Home
News

WhatsApp அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு கூட WhatsApp வழியாக மெசேஜ் அனுப்பும் வசதி வெளியானது.. எப்படி?

வாட்ஸ்அப் அக்கவுண்ட் (WhatsApp Account) இல்லாதவர்களுக்கு கூட வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் அனுப்ப அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை, வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த அம்சம் - கெஸ்ட் சாட்ஸ் (Guest Chats) என அழைக்கப்படுகிறது. இது எப்படி வேலை செய்யும்? இதோ விவரங்கள்:

இந்த அம்சம் - வாட்ஸ்அப்பில் இல்லாத பயனர்கள், ஒரு பாதுகாப்பான வெப் லிங்க் (Secure web link) வழியாக சாட்டில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் வாட்ஸ்அப் வழியாக சாட் செய்ய ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டிய அவசியம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

WhatsApp அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு கூட WhatsApp வழியாக மெசேஜ்!

இத்தகைய கெஸ்ட் சாட்கள் ஒரு என்க்ரிப்ஷன் கீயை (encryption key) உருவாக்குவதற்கான தனித்துவமான அடையாளங்காட்டியை (Unique identifier) பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது வாட்ஸ்அப் தளத்தில் நடக்கும் சாதாரண உரையாடல்களுக்கு பயன்படுத்தும் அதே எண்ட்-டு-எண்ட் குறியாக்கத்தை (End-to-end encryption) செயல்படுத்துகிறது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் (WABetaInfo) சமீபத்திய அறிக்கையானது, இந்த புதிய அம்சம் (கெஸ்ட் சாட்) பல ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கு அணுக கிடைப்பதாகவும், இது அந்தந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம்களுக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் (Latest WhatsApp Beta Update) உடன் கிடைப்பதாகவும் கூறுகிறது.

கெஸ்ட் சாட் அம்சத்தின் கீழ் ஒரு தற்காலிக விருந்தினர் அமர்வை (Temporary guest session) உருவாக்க முடியும். இதில் பெறுநர்கள், ஒரு முழு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை உருவாக்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு பேஸிக் மெசேஜிங் செயல்பாடு (Basic messaging functionality) செயல்படுத்தப்படும். கெஸ்ட் சாட்ஸ் மூலம், "விருந்தினர் பங்கேற்பாளர்கள்" (கெஸ்ட் பார்ட்டிசிப்பென்ட்ஸ்) பகிரப்பட்ட லிங்க் அல்லது இன்விடேஷன் மூலம் சாட்டில் சேரலாம்.

அவர்கள் சாட்டில் நுழைந்ததும், வாட்ஸ்அப்பில் பதிவு செய்யாமல் அந்த சாட்டிலேயே மெசேஜ்களை அனுப்பலாம் மற்றும் பெறலாம். இத்தகைய கெஸ்ட் யூசர்களுடனான சாட்களில் கெஸ்ட் லேபிள் (Guest Label) இருக்கும், இது கெஸ்ட் பங்கேற்பாளருக்கு பதிவுசெய்யப்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லை என்பதை எளிதாக அடையாளம் காண உதவும்.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் படி, இன்வைட் ஏ பிரெண்ட் (Invite a Friend) பிரிவில் இருந்தோ அல்லது ஆப்பிற்குள் உள்ள காண்டாக்ட் லிஸ்ட்டின் கீழிருந்தோ ஒரு கெஸ்ட் லிங்க்-ஐ உருவாக்கலாம். உருவாக்கப்பட்டவுடன், அந்த லிங்க்-ஐ எஸ்எம்எஸ் வழியாக அனுப்பலாம். இமெயில் அல்லதுவேறு மெசேஜிங் ஆப் வழியாகவும் கூட "காப்பி" செய்து அனுப்பலாம். அந்த லிங்க்-ஐ பெறுபவர்கள், அதை ஒரு மொபைல் அல்லது டெஸ்க்டாப் ப்ரவுஸர் வழியாக திறக்கலாம்; வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை உருவாக்கமலேயே மெசேஜ் செய்யலாம்,

கெஸ்ட் சாட்ஸ் ஆனது ஒரு தற்காலிக மெசேஜிங் சொல்யூஷன் என்றும், எனவே வரையறுக்கப்பட்ட அம்சங்களை மட்டுமே ஆதரிக்கின்றன என்றும் டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ குறிப்பிடுகிர்து. எடுத்துக்காட்டாக, இதுபோன்ற சாட்களில் க்ரூப் சாட்கள், மீடியா ஷேரிங் அல்லது போட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்கள், ஜிப்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்கள் போன்ற அம்சங்கள் கிடைக்காது. கூடவே வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்கும் கிடைக்காது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் படி, வழக்கமான வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை போலவே கெஸ்ட்களையும் பிளாக் செய்யலாம். கெஸ்ட் சாட்கள் வாட்ஸ்அப் தளத்தின் முழுமையான குறியாக்க பாதுகாப்புகளை பராமரிப்பதாக கூறப்படுகிறது. ஒரு கெஸ்ட் உரையாடலில் சேரும்போது, ​​அந்த சாட்க்கான என்க்ரிப்ஷன் கீயை உருவாக்க பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியை வாட்ஸ்அப் வெப் உருவாக்குவதாகவும் டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ குறிப்பிடுகிறது.

மேலும் டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, கெஸ்ட் சாட் களும் 10 நாட்கள் செயலற்ற நிலைக்கு பிறகு தானாகவே காலாவதியாகிவிடும். உரையாடல் காலாவதியானால், அதே நபருடன் மெசேஜ் அனுப்புவதை தொடர மறுபடியும் ஒரு புதிய லிங்க்-ஐ உருவாக்க வேண்டும். இந்த அம்சம் முதலில் கடந்த அக்டோபர் 2025 இல் உருவாக்கத்தில் இருப்பதாக தெரியவந்தது. அந்த நேரத்தில் பீட்டா சோதனையாளர்களுக்கு கூட இது கிடைக்கவில்லை. இப்போது வெளியாகியுள்ளது; விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Guest Chats Allow Users to send messages to who do not have WhatsApp account How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X