5000 mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் நோட் 12i 2022 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்
இது 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.7' இன்ச் கொண்ட முழு HD+ உடைய AMOLED டிஸ்பிளேவின் நடுவில் செல்ஃபி கேமராவிற்கான பன்ச் ஹோல் நாட்ச் உடன் வருகிறது. இது 8 MP செல்ஃபி கேமராவுடன் வரும், இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது. 50 MP ப்ரைமரி ஷூட்டர், 2MP டெப்த் சென்சார் மற்றும் QVGA AI லென்ஸ் ஆகியவை உள்ளது. போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் மற்றும் கீழ்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதியும் உள்ளது.

இந்த டிவைஸ் மாலி G52 GPU மூலம் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசசரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ரய்டு 12 XOS 10.6-ஆல் இயக்கப்படுகிறது. இந்த இன்ஃபினிக்ஸ் நோட் 12ஐ 2022 ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்ட 5000 mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix Zero 5G 2023 and Infinix Note 12i 2022 Coming To India This Month At Budget Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X