உங்களின் ஆபாச புகைப்படம், வீடியோவை வெப்சைட்டில் இருந்து நீக்குவது எப்படி?

|

பெண்கள் ஆண் நண்பர்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ-புகைப்படங்களையோ, இல்லை உங்களின் நிர்வாண புகைப்படங்களையோ, இல்லை உடறுறவு காட்சிகளோ, உடை மாற்றும் காட்சிகளோ செப் சைட்டில் ஏற்றப்பட்டால் நீங்கள் ஒன்றும் பதற வேண்டாம்.

நீங்கள் எளிதாகவே அகற்றிவிடலாம். அல்லது குறித்து சைபர் கிரைம் போலீல் புகார் அளித்தும் நீக்கலாம். சமந்தப்பட்ட வலைதளங்களில் இருந்தால், நீங்கள் உடனடியாக அந்த வலைதளத்தில் சென்றும் இதுகுறித்து புகார் அளித்தும் அகற்றலாம்.

உங்களின் ஆபாசபுகைப்படம், வீடியோ வெப்சைட்டிலிருந்து நீக்குவது எப்படி?

பெண்களின் உடலே இல்லை மானமோ பெரிதல்ல உயிர் தான் பெரிது இதற்காக கோழைத்தனமாக தற்கொலை செய்து சரியானதல்ல. உங்களின் ஆபாச வீடியோ புகைப்படத்திற்கு தற்கொலை ஒருபோதும் முடிவாகாது. இதற்கு நாம் அறிவைத்தான் பயன்படுத்த வேண்டும்.

மேலும் கூகுள், பேஸ்புக், யூடியூப், போர் சைட்களில் இருக்கும் காட்சிகளை எவ்வாறு நீக்குவது என்று காணலாம்.

பொள்ளாச்சி சம்பவம்:

பொள்ளாச்சி சம்பவம்:

பொள்ளாச்சியில் திருநாவுகரசு, சபரீராஜன், வசந்த், சதீஸ் உள்ளிட்ட 4 பேரும் பேஸ்புக் மூலம் பழகி அவர்களின் அவர்களின் பாலியல், அந்தரங்கம் குறித்தும் டெக்ஸ்ட்( எழுத்து) ஆடியோ, வீடியோ உள்ளிட்ட வாயிலாகவும் சமந்தப்பட்ட பெண்களின் அரங்களை வாங்கியுள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் மிரட்டி பொள்ளாச்சி ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டில் வைத்து சுமார் 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வீடியோவையும் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தும், பணம் பறிப்பு உள்ளிட்ட சம்பங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

யாராவது உங்களை மிரட்டினால் இதை செய்யுங்கள்:

யாராவது உங்களை மிரட்டினால் இதை செய்யுங்கள்:

உங்களின் அந்தரங்க உரையாடல்கள், வீடியோ, துணி மாற்றும் வீடியோ, புகைப்படம் டெக்ஸ்ட் (எழுத்துக்களை) அவர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மெஸ்சேஞ்சர்களில் இருந்து எடுத்து கூகுள், யூடியூப், பேஸ்புக், ஆபாச வலைதளங்களுக்கு அப்லோடு செய்தால், நீங்கள் பயப்பட வேண்டாம்.

அப்லோடு செய்வதாக கூறி மிரட்டினால் அவர்கள் கூப்பிடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

உங்களின் மானத்தை விட உயிர்தான் முக்கியம்:

உங்களின் மானத்தை விட உயிர்தான் முக்கியம்:

பெண்களின் உடல் ஒன்றும் அப்போதே அழிந்து விடக் கூடியதல்ல. யாரோ ஒருவர் செல்போன், ஸ்பை கேமராக்களை பயன்படுத்தி அந்தரங்களையும் வீடியோ புகைப்படம் எடுத்தாலும் சரி உடனே நீங்கள் தற்கொலை செய்து கொல்வது சரியல்ல.

மானத்தை விட பெண்களின் உயிர் தான் முக்கியம். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் மன தைரியத்துடன் போராட வேண்டும். அறிவோடும் இருக்க வேண்டும். பைபர் கிரைம் போலீல் புகார் அளித்தும், வீடியோ, புகைப்படங்களையும் அழித்து விடலாம்.

வெப்சைட்களில் இருக்கும் காட்சியை நீக்குவது:

வெப்சைட்களில் இருக்கும் காட்சியை நீக்குவது:

முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாக பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன. இதனால் நீங்கள் பயப்பட தேவையில்லை.

யூடியூப்பில் இருக்கும் காட்சியை நீக்க:

யூடியூப்பில் இருக்கும் காட்சியை நீக்க:

யூ ட்யூப் ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும். xxx வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில் abuse reporting form என்று ஒரு படிவம் உள்ளது.அந்த படிவத்தில் , இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பதிவேற்ற பட்டுள்ளது என்று நாம் தெரிவித்தால் அதுவும் உடனடியாக நீக்கப்படும்.

 சைபர் கிரைம் உதவியை நாடுங்கள்:

சைபர் கிரைம் உதவியை நாடுங்கள்:

நீங்கள் தனியாக செய்ய இயவில்ல என்றால் உடனடியாக பைசர் கிரைம் போலீசார் உதவியை நாடுங்கள், மேலும் மகளிர் பாதுகாப்பு மையங்களையும் நீங்கள் அணுகலாம். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படும்.

உங்களின் நண்பர்களின் உதவியோடும் சமந்தப்பட்ட செப் சைட்களிலும் நீங்கள் புகார் அளிக்கலாம்.

பெண்களை பாதுகாக்கும் ஐடி சட்டம்:

பெண்களை பாதுகாக்கும் ஐடி சட்டம்:

நமது நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக உள்ளன. ஆனால், அது குறித்த விழிப்புணர்வு பரவலாக இல்லை, அது மட்டுமன்றி சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

பொள்ளாச்சி சம்பவத்தினை எடுத்துக் கொண்டால் information technology act -தகவல் தொழில்நுட்ப சட்டம் , பிரிவு 67 மற்றும் 67 A இரண்டு பிரிவுகளும் , ஆபாச வீடியோக்கள் எடுப்பது , இணையத்தில் ஆபாசமாக பேசுவது ஆகியவற்றை தடுப்பதற்கான சட்டங்கள்.பிரிவு 66 ன்படியும் இவை தண்டனைக்குரிய குற்றங்கள்.

ஐடி சட்டங்கள்:

ஐடி சட்டங்கள்:

Ipc 351 ன் படி பெண்களை அடித்து துன்புறுத்தி உள்ளது குற்றம்.பிரிவு 354ன் படி ஒரு பெண்ணின் கண்ணியத்தினை குலைப்பதற்காக உள் நோக்கத்தோடு பெண்ணின் மீது குற்ற நடவடிக்கைகளை எடுப்பது குற்றம். பிரிவு 357 ஒரு பெண்ணை சட்ட விரோதமாக அடைத்து வைப்பதுசட்டப்படி குற்றம் என்கின்றது .பிரிவு 362ன் படி ஒரு பெண்ணை தவறான நோக்கத்திற்காக தூண்டி விட்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கூட்டி செல்வது குற்றம்.

 பெண்களை பாதுகாக்கும் பொறுப்பு:

பெண்களை பாதுகாக்கும் பொறுப்பு:

பெண்களின் ஆபாச வீடியோ, பாலியல் வீடியோ போன்றவை பேஸ்புக், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் இருக்கின்றது. இதனால் தட்டிக் கழிக்கும் செயலாக சமூக வலைதளங்கள் செய்ய முடியாது. இந்த பொறுப்பு அரசாங்கத்திற்கும் இருக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to remove your adult content photo and video from a web site?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X