புது போனை ஏன் 8 மணி நேரம் சார்ஜ் போட சொல்றாங்க தெரியுமா? இல்லாட்டி ஆயுள் குறையுமா?

|

புதிதாக ஸ்மார்ட் போன் (smartphone) வாங்கும் அனைவரும் வழக்கமாக கேட்கும் ஒரு வசனம் என்றால், அது - "புது ஸ்மார்ட் போனை 8 மணி நேரம் ஸ்விட்ச் ஆஃப் (Switch off) பண்ணி சார்ஜ் (Charge) போட வேண்டும்" என்பது தான்.. அதற்கு பிறகு யூஸ் செய்தால் தான் பேட்டரி ஆயுள் சிறப்பாக இருக்கும் என்பார்கள். ஆனால், உண்மையாகவே இது அவசியமா? இதை கட்டாயம் பின்பற்ற வேண்டுமா? என்று நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா?

புது போன் பேட்டரியை 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டுமா?

புது போன் பேட்டரியை 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டுமா?

முதலில் எதற்காக எட்டு மணி நேரம் புது போன் (phone) பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்?

பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் (smartphone battery) நிக்கல் கேட்மியம் (Nickel Cadmium) அல்லது லித்தியம் (Lithium) அல்லது லித்தியம் பாலிமர் (Lithium Polymer) ஆகிய வேதிப்பொருட்களினால் உருவாக்கப்படும்.

சமீப காலமாக மட்டுமே லித்தியம் அயான் (Lithium ion) மற்றும் லித்தியம் அயான் பாலிமர் (Lithium ion polymer) பேட்டரிகள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓ..இது தான் காரணமா? இதனால தான் 8 மணி நேரம் சார்ஜ் செய்யணுமா?

ஓ..இது தான் காரணமா? இதனால தான் 8 மணி நேரம் சார்ஜ் செய்யணுமா?

முந்தைய தலைமுறை ஸ்மார்ட் போன்களில் நிக்கல் காட்மியம் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிக்கல் காட்மியம் பேட்டரிகளுக்கு தான் முதல் முறை சார்ஜ் செய்யப்படும் பொழுது அடையும் அதிகபட்ச சார்ஜிங் அளவை (charging level) ஞாபகம் வைத்துக் கொள்ளும் இயல்பு உண்டு.

இதன் காரணமாகத்தான் ஆரம்ப காலம் முதல், புதிய போன் வாங்கியவுடன் அதன் பேட்டரியை எட்டு மணி நேரம் சார்ஜிங்கில் (8 hours battery charging) வைக்க அறிவுரை கூறப்படும்.

உங்கள் போன் நீரில் விழுந்தால் உடனே எதை செய்ய வேண்டும்.! எதை செய்ய கூடாது.!உங்கள் போன் நீரில் விழுந்தால் உடனே எதை செய்ய வேண்டும்.! எதை செய்ய கூடாது.!

உங்கள் போனில் என்ன பேட்டரி இருக்கிறது? உடனே நோட் செய்யுங்கள்.!

உங்கள் போனில் என்ன பேட்டரி இருக்கிறது? உடனே நோட் செய்யுங்கள்.!

அப்படி எட்டு மணி நேரம் சார்ஜிங் செய்யும் பொழுது, அந்த பேட்டரிகள் அதன் அதிகபட்ச கொள்ளளவை அடைந்து விடும். இதன் மூலம் பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும்.

இந்த காரணத்திற்காகத்தான் நிக்கல் காட்மியம் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கிய புதிதில் 8 மணி நேரம் சார்ஜிங்கில் போட அறிவுறுத்தப்படும்.

இப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன தெரியுமா?

இப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன தெரியுமா?

ஆனால், சமீப காலமாக நிக்கல் காட்மியம் பேட்டரிகளின் பயன்பாடு குறைந்து; லித்தியம் அயான் மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த லித்தியம் பாலிமர் பேட்டரிகளுக்கு தனது அதிகபட்ச கொள்ளளவை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.

எனவே, இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போனை வாங்கிய புதிதில் 8 மணி நேரம் சார்ஜிங் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

61 ரூபாயில் 5G டேட்டா.! Jio அறிமுகம் செய்த புது திட்டம்.! அம்பானிக்கு பெரிய மனசு தான்.!61 ரூபாயில் 5G டேட்டா.! Jio அறிமுகம் செய்த புது திட்டம்.! அம்பானிக்கு பெரிய மனசு தான்.!

உங்க போனுடைய பேட்டரி ஆயுள் இப்படி தான் கணக்கிடப்படுகிறது.!

உங்க போனுடைய பேட்டரி ஆயுள் இப்படி தான் கணக்கிடப்படுகிறது.!

அதேபோல, ஒவ்வொரு முறை மொபைல் சார்ஜிங் (mobile charging) செய்யும் பொழுதும் 100% அடைய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

ஒரு ஸ்மார்ட் போன் பேட்டரியின் வாழ்நாள் (smartphone battery life) அதிகரிக்க குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பின்பற்றினால் மட்டும் போதும். எப்போதுமே ஒரு பேட்டரி 0% -த்தில் சார்ஜிங் செய்ய ஆரம்பித்து 100% அடைவதை ஒரு சார்ஜிங் சைக்கிள் (Charging Cycle) என்று குறிப்பிடுவோம்.

ஒவ்வொரு பேட்டரிக்கும் குறிப்பிட்ட முறைதான் சார்ஜிங் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும்.

மொபைலை இப்படி தான் சார்ஜ் செய்யணுமா? இல்லாட்டி ஆயுள் குறையுமா?

மொபைலை இப்படி தான் சார்ஜ் செய்யணுமா? இல்லாட்டி ஆயுள் குறையுமா?

அந்தக் குறிப்பிட்ட முறை சார்ஜிங் சைக்கிள் முடிந்தவுடன் அந்த பேட்டரியின் வாழ்நாள் (mobile battery lifetime) முடிந்து விடும்.

எனவே, ஒரு போன் பேட்டரியை அதிக நாட்கள் பயன்படுத்த அந்த பேட்டரியில் இருக்கும் சார்ஜ் 20%-த்திற்கு கீழ் செல்லாமலும் 95%-த்திற்கும் மேல் சார்ஜிங் ஆகாமலும் பார்த்துக் கொள்வது அவசியம்.

இதன் மூலம் சார்ஜிங் சைக்கிள் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

எங்களை நிம்மதியா வாழவிடுங்கடா.. சோதிக்காதீங்க.! இப்படி ஒரு AI ரோபோட்டை கேட்டோமா நாங்க?எங்களை நிம்மதியா வாழவிடுங்கடா.. சோதிக்காதீங்க.! இப்படி ஒரு AI ரோபோட்டை கேட்டோமா நாங்க?

போன் பேட்டரிக்கு பின்னால் இவ்வளவு மேட்டர் இருக்கா?

போன் பேட்டரிக்கு பின்னால் இவ்வளவு மேட்டர் இருக்கா?

அதாவது, உங்கள் ஸ்மார்ட் போனின் சார்ஜ் 65% இருக்கும்பொழுது நீங்கள் அதை சார்ஜில் போட்டால், அது ஒரு சார்ஜிங் சைக்கிளாக கருதப்படாது.

அந்த பேட்டரியில் இருக்கும் சார்ஜ் முற்றிலுமாக ட்ரைன் (drain) ஆன பிறகு சார்ஜ் போட ஆரம்பித்து, அது 100% அடையும் பொழுது அதனை சார்ஜிங்கில் இருந்து எடுத்தால் மட்டுமே அது ஒரு சார்ஜிங் சைக்கிளாக கருதப்படும்.

இந்த முறையை பின்பற்றினால் பேட்டரியின் வாழ்நாள் குறையாமல் இருக்கும்.

இன்றைய புது ஸ்மார்ட்போன்களுக்கும் 8 மணி நேர சார்ஜ் அவசியமா?

இன்றைய புது ஸ்மார்ட்போன்களுக்கும் 8 மணி நேர சார்ஜ் அவசியமா?

பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க இனி வாங்கிய புதிதில் 8 மணி நேரம் சார்ஜிங் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

அதே போல ஒவ்வொரு முறை சார்ஜிங் செய்யும் பொழுதும் 20%-த்தில் ஆரம்பித்து 80% வரை சார்ஜிங் செய்தால் மட்டும் போதும், முழு கொள்ளளவை அடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அது இந்த கால பேட்டரியின் திறனை பாதிக்க மட்டுமே செய்யும் என்பதே உண்மை.

கூரையை பிச்சுட்டு வந்த லக்.! Apple ஸ்டோர்களில் வேலை வாய்ப்பு.! உடனே கிளம்புங்க.! அப்ளை பண்ணுங்க.!கூரையை பிச்சுட்டு வந்த லக்.! Apple ஸ்டோர்களில் வேலை வாய்ப்பு.! உடனே கிளம்புங்க.! அப்ளை பண்ணுங்க.!

இந்த அளவு வரை மட்டும் தான் சார்ஜ் வேகமாக ஏறும்.!

இந்த அளவு வரை மட்டும் தான் சார்ஜ் வேகமாக ஏறும்.!

சமீபகாலமாக வரும் ஸ்மார்ட்போன்களில் புத்திசாலித்தனமாக சார்ஜிங் செய்யும் அம்சம் சேர்க்கப்பட்டு தான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

எந்த ஒரு பேட்டரியும் 90 சதவிகிதம் சார்ஜ் ஆகும் வரை மட்டுமே வேகமாக மின்சாரத்தை ஈர்க்கும். மீதமுள்ள 10% மெதுவாகவே சார்ஜ் செய்யப்படும். இதன் மூலம் மின்சாரம் வீணாவதும் குறையும், அதே சமயம் பேட்டரியும் நீண்ட நாள் சிறப்பாகச் செயல்படும்.

உங்கள் பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க மேலும் சில குறிப்புகள்

உங்கள் பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க மேலும் சில குறிப்புகள்

- இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜில் இருக்கும் பொழுது வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- சார்ஜிங் இருக்கும் பொழுது கேம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
- உங்கள் போன் சூடாக இருக்கும் பொழுது அதை ON-ல் வைத்தவாரே சார்ஜிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.

- அதற்கு பதிலாக உங்கள் போனை OFF செய்து சார்ஜில் போடவும்.

இனி புது போனிற்கு 8 மணி நேரம் அவசியம் இல்லையா?

இனி புது போனிற்கு 8 மணி நேரம் அவசியம் இல்லையா?

உங்கள் போனின் பேட்டரி அடிக்கடி சூடானால் அதன் வாழ்நாள் குறையும் என்பதை மனதில் வைத்து பயன்படுத்துங்கள்.

சமீபகாலமாக வரும் ஸ்மார்ட் போன்கள் எப்போதுமே 60% சார்ஜ் செய்தபடி தான் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே காத்திருக்காமல் இனி வாங்கிய உடனே உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

இனி 8 மணி நேர கணக்கு 12 மணி நேர கணக்குகள் எல்லாம் தேவையில்லை.

இந்த முடிவிற்கு வருவதற்கு முன், ஒரு முறை உங்கள் போனின் பேட்டரி என்ன டைப் என்பதை தெரிந்துகொள்வது சிறப்பானது.

Best Mobiles in India

English summary
How Many Hours a New Smartphone Battery Should Be Charged

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X