பப்ஜி மொபைல் கேம் முற்றிலும் தடை: இனி சுத்தமா இயங்காதா?

|

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர். ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்துள்ளது.

ஏணையோர் தங்களது

பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டனர். வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டோ அல்லது நண்பர்களோடு அமர்ந்து கொண்டோ திடீரென ஒருவர் அவனை சுடு மெடிகிட் கொண்டுவா அப்படி இப்படி என காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கத்தும் நிகழ்வையும் நாம் பார்த்திருப்போம்.

விளையாட்டில் பலரும் தங்களை

பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொண்டார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பப்ஜியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பெற்றோர்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி வந்தனர். எனவே கடந்த மாதம் பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பப்ஜி தடையால் ஏணையோர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

BSNL வழங்கும் ரூ.1,999 திட்டம் தான் இப்போ டாப்.. நம்ப முடியாத 425 நாள் வேலிடிட்டி.. இன்னும் நிறைய..BSNL வழங்கும் ரூ.1,999 திட்டம் தான் இப்போ டாப்.. நம்ப முடியாத 425 நாள் வேலிடிட்டி.. இன்னும் நிறைய..

 இந்த தடை

குறிப்பாக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இந்திய அரசு சுமார் 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்குள்ளேயே பெரும்பாலான செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து காணமால் போயின. அதில் பிரபலமான ஆன்லைன் மல்டிப்ளேயர் விளையாட்டான பப்ஜியும் ஒன்று.

பொறுப்பையும் ஏற்கும் என

இந்த பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும். நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் இதை நீக்குவதாக அறிவித்திருந்தது. அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறுவுகளையும் விடுத்து தாமே முழு பொறுப்பையும் ஏற்கும் என அறிவித்திருந்தது

ஸ்டோரிலிருந்து

இந்த நிலையில் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், எற்கெனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வந்தனர். ஆனால் தற்போது ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு அக்டோபர் 30-ம் தேதி முதல் இயங்காது என நிரந்தர தடை விதித்துள்ளது மத்திய அரசு.

பப்ஜி நிறுவனம் கூறுகையில்,

மேலும் இதுபற்றி பப்ஜி நிறுவனம் கூறுகையில், டென்சென்டுடனான எங்கள் உறவை முடித்துக்கொள்வதன் மூலம் இந்தியாவில் இந்த விளையாட்டை நிலைப்படுத்த விரும்பினோம். பயனர்களின் தரவுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம். இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம். ஆனால் எங்களது தனியுரிமைக் கொள்கையின்படி அனைத்து பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானது. இந்தியாவின் இந்த முடிவுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
PUBG Mobile to Stop Access for Users in India from Friday and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X