வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒரு சமீபத்திய நடவடிக்கையின் விளைவாக, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் சில பயனர்கள் "ஒரு வகையான" வயிற்று எரிச்சலில் உள்ளனர் என்றே கூறலாம்.

அதென்ன வயிற்று எரிச்சல்? தனது சொந்த வாடிக்கையாளர்களையே "கடுப்பேற்றும்" அளவிற்கு OnePlus நிறுவனம் அப்படி என்ன செய்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை!

2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை!

மிகவும் குறுகிய காலத்தில், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக மாறி உள்ளது - ஒன்பிளஸ்!

2020 ஆம் ஆண்டுக்கு முன் வரை, பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மாட்போன்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்த சீன நிறுவனம், 2020 ஆம் ஆண்டில் மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களையும் (ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ்) அறிமுகம் செய்ய தொடங்கியது.

தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!

ஆனாலும்?

ஆனாலும்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கீழ் வெளியான நோர்ட் சீரிஸ் மாடல்கள் ஆனது "பெயரளவில்" மட்டுமே பட்ஜெட் போன்களாக இருந்தன. அதாவது அவைகள் சியோமி, ரியல்மி, ரெட்மி போன்ற "உண்மையான" பட்ஜெட் விலை மாடல்களுக்கு இணையாக இறங்கி வரவில்லை!

ஆகையால், ஒன்பிளஸை வாங்க முடிவு செய்யும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் ப்ரீமியம் மற்றும் பிளாக்ஷிப் மாடல்களையே தேர்வு செய்து வருகின்றனர்.

நீங்களும் ஒரு ஒன்பிளஸ் போன் யூசரா?

நீங்களும் ஒரு ஒன்பிளஸ் போன் யூசரா?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சீரீஸ் மாடல்களை வாங்க பிடிக்காமல் நம்பர் சீரீஸ் மாடல்களை (அதாவது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 9 மற்றும் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 10 சீரீஸ் மாடல்களை) வாங்கியவர்களில் நீங்களும் ஒருவரா?

ஆம் என்றால், நீங்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் குறிப்பாக, லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 10 சீரீஸை வாங்கி இருந்தால்.. உங்களுக்கு வயிற்று எரிச்சல் கூட உண்டாகலாம்!

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

அப்படி என்ன தகவல்கள் வெளியாகி உள்ளது!

அப்படி என்ன தகவல்கள் வெளியாகி உள்ளது!

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் அனைத்துமே, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 11 மாடலை (OnePlus 11) பற்றியது தான். இதில் பொறாமை கொள்ளவும், வயிற்று எரிச்சல் அடையவும் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

இருக்கிறது!

ஒன்பிளஸ் 11-இல் இடம்பெறவுள்ள அம்சங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டால்.. ":அடச்சே! இதுக்கு முன்னாடி வந்த ஒன்பிளஸ் போன்களை அவசரப்பட்டு வாங்கிட்டோமோ.. கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாமோ!" என்று நிச்சயம் யோசிப்பீர்கள்!

ஏனென்றால்.. ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, ப்ராசஸர், ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா என எல்லாமே... வேறொரு உச்சத்திற்கு செல்ல உள்ளன!

அப்படி என்ன அம்சங்கள்

அப்படி என்ன அம்சங்கள்"?

வரவிருக்கும் OnePlus 11 ஆனது குவால்காமின் முற்றிலும் புதிய சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற எல்லா ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை விடவும் மேம்பட்டதாகவும், வேகமானதாகவும் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 2-வை பேக் செய்யலாம் என்று கூறப்படுகிறது!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

2கே டிஸ்பிளே!

2கே டிஸ்பிளே!

மேலும் ஒன்பிளஸ் 11-இல் "முன்னெப்போதும் இல்லாத அளவிலான" சிறந்த டிஸ்ப்ளேவும் இடம்பெற உள்ளது போல் தெரிகிறது.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இது 6.7-இன்ச் LTPO கர்வ்டு டிஸ்பிளேவுடன் வரலாம். சில லீக்ஸ் தகவல்கள் ஆனது, இதுவொரு AMOLED 2K டிஸ்பிளேவாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.

100W ஃபாஸ்ட் சார்ஜிங்!

100W ஃபாஸ்ட் சார்ஜிங்!

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh டூயல்-செல் பேட்டரியை பேக் செய்யலாம் என்றும், அது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டிருக்கும் என்கிற தகவலும் கூட கிடைத்துள்ளது.

போதாக்குறைக்கு, இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் கேமராக்களுடன் போட்டி!

ஆப்பிள் கேமராக்களுடன் போட்டி!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் கேமரா துறையில் சில பெரிய மேம்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில், இந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிட தயார் ஆகிவருவதாக சில தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன் விளைவாக ஒன்பிளஸ் 11-இல் 50MP மெயின் சென்சார் + 48MP இரண்டாம் நிலை கேமரா + 32MP மூன்றாம் நிலை கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்.. கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது தானே?

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

எப்போது அறிமுகமாகும்?

எப்போது அறிமுகமாகும்?

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் "ப்ரோ லெவல்" அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான தேதி குறித்த விவரங்கள் எதுவும் இல்லை!

Best Mobiles in India

English summary
Avoid buying 2022 flagship smartphones because OnePlus 11 specifications are totally pro level

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X