Just In
- 40 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Movies
ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்
- News
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
75-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 அம்சங்கள் கொண்ட புதிய Vu டிவி அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
Vu நிறுவனம் இந்தியாவில் புதிய Vu 75 QLED Premium TV மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த பிரீமியம் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டால்பி விஷன், 75-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய டிவி மாடல் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

இப்போது இந்த புதிய Vu டிவி மாடலின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதன்படி Vu 75 QLED பிரீமியம் டிவியின் விலை ரூ.1,19,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த டிவி மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைசெய்யப்படுகிறது. அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்குபவர்களுக்குபிளிப்கார்ட் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட Vu 75 QLED பிரீமியம் டிவி ஆனது 75-இன்ச் 4கே டிஸ்பிளே மற்றும் 3,840x2,160 பிக்சல்தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் MEMC (Motion Estimation and Motion Compensation) தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது இந்த புதிய டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.

Vu 75 QLED பிரீமியம் டிவியானது சார்கோல் கிரே மெட்டல் ஃப்ரேம் மற்றும் 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு HDR10 மற்றும் HLG தொழில்நுட்பத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான பிரீமியம் டிவி மாடல்.

அதேபோல் இந்த புதிய டிவி மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த Vu 75 QLED பிரீமியம் டிவி மாடல் கூகுள் பிளே ஸ்டோர் அணுகலை வழங்குகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த பிரீமியம் டிவி.

குறிப்பாக இந்த Vu 75 QLED பிரீமியம் டிவி மாடல் 40W ஆதரவு கொண்ட நான்கு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு கூகுள் அசிஸ்டண்ட் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய டிவி மாடல்.

Vu 75 QLED பிரீமியம் டிவி புளூடூத் v5.0 ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் கன்ட்ரோலர்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், கீபோர்டு மற்றும் பல சாதனங்களுடன் இணைக்கப்படலாம். டூயல்-பேண்ட் வைஃபை, நான்கு HDMI போர்ட்கள், ஆடியோ ஜாக் மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய டிவிமாடல்.

இந்த புதிய டிவி மாடல் உள்ளமைக்கப்பட்ட Chromecast உடன் வருகிறது. பின்பு Netflix, Amazon Prime வீடியோ,ஹாட்ஸ்டார் மற்றும் YouTube போன்ற செயலிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான டிவி மாடல். இதுதவிர பல்வேறு புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த Vu 75 QLED பிரீமியம் டிவி.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470