Home
Mobile

OPPO அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. 7050mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra specifications): 6.82-இன்ச் குவாட் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 3168 × 1440 பிக்சல்ஸ், டால்பி விஷன், PWM டிம்மிங், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate),கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

OPPO அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ColorOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

200எம்பி Sony Lytia-901 மெயின் சென்சார் + 50எம்பி Sony LYT-600 அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி OmniVision OV52A டெலிபோட்டோ கேமரா + 50எம்பி Samsung JNL 10x பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 8கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். அதேபோல் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor)போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் இந்த போனில் உள்ளன. 5ஜி, வைஃபை 7, புளூடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

OPPO அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

7050எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா விலை

  • 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மாடலின் விலை 7,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,02,855)
  • 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மாடலின் விலை 7,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,09,700)
  • 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மாடலின் விலை 8,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,16,575)
  • 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மாடலின் விலை 9,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,27,550)
  • 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Satellite Communication Edition) மாடலின் விலை 9,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,30,280)
  • 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Satellite Communication Hasselblad Earth Explorer Kit) மாடலின் விலை 11,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,64,545)
  • வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Ultra with 7050mAh battery launched in China: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X