ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!

|

இந்தியாவில் வருகிற ஜனவரி 23 ஆம் தேதியன்று, ஆசையை தூண்டும் விலை நிர்ணயம் மற்றும் ஆர்டர் போட வைக்கும் அம்சங்களுடன், இரண்டு மாஸ் ஆன 5ஜி ஸ்மார்ட்போன்கள் (5G Smartphones) அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

இரண்டுமே ஒரே நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆகும்!

இரண்டுமே ஒரே நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆகும்!

வருகிற ஜனவரி 18 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் (Samsung) நிறுவனத்தின் மாடல்கள் ஆகும்.

அது - சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ஆகும்.

இந்த இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்று பட்ஜெட் வாசிகளை குறிவைக்கும் விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மற்றொன்று 'பவர்-பேக்டு' 5ஜி ஸ்மார்ட்போனாக வெளியாக உள்ளது!

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

ஆசையை தூண்டும் விலை!

ஆசையை தூண்டும் விலை!

சாம்சங்கின் கேலக்ஸி ஏ14 5ஜி மாடல் தான் ஆசையை தூண்டும் விலை நிர்ணயத்தின் கீழ் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் (Storage Options) கீழ் வெளியாகவும்

அதாவது இது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டரோஜ், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் கீழ் அறிமுகமாகும்; இவைகளின் விலை நிர்ணயம் முறையே ரூ.16,499, ரூ..19,499 மற்றும் ரூ.21,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

- 6.6-இன்ச் அளவிலான FHD+ IPS LCD டிஸ்பிளே
- அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவு
- டிஸ்பிளேவில் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன்
- அதில் 13எம்பி செல்பீ கேமரா
- பின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- அதில் 50MP + 2MP மேக்ரோ + 2MP டெப்த் கேமரா
- மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசஸர்
- 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் உடனான 64ஜிபி அல்லது 128ஜிபி அளவிலான ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 5.0
- 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரி

தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

- 6.6 இன்ச் ஃபுல் HD+ டிஸ்பிளே
- அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவு
- 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவு
- ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- குவாட் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50MP + 5MP அல்ட்ராவைடு + 2MP டெப்த் + 2MP மேக்ரோ கேமரா
- முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமரா
- பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரி

கேலக்ஸி ஏ23 5ஜி-யின் விலை நிர்ணயம் என்ன?

கேலக்ஸி ஏ23 5ஜி-யின் விலை நிர்ணயம் என்ன?

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.19,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை உங்களுக்கு 5ஜி போன் வாங்கும் எண்ணம் இல்லை என்றால், தொடர்ந்து 4ஜி சேவையையே பயன்படுத்த திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால்.. சமீபத்தில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ04 (Samsung Galaxy A04) ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம்

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ04: விலை மற்றும் முக்கிய அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ04: விலை மற்றும் முக்கிய அம்சங்கள்:

இது சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இதன் விலை ரூ.9,299 ஆகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட், ரேம் பிளஸ் (RAM Plus) அம்சத்துடன் 8ஜிபி வரையிலான ரேம் போன்றவைகளை கொண்டுள்ளது.

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
2 New Samsung 5G Smartphones Launching In India on January 18 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X