இந்தியாவில் Toshiba 4K QLED ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்.!

|

ஜப்பான் நிறுவனமான தோஷிபா இந்தியாவில் தரமான 4K QLED ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இதில் எம்550, சி350 (M550, C350) என இரு வகைகள் அடங்கும்.

தோஷிபா

தோஷிபா

தோஷிபா அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் ஜூலை 22-ம் தேதி(நேற்று) முதல் பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக இந்த புதிய தோஷிபா டிவிகள் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை விட சிறப்பான அம்சங்கள் மற்றம் அட்டகாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!

எம்550 (M550) தொடர் ஸ்மார்ட் டிவிகள்

எம்550 (M550) தொடர் ஸ்மார்ட் டிவிகள்

எம்550 (M550) தொடர் ஸ்மார்ட் டிவிகள் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகிய இரு அளவுகளில் கிடைக்கும். குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில்இந்த ஸ்மார்ட் டிவிகளை ரூ.54,990 முதல் வாங்கலாம்.

அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சி350 (C350) தொடர் ஸ்மார்ட் டிவிகள்

சி350 (C350) தொடர் ஸ்மார்ட் டிவிகள்

சி350 தொடர் ஆனது 43-இன்ச், 55-இன்ச் ஆகிய இரு அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.29,990-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அமேசான் தளத்தில் 2 வருட கூடுதல் உத்தரவாதத்துடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

 எம்550 (M550) ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

எம்550 (M550) ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

முதலில் இப்போது தோஷிபா எம்550(M550) ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்களைப் பார்ப்போம். அதாவது இந்த தோஷிபா எம்550 தொடர் டால்பி விஷன்,எச்டிஆர் ஆதரவு, கூகுள் டிவி, கேம் மோட், Quantum dot, Full Array Local Dimming, 2.1 Bazooka Woofer, Far Field Voice Control, Regza Engine 4K Pro AI Picture Optimizer போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.

பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!

சூப்பர் ஆடியோ

சூப்பர் ஆடியோ

இந்த புதிய தோஷிபா எம்550 ஸ்மார்ட் டிவிகளில் தரமான Bazooka Woofer உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த பிரத்யேக 20 வாட்ஸ் சப்-வூஃபர் டிவிகளின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுதவிர இந்த ஸ்மார்ட் டிவிகளின் இடது மற்றும் வலது புறம் 10 வாட்ஸ் ஸ்பீக்கர் உள்ளன. மொத்தமாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் 40W சக்திவாய்ந்த ஒலித்திறனை வெளிப்படுத்துகின்றன.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!

வாய்ஸ் கன்ட்ரோல்

வாய்ஸ் கன்ட்ரோல்

தோஷிபா எம்550 ஸ்மார்ட் டிவிகள் ஃபார் பீல்ட் வாய்ஸ் கன்ட்ரோலைக் (Far Field Voice Control) கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் குரலால் டிவியை கட்டுப்படுத்தவும், ஒலியளவை மாற்றவும், பிடித்த உள்ளடக்கத்தை பார்க்கவும் முடியும்.

PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?

தோஷிபா சி350 (சி350) ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

தோஷிபா சி350 (சி350) ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

தோஷிபா சி350 ஸ்மார்ட் டிவி மாடல்கள் ரெக்ஸா எஞ்சின், டால்பி விஷன், கேம் மோட், பெசல்-லெஸ் டிசைன், டால்பி அட்மோஸ் போன்ற பல அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

ஆப்பிள் ஹோம் கிட்

ஆப்பிள் ஹோம் கிட்

தோஷிபா சி350 ஸ்மார்ட் டிவி மாடல்கள் கூகுள் இயங்குதளம் மற்றும் கூகுள் உள்ளடக்கங்களுடன் வருகிறது. பின்பு இவற்றில் குரோம்காஸ்ட் ஆதரவு, ஆப்பிள் ஹோம் கிட்,ஆப்பிள் ஏர் பிளே போன்ற ஆதரவுகளும் உள்ளன. இதுதவிர விர்ச்சுவல் ரெப்ரெஷ் ரேட் (VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் போன்ற வசதிகளும் சி350 ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெற்றுள்ளன.

வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

  இன்பினிக்ஸ் டிவி

இன்பினிக்ஸ் டிவி

தோஷிபா அறிமுகம் செய்த விலை உயர்ந்த டிவியை விட கம்மி விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க நினைப்பவர்கள் இந்த Infinix 32Y1 ஸ்மார்ட் டிவியை பாருங்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix 32Y1 எனும் ஸ்மாரட் டிவியை அறிமுகம் செய்தது. அதாவது இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.8,999-ஆக உள்ளது. குறிப்பாக பிளப்கார்ட் தளத்தில் இந்த டிவியை வாங்க முடியும்.

  இன்பினிக்ஸ் டிவி அம்சங்கள்

இன்பினிக்ஸ் டிவி அம்சங்கள்

குவாட்-கோர் பிராசஸர் வசதி, 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1200 (Typ) கான்ட்ராஸ்ட் ரேஷியோ, Chromecast ஆதரவு, டால்பி ஆடியோ ஆதரவுடன் 20W ஸ்பீக்கர் அமைப்பு போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த 32-இன்ச் இன்பினிக்ஸ் டிவி.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Toshiba 4K AI and QLED Google TV Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X