Youtube-ல் பணம் சம்பாதிக்க எளிய வழிமுறை: சரியான பார்ட் டைம் வேலை., பணப் பிரச்னையை ஊதி தள்ளுங்க.,

|

பொதுவாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் மோட்டிவேஷனல் விஷயங்களை வைத்து நம்மை ஊக்கப்படுத்தி விட்டு அதை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதோடு அதை கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் அதுமட்டும் போதுமானது அல்ல மோட்டிவேஷனல் விஷயங்களை துணிந்து செயலில் காட்ட வேண்டும். பலரும் தாம் செல்லும் வேலையில் ஈட்டும் பொருள் போதுமானதாக இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்போம். அதை எளிதாக்க நம் கையில் இருக்கும் மொபைல் போன் மூலமாகவே சில மணி நேரங்களை மட்டுமே செலவிட்டு பணம் ஈட்டலாம்.

முயற்சித்து செயலில் காட்டுவோம்

முயற்சித்து செயலில் காட்டுவோம்

இணையம் பயன்பாடு என்பது அனைத்து தரப்பு மக்களிடமும் பிரதானமாக ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டுமென்றால் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு தான் இரண்டாவது இடம். இணையத்தை நாமும் பயன்படுத்துவராக கடந்து சென்றுவிடக் கூடாது. அதில் பொருள் ஈட்டுவது குறித்து படித்து அதை செயலில் காட்டி முயற்சிக்கலாம். யாருக்கு தெரியும் அந்த முயற்சியில் யூடியூப்-ல் 2020-ல் அதிகம் பார்த்த வீடியோவில் உங்களது வீடியோ இடம்பெறலாம்.

இணையத்தில் பிரதானமான ஒன்று யூடியூப்

இணையத்தில் பிரதானமான ஒன்று யூடியூப்

இணைய வழி பயன்பாட்டில் பெரிதளவு பயன்படுத்தப்படுவது மூன்றுதான் பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப். யூடியூப்-ல் வீடியோ பார்ப்பதற்கு முன்னால் இதை சப்ஸ்க்ரைப் செய்யவும் பெல் பட்டனை கிளிக் செய்யவும் என்று கூறுவதை பார்த்திருப்போம். அது எதற்கு என்று தெரியுமா?., வாருங்கள் யூடியூப் செயல்பாடு மற்றும் அதில் பணம் ஈட்டுவது குறித்து பார்ப்போம்.

Step 1:

Step 1:

இணையதள உலகில் தங்களுக்கென்று ஒரு இடத்தை வாங்க வேண்டும். அந்த இடம் வாங்குவதற்கு பொருட் செலவு எதுவும் ஆகாது. இணையதள உலகில் யூடியூப் என்ற நாட்டில் ஒரு இடத்தை வாங்க வேண்டும். யூடியூப் இந்தியாவில் அதிக பார்வையாளரை கொண்ட பத்தாவது சேனலாக திகழ்ந்து வருகிறது. அதில் நமக்கான இடத்தை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்.

Step 2:

Step 2:

யூடியூப்பில் நுழைந்தவுடன் மெயில் லாக்கின் என்று கேட்கும் அதை கொடுத்துக் கொள்ளவும். அதை கொடுத்தவுடன் ரைட்சைட் மேற்புறத்தில் பெல் ஐகான் அருகில் மெயிலின் முதல் எழுத்தோடு ஒரு வட்ட வடிவ சிம்பல் காட்டும். அதை கிளிக் செய்யவும். அதனுள் சென்றவுடன் கீழே இறக்கினால் கிரியேட் யுவர் சேனல் என்று காட்டும். அதை கிளிக் செய்யவும்.

Step 3:

Step 3:

கிரியேட் யுவர் சேனல் என்பது தங்களுக்கான இடத்தை வாங்கும் திட்டம். இடம் வாங்கினால் அதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் அல்லவா., அந்த பெயர் தாங்கள் எந்த மாதிரியான வீடியோவை பதிவேற்ற திட்டமிட்டுள்ளிர்களோ அதற்கு ஏற்ப பெயரை பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக வைத்துக் கொள்ளவும்.

Step 4:

Step 4:

அதன்பின் தங்களின் மொபைல் நம்பர் கேட்கும் அதை பதவு செய்து கொள்ளவும், கீழே உள்ள டெக்ஸ்ட் மெசேஜ் ஆப்ஷனையே டிக் செய்து கொள்வது நல்லது. தாங்கள் பதிவிட்ட நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும் அதை பதிவு செய்தவுடன், தங்களுக்கான இடம் பதிவாகிவிடும். அதாவது நமது சேனல் கிரியேட் ஆகி விடும். அவ்வளவுதான் இனி வேலையை தொடங்கலாம்.

வீடியோ அப்லோட் செய்ய வேண்டும்:

வீடியோ அப்லோட் செய்ய வேண்டும்:

தற்போது உங்களது சேனலில் பதிவேற்றும் வீடியோ கிரீன் மேட் போட்டு, 4கே தொழில்நுட்பத்துடன், பல்வேறு வகை எடிட் செய்து கொண்டு அப்லோட் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. இதை இணையதளம் கொண்ட கணினியோ, மொபைலோ, அல்லது கேமராவோ, மொபைல் கேமராவோ இருந்தால் போதும். பயன்படுத்தும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவுட்புட் இருக்கும்.

வித்தியாசமான வீடியோவை பதிவேற்றவும்

வித்தியாசமான வீடியோவை பதிவேற்றவும்

உங்களுக்கு அருகில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்யுங்கள். உதாரணத்திற்கு உங்கள் மனைவி நன்றாக சமைப்பவர் என்றால் அதை வீடியோ பதிவு செய்யலாம் அல்லது நீங்கள் நல்ல உடை வடிவமைப்பாளராக இருக்கலாம், நீங்கள் எந்த தொழில் செய்தாலும் சரி அதை வீடியோவாக பதிவு செய்து கொள்ளவும்.

முழுக்க முழுக்க தங்களுடையதாக இருக்க வேண்டும்

முழுக்க முழுக்க தங்களுடையதாக இருக்க வேண்டும்

அதுமட்டுமின்றி ஒரு திரைப்படத்தை பார்க்கிறீர்கள் அது உங்களுக்கு பிடித்துள்ளது. அதுகுறித்து கூறலாம், சுற்றுலாத் தளத்திற்கு செல்லும் அதுகுறித்து வீடியோ, கோயிலுக்கு செல்லும் போது அதுகுறித்து வீடியோ, குழந்தைகள் அல்லது நீங்கள் பாடுவது போன்ற வீடியோவை கூட பதிவேற்றம் செய்யலாம். ஆனால் வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

யூடியூப் தரும் ஆடியோவைப் பயன்படுத்தாதீர்கள்

யூடியூப் தரும் ஆடியோவைப் பயன்படுத்தாதீர்கள்

குறிப்பாக இதை பதிவேற்றம் செய்யும் போது உங்களுடைய வீடியோவிற்கு யூடியூப் தரும் ஆடியோவைப் பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களைப் பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பர வருமானம் உங்களுக்கு வராது.

எடிட் செய்து பதிவேற்றினால் நல்லது

எடிட் செய்து பதிவேற்றினால் நல்லது

இதை மொபைல் மூலமாக அப்லோட் செய்யலாம், அல்லது மொபைலில் வீடியோ கட்டர், கணினி இருந்தால் மூவி மேக்கர் (movie maker) என்ற மென்பொருள் மூலம் உங்களுடைய வீடியோவில் தேவையில்லாத இடங்களை நீக்கம் செய்து எடிட் செய்து கொள்ளுங்கள். பின்னணி இசையோ அல்லது குரலோ தேவைப்பட்டால் அதையும் ரெகார்ட் செய்து வீடியோ பதிவில் சேருங்கள். பார்வையாளர்கள் முழுமையாக பார்க்க ஏற்ற விதமாக கவரும் விதமாக எடிட் செய்து கொள்ளவும். அவ்வளவுதான், யூடியூப் தளத்தில் உங்களது சேனலுக்குள் சென்று upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோ பதிவை upload செய்யுங்கள்.

Tags என்ற வார்த்தை:

Tags என்ற வார்த்தை:

Upload செய்த பிறகு உங்கள் வீடியோ பதிவு குறித்த தகவல்களை தர வேண்டும். பார்வையாளர்களை எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு கொடுங்கள். வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதியில் உங்கள் வீடியோவை தேடுவதற்கு எளிதான வார்த்தைகளை கொடுங்கள். இப்போது Public என்று தேர்வு செய்து save செய்து விடுங்கள்.

மின்னஞ்சல் தேடி வரும்

மின்னஞ்சல் தேடி வரும்

நீங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவிற்கு அதிக views வந்தாலோ அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமானது என்றாலோ 'invitation to earn revenue from you videos' என்ற தலைப்பில் மின்னஞ்சல் தங்கள் பதிவிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வரும். அந்த மின்னஞ்சலில் உள்ள லிங்கை கிளிக் செய்து தங்களது தகவல்களை கொடுக்க வேண்டும்.

யூடியூப் நிறுவனம் partner என்ற அந்தஸ்தை வழங்கும்

யூடியூப் நிறுவனம் partner என்ற அந்தஸ்தை வழங்கும்

நீங்கள் பதிவு செய்த தகவல் அனைத்தும் திருப்தியாக இருப்பின், நீங்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை யூடியூப் பரிசோதனை செய்யும். அதன்பின் அதிகமான மற்றும் வித்தியாசமான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும். இதைத்தான் யூடியூப் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எல்லாம் சரியாக இருந்தால் யூடியூப் நிறுவனம் partner என்ற அந்தஸ்தை வழங்கிவிடும்.

மீண்டும் மீண்டும் Apply செய்யவும்

மீண்டும் மீண்டும் Apply செய்யவும்

ஒருவேலை தங்களில் பலருக்கும் Partner என்ற அந்தஸ்தை யூடியூப் வழங்காமல் போகலாம், அதை கண்டுகொள்ளாமல், மீண்டும் Apply செய்வதற்கு இரண்டு மாதங்கள் காத்திருந்து அப்ளை செய்யவும். கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டு மாதங்களுக்கு பின் இன்னும் அதிக வீடியோ, views உடன் மீண்டும் Apply செய்து காட்டுங்கள். ஏற்றுக் கொள்ளப்படும்.

Adsense, Partner

Adsense, Partner

அதுமட்டுமின்றி உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் வாயிலாக சம்பாதிக்கும் வாய்ப்பை யூடியூப் உங்களுக்கு வழங்கும். இதில் வீடியோவை பதிவேற்றம் செய்தவுடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது வீடியோ குறிப்பிட்ட நாட்களுக்கு review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று யூடியூப் நிறுவனம் உறுதி செய்தவுடன் Monetized என்று ஆகி விடும். இதில் முக்கியமானவை என்னவென்றால் Partner, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் Adsense வருமானம் partner வருமானத்தை விட குறைவு. Adsense என்றால் கூகுளில் தொடங்கப்படும் அக்கவுண்ட் அதுகுறித்து அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிப்பு: எத்தனை மடங்கு தெரியுமா?- Apple CEO மகிழ்ச்சிஇந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிப்பு: எத்தனை மடங்கு தெரியுமா?- Apple CEO மகிழ்ச்சி

வருமானம் வரத் தொடங்கிவிட்டது என்பதை எப்படி அறிவது:

வருமானம் வரத் தொடங்கிவிட்டது என்பதை எப்படி அறிவது:

சரி, தங்களுக்கு வருமானம் வரத் தொடங்கிவிட்டது என்பதை எப்படி அறிந்துக் கொள்வது. சிம்பிள், உங்களுக்கு வருமானம் வர ஆரம்பித்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ள உங்கள் வீடியோ பதிவிற்கு யூடியூப் நிறுவனம் இரண்டு வகையான விளம்பரங்கள் கொடுக்கும். வீடியோவின் கீழ் வரும் சிறிய விளம்பரம், வீடியோவிற்கு முன் வரும் விளம்பரம்.

Best Mobiles in India

English summary
How to Make Money on Youtube in Tamil: Step by Step Process Explained

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X