ப்ளே ஸ்டோரில் போலி செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதை கண்ட கூகுள் நிறுவனம் கூகுள் ப்ளே ப்ரோடெக்ட் என்னும் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 7,00,000 போலியான செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது. இது செயலிகள் ப்ளே ஸ்டோரில் நுழைவதைப் பொறுத்து ஸ்கேன் செய்கிறது. ஆனால், இது புதிய அம்சமாதலால், போலி செயலிகள் எப்படியாவது இதிலிருந்து தப்பி விடுகின்றன. பின்வரும் வழிமுறையை பின்பற்றி அந்த போலி செயலிகளை எளிதில் கண்டறியலாம்.
அதிக தேடல் முடிவுகள்
பெரும்பாலான போலி செயலிகள், உண்மையானவற்றை போலவே ஐகான், பெயர் முதலியவற்றை வடிவமைக்கின்றன. எனவே தேடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட முடிவுகள் கிடைக்கும் போதே நீங்கள் அலர்ட் ஆகிவிட வேண்டும்.இந்த போலி செயலிகளை பற்றி அறியாத பயனர்களை ஏமாற்ற , இந்த எளிதான மற்றும் விரைவான வழியை வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
செயலின் பெயர் மற்றும் டெவலப்பர்கள்
செயலியின் பெயர் மற்றும் அதன் டெவலப்பர்களை சரிபார்ப்பது போலிகளில் இருந்து எளிதில் தப்பிக்க உதவும். சமீபத்தில் ஒரு போலியான செயலி வாட்ஸ்ஆப் வை போல வாட்ஸ்ஆப் அப்டேட் என்ற பெயரில் வந்தது. இதை கூட எளிதில் கண்டறிந்து விடலாம். ஸ்விப்ட்கீ என்ற செயலி அதே பெயரில் வந்தது. ஆனால் டெவலப்பர் பெயரை (டிசைனர் சூப்பர்மேன்)வைத்து கண்டறிந்து நீக்கப்பட்டது. உண்மையில் அந்த செயலியை உருவாக்கியது ஸ்விப்ட்கீ என்ற நிறுவனம் மற்றும் அந்த செயலியின் உரிமையாளர் மைக்ரோசாப்ட்.
டவுன்லோடு எண்ணிக்கை
எவ்வளவு பேர் இந்த செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தார்கள் என்பதை வைத்தும் போலியான செயலிகளை கண்டறியலாம். போலியான செயலிகள் அடிக்கடி கண்டறிந்து நீக்கப்படுவதால் பெரும்பாலும் அதிக டவுன்லோடு எண்ணிக்கை இருக்காது.
உங்க ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் SAFE-ஆ.? UNSAFE-ஆ .? கண்டுபிடிப்பது எப்படி?
செயலிக்கான விளக்கம்
போலியான செயலிகளை உருவாக்குபவர்கள் , செயலியை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தேவையான விவரங்களை தரமாட்டார்கள். அப்படியே விளக்கம் இருந்தாலும் அவை மொழி தவறுகளுடன், சரியானதாகவும் இருக்காது.
ஸ்கிரீன்சாட்
பொதுவாக போலி செயலிகளை உருவாக்குபவர்கள், உண்மையான செயலிகள் ப்ளேஸ்டோரில் பயன்படுத்தும் அதே ஸ்கிரீன்சாட்களை தான் பயன்படுத்துவர். அதை சரியாக கவனிக்க வேண்டும். Swiftkey செயலியை போலியாக உருவாக்கியவர்கள் அனைத்து புகைப்படங்களையு அச்சுஅசலாக பயன்படுத்திய போதும், 'typing like flying Swift' என்ற சொற்தொடரை கூட விட்டுவைக்கவில்லை.
ரிவியூ (Review)
பயனர் பதிவிடும் ரிவியூக்கள் மூலம் அந்த செயலி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை ஓரளவிற்கு யூகிக்கமுடியும். இதுவே போலி செயலிகளை கண்டறிய உள்ள மிக சுலபமான வழி.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.