Telegram ஆப்ஸ் உங்ககிட்ட இருக்கா? அப்போ இதை நீங்க யூஸ் செய்யாட்டி டோட்டல் வேஸ்ட்.!

|

ஸ்மார்ட் போனின் (smartphone) வரவுக்குப் பிறகு மக்கள் பல்வேறு செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஒரே மொபைல் ஆப்ஸ் (mobile apps) பல வேலைகளைச் செய்யும் அளவிற்கு மேம்பட்ட திறமையுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு, வெறும் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆப்பில் (WhatsApp) இப்போது வீடியோ கால் பேசுவது தொடங்கி பணம் அனுப்புவது வரை பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது போல தான் டெலெக்ராம் (Telegram) ஆப்ஸும்.

உங்க போன்ல டெலெக்ராம் இருக்கா? அப்போ இதைலாம் கவனிச்சீங்களா?

உங்க போன்ல டெலெக்ராம் இருக்கா? அப்போ இதைலாம் கவனிச்சீங்களா?

வாட்ஸ் ஆப்பிற்கு இணையாக உருவாக்கப்பட்ட ஒரு செயலி தான் டெலிக்ராம் (Telegram).

பெரும்பாளான பயனர்கள் இதனைத் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தினாலும், வாட்ஸ்ஆப்பை போலவே இதிலும் செய்தி அனுப்புவது, புகைப்படங்களைப் பாதுகாப்பான முறையில் பகிர்வது, வீடியோ கால் பேசுவது என்று அனைத்து அம்சங்களும் உள்ளது.

டெலிகிராமில் இருக்கும் பெஸ்டானா Bot அம்சம்.!

டெலிகிராமில் இருக்கும் பெஸ்டானா Bot அம்சம்.!

வாட்ஸ் ஆப்பில் இல்லாத சில அம்சங்கள் கூட இந்த டெலிகிராமில் இருக்குணு சொன்னா நம்புவீங்களா? அப்படி என்ன அம்சங்கள்ணு தானே யோசிக்கிறீங்க? வாங்க பார்க்கலாம்.

டெலிகிராமில் இருக்கும் பல அம்சங்களில் ஒன்று அதில் பயன்படுத்தக்கூடிய பாட்-கள் (Bot).

அதாவது, மனிதனுக்குப் பதிலாக ஒரு ரோபோட் உங்களுக்குத் தேவையான வேலையைச் செய்து முடிக்கும். அப்படி, டெலிகிராம் செயலியின் உள்ள சிறப்பான பாட் அம்சங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்க போனை சர்வீஸ்-க்கு தரப்போறீங்களா? இதை செஞ்சுட்டு கொடுங்க.! இல்லாட்டி ரிஸ்க் ஜாஸ்தி.!உங்க போனை சர்வீஸ்-க்கு தரப்போறீங்களா? இதை செஞ்சுட்டு கொடுங்க.! இல்லாட்டி ரிஸ்க் ஜாஸ்தி.!

சாட் GPT (Chat GPT) - @ChatGPT_ERC_BOT

சாட் GPT (Chat GPT) - @ChatGPT_ERC_BOT

இந்த பாட் அம்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் எழுத்தை தொழிலாக வைத்திருப்பவருக்கு ஒரு வரம்ணே சொல்லலாம்.

நீங்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் இதில் பதில் கிடைக்கும். அதற்கு முதலில் ஒரு க்ரூபை உருவாக்கி, அதில் இந்த சாட் GPT பாட்டை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதனிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றால் /chat என்று டைப் செய்து; உங்களது கேள்வியை கேட்கலாம்.

உங்களுக்கு பெரிய கட்டுரை எழுதணுமா? இனி நீங்க டைப் செய்ய வேண்டாம்.. பாட் செய்யும்.!

உங்களுக்கு பெரிய கட்டுரை எழுதணுமா? இனி நீங்க டைப் செய்ய வேண்டாம்.. பாட் செய்யும்.!

கேள்வி கேட்பது மட்டுமின்றி நீங்கள் அதற்குக் கட்டளைகளையும் இடலாம்.

உதாரணமாக, /chat Write an one page article about pythagoras theorem என்று டைப் செய்து அந்த க்ரூப்பில் அனுப்பினால், அடுத்த சில நொடிகளின் நீங்கல் கேட்ட பதிவு உங்களுக்கு அனுப்பப்படும்.

கட்டுரைகள் மட்டுமின்றி உங்களுக்குத் தேவைப்பட்ட புகைப்படங்களையும் கேட்டு வாங்கலாம்.

நீங்க சூப்பர்மேன் மாதிரி பறக்கணுமா? அப்போ இந்த கிரகத்திற்கு தான் போகணும்.!நீங்க சூப்பர்மேன் மாதிரி பறக்கணுமா? அப்போ இந்த கிரகத்திற்கு தான் போகணும்.!

இனி கூகுளை சர்ச் செய்யாதீங்க.. இப்படி சர்ச் செய்து பாருங்க.!

இனி கூகுளை சர்ச் செய்யாதீங்க.. இப்படி சர்ச் செய்து பாருங்க.!

/image என்று ட்டைப் செய்து உங்களுக்குத் தேவைப்படும் புகைப்படத்துடைய குறிப்பைக் கொடுக்கலாம்.

உதாரணமாக, /image Rajinikanth standing in front of Tajmahal என்று செய்தி அனுப்பினால், அந்த புகைப்படம் உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த பாட் அம்சத்தைப் பயன்படுத்தி எந்த தலைப்பிலும் கட்டுரையோ அல்லது புகைப்படமோ பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், ஆங்கிலத்தில் மட்டும் தான்.அப்புறம் என்ன, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வேலை மிட்சம்.

ட்ரூ காலர் பாட் (Truecaller Bot) - @XTZ_TruecallerBot

ட்ரூ காலர் பாட் (Truecaller Bot) - @XTZ_TruecallerBot

பொதுவாகவே ட்ரூ காலர் செயலியை பயன்படுத்துவது குறித்து சர்ச்சைகள் பல வந்து கொண்டிருக்கிறது.

ட்ரூ காலரைப் பயன்படுத்துபவர் ஸ்மார்ட்ட் போனில் இருந்து அவரது Contact-களுடைய தகவல்கள் எடுத்துக்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதெல்லாம் தவிர்த்து உங்களுக்குக் கால் செய்பவரின் தகவலைத் தெரிந்துகொள்ள இந்த டெலிகிராமின் ட்ரூ காலர் பாட் அம்சம் உதவியாக இருக்கும்.

குழந்தைங்க சொல் பேச்சு கேட்கலையா? போன் யூஸ் பண்றாங்களா? அப்போ இதை செய்ங்க.!குழந்தைங்க சொல் பேச்சு கேட்கலையா? போன் யூஸ் பண்றாங்களா? அப்போ இதை செய்ங்க.!

ட்ரூ காலர் இனி தேவையே இல்லை.! ஏன் தெரியுமா?

ட்ரூ காலர் இனி தேவையே இல்லை.! ஏன் தெரியுமா?

இந்த ட்ரூ காலர் பாட்டிற்கு உங்களுக்கு தகவல் தேவைப்படும் தொலைப்பேசி எண்ணை அனுப்பினால், அந்த எண்ணிற்குச் சொந்தக் காரருடைய பெயர் மற்றும் நெட்வொர்க் உங்களுக்கு செய்தியாக அனுப்பப்படும்.

ட்ரூ காலர் செயலியை விட இது பாதுகப்பானதாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி அடுத்த முறை யாருடைய போன் நம்பரின் விபரம் வேண்டுமென்றால் இப்படி ட்ரை செய்து பாருங்கள்.

BG Remover Bot - @AI_Background_Remover_Bot

BG Remover Bot - @AI_Background_Remover_Bot

இந்த பாட் அம்சம், உங்கள் புகைப்படங்களில் இருக்கும் Background-களை நீக்க உதவுகிறது.

நீங்கள் எந்த புகைப்படத்தை அனுப்பினாலும் சில நொடிகளில் அதன் Background நீக்கப்பட்டு HD இமேஜாகவே உங்களுக்கு அனுப்பப்படும்.

எதுக்கு இன்னும் wait பண்றீங்க.. உடனே இந்த டெலெக்ராம் பாட்களை பயன்படுத்தி பயணடையுங்கள் மக்களே.!

Best Mobiles in India

English summary
Try These Telegram Bot Support To Make Your Daily Life Easy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X