பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி?

|

கணினிகளின் ஹார்டுவேர் மற்றும் இயங்குதளத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருளே டிரைவர் என அழைக்கப்படுகின்றன. கணினிகளில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு டிரைவர்களை சரிபார்த்தே அவற்றை சரிசெய்து விடமுடியும். இதற்கு பிரின்டர் சரியாக வேலை செய்யாதது முதல் கேம் கிராஷ் ஆவது போன்றவை காரணமாக இருக்கலாம்.

 டிரைவர்களை சரிபார்ப்பது

டிரைவர்களை சரிபார்ப்பது

வீடியோ கார்டு, ஆடியோ, மதர்போர்டு மற்றும் பல்வேறு அம்சங்களுக்கென தனித்தனியாக டிரைவர்கள் இருக்கின்றன. கணினி சரியாக இயங்க வைக்க டிரைவர்களை அப்டேட் செய்தால் மட்டும் போதாது. எனினும் சீராக இடைவெளியில் டிரைவர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே கணினி சீராக இயங்கும்.

டிரைவர்களை சரிபார்ப்பது

உங்களது கணினியில் எந்தெந்த டிரைவர்கள் இருக்கின்றன, அவை எந்தெந்த வெர்ஷன்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியாமல் இருக்கும். இந்த விவரங்களை விண்டோஸ் எக்ஸ்.பி. முதல் விண்டோஸ் 8 வரையிலான இயங்குதளங்களில் கமாண்ட் பிராம்ப்ட் பயன்படுத்தலாம். கமாண்ட் பிராம்ப்ட இயக்க விண்டோஸ் கீ மற்றும் X பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி driverquery என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் உள்ள டிரைவர்கள் பட்டியலிடப்படும்.

இதுதவிர driverquery > driver.txt என டைப் செய்தும் விவரங்களை பார்க்கலாம். இதில் உள்ள தேதி டிரைவர் அப்டேட் ஆன தேதியில்லை, இது டிரைவர் வெளியிடப்பட்ட தேதியாகும்.

இதனால் தேதி சில ஆண்டுகளுக்கு முன் இருப்பின், டிரைவர் அப்டேட் ஆகவில்லை என அர்த்தமாகும். விண்டோஸ் 10 தளத்திற்கு இந்த அம்சம் வேலை செய்யாது. வெர்ஷன் நம்பர், உற்பத்தியாளர், இன்ஸ்டாலேஷன் தேதி மற்றும் பல்வேறு விவரங்களை ஒற்றை தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மைக்ரோசாஃப்ட்டில் இருந்து நேரடியாக டிரைவர்களை அப்டேட் செய்வது

மைக்ரோசாஃப்ட்டில் இருந்து நேரடியாக டிரைவர்களை அப்டேட் செய்வது

விண்டோஸ் அப்டேட் மூலம் உங்களது டிரைவர்களை அப்டேட் செய்யலாம். இதற்கு விண்டோஸ் கீ மற்றும் I என க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் செட்டிங்ஸ் திறக்கும், பின் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி ஆப்ஷனில் விண்டோஸ் அப்டேட் மற்றும் செக் ஃபார் அப்டேட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால் ஆட்டோமேடிக் அப்டேட்களை டிசேபில் செய்யலாம்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டிவைஸ் மேனேஜர் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்வது

டிவைஸ் மேனேஜர் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்வது

டிவைஸ் மேனேஜரை இயக்க விண்டோஸ் கீ மற்றும் X என க்ளிக் செய்ய வேண்டும். இனி டிவைஸ் மேனேஜர் தேர்வு செய்து சிஸ்டம் உபகரணங்கள், டிஸ்க் டிரைவ்கள், டிஸ்ப்ளே அடாப்டர்கள், பிராசஸர்கள் மற்றும் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதனை இருமுறை க்ளிக் செய்து அதற்கான விவரங்களை பார்க்கலாம். இனி அப்டேட் டிரைவர் ஆப்ஷனை க்ளிக் செய்து அப்டேட் செய்யப்பட்ட டிரைவர்களை தேட வேண்டும். இதற்கு மாற்றாக பிரவுஸ் மை கம்ப்யூட்டர் ஃபார் டிரைவர் சாஃப்ட்வேர் ஆப்ஷனையும் க்ளிக் செய்ய வேண்டும்.

டிரைவர்களை அப்டேட் செய்வது

டிரைவர்களை அப்டேட் செய்வது

உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக டிரைவர்களை அப்டேட் செய்யலாம். இதற்கு driverquery கமாண்ட் பயன்படுத்தி விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதற்கு உற்பத்தியாளரின் வலைத்தளம் சென்று டிரைவர்ஸ் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். AMD மற்றும் NVIDIA போன்ற நிறுவனங்கள் சிஸ்டம்களை ஸ்கேன் செய்து டிரைவர்களை தேடி அவற்றை தானாக அப்டேட் செய்யும்.

Best Mobiles in India

English summary
How To Find & Replace Dated Windows Drivers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X