4ஜிபி ரேமோடு மிகக் குறைந்த விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 10!

|

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியோடு மிகக் குறைந்த விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 10 புதிய வேரியண்ட் இன்று அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10

இன்பினிக்ஸ் ஹாட் 10

இன்பினிக்ஸ் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 10 இன் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்கிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும். இந்த சாதனம் முன்னதாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என ஒரே வேரியண்டில் ரூ.9,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

6 ஜிபி ரேம் வேரியண்ட்

6 ஜிபி ரேம் வேரியண்ட்

இப்போது அறிமுகமான ஸ்மார்ட்போனின் விலை இன்பினிக்ஸ் ஹாட் 10 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை விட மலிவானதாக இருக்கும். ரூ.10,000-க்கு குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போனில் இன்பினிக்ஸ் அதிகம் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். 4ஜிபி ரேம் மிக குறைந்த விலையில் இருக்கும் எனவும் இந்திய சந்தையில் அதிகம் விற்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10: அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 10: அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 10 6.78 இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் HD+ 1640x720 தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேயின் மேல் இடது மூலையில் 8 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபிளாஷ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 70 செயலி மூலம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது.

Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 குவாட் கேமரா அமைப்பில் 16 எம்பி பிரைமரி ஷூட்டர், 2 எம்பி ஆழ சென்சார், 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் ஏஎல் லென்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கேமராக்களுடன் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இந்த கேமரா அமைப்பு ஒரு செவ்வக வடிவத்தை கொடுக்கப்பட்டுள்ளது.

5200 mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங்

5200 mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங்

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது. சாதனத்தில் சேமிப்பிடத்தை விரிவாக்க மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. சாதனத்தின் மற்றொரு அம்சம் 5200 mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. சாதனம் Android 10 அடிப்படையிலான XOS 7.0 இல் இயங்குகிறது. சாதனத்தில் சிறப்பு ஆடியோ ஜாக் அம்சமும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 10 4GB RAM Variant Smartphone Will be Launched in India: Here the Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X