ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு மானிட்டர்களை பொருத்துவது எப்படி?

By Siva
|

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு மானிட்டர்களை இணைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான அதே நேரத்தில் அதிக நேரம் பிடிக்கும் ஒரு வேலையாக இருந்தது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி இந்த வேலையை எளிதில் செய்ய வைத்துள்ளது.

ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு மானிட்டர்களை பொருத்துவது எப்படி?

மேலும் தற்போது விண்டோஸ் ஓஎஸ் இதற்கு முன்னர் இரண்டு மானிட்டர்களை அனுமதிக்காத நிலையில் தற்போது அதுவும் சாத்தியமாக உள்ளது. இதற்கு டூயல் மானிட்டர் சாப்ட்வேர் என்ற ஒன்று இருந்தால் போதும்

இரண்டு மானிட்டர்களை பொருத்த என்ன செய்ய வேண்டும்?

முதலில் உங்களுக்கு பிடித்த இரண்டு மானிட்டர்களை எடுத்து கொள்ளுங்கள். இரண்டு மானிட்டர்களும் வெவேறு சைஸ் மற்றும் தரம் உடையதாக இருப்பதை விட ஒரே மாதிரியான மானிட்டர் இருந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இரண்டு வெவ்வேறு மானிட்டர்கள் இருந்தால் வெவேறு ரெசலூசன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதை சரிசெய்ய வேண்டும்

டூயல் கேமராவுடன் வெளிவரும் ஹானர் வி9 மினி.!டூயல் கேமராவுடன் வெளிவரும் ஹானர் வி9 மினி.!

அடுத்ததாக மானிட்டர்களை பின்பக்கம் கனெக்ட் செய்ய வேண்டும் பொதுவாக ஒரே ஒரு மானிட்டர் பொருத்த மல்டிபில் இன்புட் தேவைப்படாது. ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மானிட்டர் பொருத்த கண்டிப்பாக மல்டிபிள் இன்புட் தேவை. எனவே இதை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்

அடுத்ததாக உங்களுக்கு ஒரு கிராபிக் கார்ட் தேவை. பொதுவாக மானிட்டர்களை மதர்போர்டு அல்லது கிராபிக்ஸ் கார்டில் பொருத்துவது வழக்கம். ஆனால் இரண்டு மானிட்டர்களை பொருத்த வேண்டும் என்றால் அது கிராபிக்ஸ் கார்டில் மட்டுமே முடியும். எனவே மல்டிபிள் இன்புட் உள்ள சிங்கிள் கிராபிக்ஸ் கார்டை பயன்படுத்துங்கள்

டூயல் மானிட்டரை பொருத்துவது எப்படி?

இரண்டாவது மானிட்டரை இணைத்தவுடன் விண்டோஸ் அதனை புரிந்து கொண்டு இரண்டாவது மானிட்டர் உள்ளதை டெக்ஸ்டாப்பில் காண்பிக்கும். பின்னர் எந்த மானிட்டர் பிரைமரி மானிட்டர் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதற்கு வலதுபுறமாக மவுசை கிளிக் செய்து அதை தேர்வு செய்ய வேண்டும். இதை நீங்கள் செய்தவுடன் உங்கள் டெக்ஸ்டாப்பில் நீங்கள் எத்தனை மானிட்டர்களை இணைத்துள்ளீர்கள் என்கிற விபரம் தெரியவரும்

மேலும் அட்வான்ஸ் டிஸ்ப்ளே சிஸ்டம் என்ற பகுதிக்கு சென்று மானிட்டர்களின் ரெசலூசனை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். இதை நீங்கள் வலது புறம் கிளிக் செய்து பிராப்பர்ட்டீஸ் மூலமும் செய்து கொள்ளலாம்

இரண்டு மானிட்டர்களை செயல்படுத்தியவுடன் உங்களுக்கு இரண்டையும் தேவையான போது பயன்படுத்தி கொண்டு, மற்ற நேரத்தில் ஒரு மானிட்டரை மட்டும் பயன்படுத்தும் வகையிலும் மாற்றி கொள்ளலாம். மேலும் ஒரு இமேஜின் பின்னணியை மாற்ற ஸ்பேன் ஆப்சனை பயன்படுத்தி இரண்டு மானிட்டர்களின் உதவியால் மிக எளிதாக மாற்றலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
A few years back, setting up dual monitor used to be a complicated task and even expensive at times. But today, its not! Check here on how to set up dual monitors for your PC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X