சீன நிறுவனத்தின் வியாபார தந்திரம்.. சரியான நேரத்தில் பிரபல Redmi போன் மீது தரமான விலைக்குறைப்பு!

|

சீன நிறுவனமான சியோமி (Xiaomi), அதன் பிரபலமான ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலைக்குறைப்பை (Price Cut) அறிவித்துள்ளது.

உண்மையில் இது ஓரு பொங்கல் சலுகை (Pongal Offer) அல்ல, சீன நிறுவனமான சியோமியின் வியாபார தந்திரம் ஆகும். அதென்ன தந்திரம்? ரெட்மியின் எந்த ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பை பெற்றுள்ளது? இதோ விவரங்கள்:

சீன நிறுவனத்தின் வியாபார தந்திரம்!

சீன நிறுவனத்தின் வியாபார தந்திரம்!

சீன நிறுவனமான சியோமி, இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ரெட்மி 11 ப்ரைம் (Redmi 11 Prime) மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பொங்கல் பண்டிகை காலத்தில் வருவதால், சிலர் இதை ஒரு பொங்கல் சலுகை என்று நினைக்லாம்.

ஆனால் உண்மை என்னவென்றால்.. இதுவொரு வியாபார தந்திரம் ஆகும். ஏனென்றால், சமீபத்தில் தான் ரெட்மி நோட் 12 சீரிஸ் (Redmi Note 12 Series) ஸ்மார்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது.

ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான வேகத்தில் பழைய ரெட்மி 11 ப்ரைம் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!

ரெட்மி 11 ப்ரைம்: பழைய விலை VS புதிய விலை:

ரெட்மி 11 ப்ரைம்: பழைய விலை VS புதிய விலை:

ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடக்கிறது மற்றும் அந்த இரண்டின் மீதுமே ரூ.1,000 விலைக்குறைப்பு கிடைக்கிறது!

இந்த விலைக்குறைப்பிற்கு முன்னர், ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போனின் 4GB + 64GB மற்றும் 6GB + 128GB வேரியண்ட்கள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,999 க்கு வாங்க கிடைத்தன. இனிமேல் ரூ.11,999 மற்றும் ரூ.13,999 வாங்க கிடைக்கும்.

ரூ.11,999-க்கு ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ?

ரூ.11,999-க்கு ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ?

கண்டிப்பாக! அறிமுகம் செய்யப்பட்டு 1 ஆண்டு ஆகிவிட்டது என்றாலும் கூட ரெட்மி 11 ப்ரைம் ஆனது ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் (Best Phone Under Rs.15,000) ஒன்றாகவே உள்ளது.

அம்சங்களை பொறுத்தவரை, இது 6.58-இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயங்குகிறது. அதாவது இதுவொரு 4ஜி ஸ்மார்ட்போன் (4G Phone) ஆகும்.

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

கேமராக்கள் எப்படி.. என்ன பேட்டரி?

கேமராக்கள் எப்படி.. என்ன பேட்டரி?

டூயல் சிம் ஆதரவுடன் வரும் ரெட்மி 11 ப்ரைம் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50MP மெயின் சென்சார் + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 8MP செல்பீ கேமரா உள்ளது.

பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ஜியோவுடன் சேர்ந்து ட்ரூ 5ஜி!

ஜியோவுடன் சேர்ந்து ட்ரூ 5ஜி!

சியோமி நிறுவனத்தை பற்றிய மற்ற செய்திகளை பொறுத்தவரை, இது ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு சேர்ந்தது அதன் சில ஸ்மார்ட்போன்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி (Jio True 5G) நெட்வொர்க் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த கூட்டணியின் கீழ், 5ஜி சேவைகள் அறிமுகமான நகரங்களில் உள்ள.. 5ஜி ஆதரவுடன் அறிமுகமான பெரும்பாலான சியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கும் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் அணுக கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Chinese Mobile Company Xiaomi Announced Rs 1000 Price Cut On Redmi 11 Prime Check New Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X