Home
News

ஏப்ரல் 1 முதல் அதிக கட்டணம்.. FASTag வைத்து இருக்கும் கார், ஜீப், வேன் ஓனர்கள் அலெர்ட்.. NHAI அறிவிப்பு!

என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India) ஆனது வரவிருக்கும் 2026-27 நிதியாண்டிற்கான ஃபாஸ்டாக் ஓராண்டு பாஸ் கட்டணத்தை (FASTag Annual Pass Price) திருத்தி உள்ளது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட உத்தரவின்படி, வணிக நோக்கமற்ற வாகன பயனர்கள் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரு பாஸுக்கு ரூ. 3000 க்கு பதிலாக ரூ. 3075 செலுத்த வேண்டும்.

நினைவூட்டும் வண்ணனும் அதிகப்படியான சுங்க கட்டணங்களிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களுடைய பயணத்தை எளிதாக்கவும், ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் ஆனது கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் கீழ், வணிக நோக்கத்திற்காக பதிவுசெய்யப்பட்ட வாகனம் (கார், ஜீப் மற்றும் வேன்) வைத்திருப்பவர் மற்றும் செயல்பாட்டு ஃபாஸ்டாக் வைத்திருக்கும் ஒருவர் இந்த ஒராண்டு பாஸுக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

ஏப்ரல் 1 முதல் அதிக கட்டணம்.. NHAI அறிவிப்பு!

இதன் கீழ் ஒவ்வொரு டோல் பிளாசாவிலும் விதிக்கப்படும் கட்டணத்தை பொருட்படுத்தாமல், இது ஒரு வருடத்திற்கு அல்லது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எந்த டோல் பிளாசா வழியாகவும் 200 ட்ரிப்களுக்கு செல்லுபடியாகும். ராஜ்மார்க்யாத்ரா மொபைல் ஆப் அல்லது என்எச்ஏஐ வலைத்தளத்திலிருந்து ஃபாஸ்டாக் ஓராண்டு பாஸை வாங்கலாம்.

தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம் - திருத்தம்) விதிகள், 2025 இன் படி, வருடாந்திர பாஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. இதன் விளைவாகவே ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த ஃபாஸ்டாக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இப்போதைக்கு எத்தனை பேர் வருடாந்திர பாஸ்களை பயன்படுத்துகிறார்கள்? சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் (MoRTH) உள்ள தரவுகளின்படி, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை பயனர்கள் தற்போது வருடாந்திர பாஸ் மூலம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துகிறார்கள்

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் - தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கில் பதிவுசெய்யப்பட்ட மொத்த கார் பரிவர்த்தனைகளில் (வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு) நான்கில் ஒரு பங்கு அல்லது சுமார் 28% இப்போது ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 2016 இல் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 11.86 கோடி ஃபாஸ்டாக் கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை இந்த தரவு காட்டுகிறது.

இதில், நாடு முழுவதும் சுமார் 5.9 கோடி ஃபாஸ்டாக் கள் செயலில் உள்ளன மற்றும் தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்களில் மின்னணு கட்டண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயனர் கட்டணத்தில் 98% க்கும் அதிகமானவை ஃபாஸ்டாக் மூலம் வசூலிக்கப்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள எல்லா சுங்கச்சாவடிகளும் இந்த பாஸின் கீழ் உள்ளதா? இல்லை. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் உள்ள சுமார் 1150 டோல்பிளாசாக்களில் மட்டுமே இது செல்லுபடியாகும். மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் விரைவுச்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் உள்ள கட்டண பிளாசாக்களில், ஃபாஸ்டாக் ஆனது வழக்கமான ஃபாஸ்டாக் ஆக செயல்படும், மேலும் பொருந்தக்கூடிய பயனர் கட்டணங்களும் இருக்கும்.

ஃபாஸ்டாக் ஓராண்டு பாஸ் அனைவருக்கும் கட்டாயமா? இல்லை. வருடாந்திர பாஸை தேர்வு செய்யாத பயனர்களுக்கு தற்போதுள்ள ஃபாஸ்டாக் அமைப்பின் கீழ் தொடர்ந்து இயங்குவர்கள். வருடாந்திர பாஸ் 200 பயணங்களை முடித்தவுடன் அல்லது செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து, தானாகவே வழக்கமான ஃபாஸ்டாக் க்கு மாறும். இருப்பினும் பயனர்கள் இந்த வருடாந்திர பாஸை மீண்டும் மீண்டும் வாங்கலாம்.


Article Corrections

Changed Article Title and Image
Best Mobiles in India

English summary
FASTag Annual Pass Price Increased By NHAI From April 1 Car Jeep Van Users to Pay Rs 3075
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X