சரசரவென குறைந்த ஏசர் 5ஜி போன் விலை.. 64எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்?
அமேசானில் தளத்தில் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி (Acer Super ZX 5G) விலை குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி ஸமார்ட்போன் முன்பு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசானில் இந்த ஏசர் போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Acer Super ZX 5G Specifications): ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி போன் 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2400 பிக்சல்கள், 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக இந்த போனில் கேமிங் பிரியர்களுக்கான ஹைப்பர்என்ஜின் (HyperEngine) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல் தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் இந்த ஏசர் போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
ஏஐ இமேஜ் என்ஹான்சர் (AI Image Enhancer), நைட் பூஸ்ட் (Night Boost)போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த ஏசர் போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
லூனார் ப்ளூ (Lunar Blue), கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் காஸ்மிக் கிரீன் (Cosmic Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








