Google pixel 6a அறிமுகம்: இதை வாங்கினால் உங்க பாதுகாப்புக்கு இவுங்க கேரண்டி!

|

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. அது Google pixel 6a ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமராக்கள், டென்சர் சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்த்துவிட்டு வாங்கலாமா, வேண்டாமா, என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

சிறிய தாமதத்திற்கு பிறகு அறிமுகமான பிக்சல் 6ஏ

சிறிய தாமதத்திற்கு பிறகு அறிமுகமான பிக்சல் 6ஏ

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதேபோல் கூகுள் பிக்சல் 4ஏ ஆகஸ்ட் 2020-லும், கூகுள் பிக்சல் 5 ஜனவரி 2022-லும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் சிறிய தாமதத்திற்கு பிறகு தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

பிரத்யேக கேமரா வைசர் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம்

பிரத்யேக கேமரா வைசர் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனானது முதன்முறையாக 2022 கூகுள் I/O டெவலப்பர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் கூகுள் பிக்சல் 6ஏ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரத்யேக கேமரா வைசர் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப விலை என்ன தெரியுமா?

ஆரம்ப விலை என்ன தெரியுமா?

கூகுளின் இன்-ஹவுஸ் பயன்பாடான டென்சர் சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.43,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதை சலுகையுடன் குறைந்த விலையில் வாங்குவதற்கு வழிகள் இருக்கிறது.

Google பிக்சல் 6A விலை மற்றும் சலுகைகள்

Google பிக்சல் 6A விலை மற்றும் சலுகைகள்

Google பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. இதன் இந்திய விலை ரூ.43,999 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.39,999 என்ற விலையில் முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம். அவ்வளவுதானா என்றால் அதுதான் இல்லை கூடுதல் சலுகையும் இருக்கிறது.

இப்படி வாங்கினால் இன்னும் அதிக தள்ளுபடி

இப்படி வாங்கினால் இன்னும் அதிக தள்ளுபடி

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை ஆக்சிஸ் பேங்க் கார்ட்களின் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் போதும் ரூ.4000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்னும் குறைந்த விலையில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அதற்கும் வழிகள் இருக்கிறது.

கூடுதலாக வழங்கப்படும் எக்ஸ்சேஞ்ச் சலுகை

கூடுதலாக வழங்கப்படும் எக்ஸ்சேஞ்ச் சலுகை

முந்தை மாடல் பிக்சல் ஸ்மார்ட்போன் அல்லது பிற தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.6000 வரையிலான சலுகையைப் பெறலாம். பிற அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ரூ.2000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கிடைக்கும். இந்த சிறப்பு சலுகை எத்தனை நாள் என்ற விவரம் இதுவரை வெளியாக வில்லை. ஜூலை 28 முதல் இந்த ஸ்மார்டோபனின் ஓபன் சேல் உடனான ஆர்டர் தொடரும்.

பிக்சல் 6ஏ உடன் இதை வாங்கினால் அனைத்தும் ரொம்ப கம்மி

பிக்சல் 6ஏ உடன் இதை வாங்கினால் அனைத்தும் ரொம்ப கம்மி

Google Pixel 6a ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் ஜூலை 28 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. அது Charcoal மற்றும் Chalk வண்ணங்கள் ஆகும். பயனர்கள் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் உடன் கூகுள் நெஸ்ட் ஹப் 2, பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸ் மற்றும் ஃபிட்பிட் இன்ஸ்பைர் 2 ஆகிய சாதனங்களை ரூ.4,499 என்ற விலையில் வாங்கலாம்.

கூகுள் பிக்சல் 6ஏ சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

கூகுள் பிக்சல் 6ஏ சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

கூகுள் பிக்சல் 6ஏ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

அதீத பாதுகாப்புடன் ஒவ்வொரு விஷயமும்

அதீத பாதுகாப்புடன் ஒவ்வொரு விஷயமும்

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது இன்-ஹவுஸ் டென்சர் சிப் மூலம் இயக்கப்படுகிறது. Google Pixel 6a ஆனது உள்ளமைக்கப்பட்ட டைட்டன் எம்2 பாதுகாப்பு சிப் வசதியைக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் பாதுகாப்பு என்பதற்கு ஆதாரமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதாவது இதில் பொருத்தப்பட்டுள்ள சிப் வசதி மூலம் உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் குறியீடுகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

டூயல் 12 எம்பி ரியர் கேமரா ஆதரவுகள்

டூயல் 12 எம்பி ரியர் கேமரா ஆதரவுகள்

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் 4410 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. கேமரா அம்சங்களை பொறுத்த வரை, கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 12 எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது.

புகுந்து விளையாட வைக்கும் கேமரா அம்சங்கள்

புகுந்து விளையாட வைக்கும் கேமரா அம்சங்கள்

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில், கேமரா மேஜிக் எரேஷர், ரியர் டோன், ஃபேஸ் அன்ப்ளர், டாப் ஷாட், டூயல் எக்ஸ்போஷர் கன்ட்ரோல்ஸ் என பல அம்சங்கள் இருக்கிறது. Google Pixel 6a ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் வி5.2, கூகுள் கேஸ்ட், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் என பல ஆதரவுகள் இருக்கிறது.

Pic Courtesy: Google

Best Mobiles in India

English summary
Google pixel 6a Smartphone Launched in india with Exclusive security feature

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X