Home
Gadgets

நாளை இந்தியாவில் களமிறங்கும் புதிய சியோமி டிவிகள்.. டால்பி அட்மாஸ்.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் நாளை (ஏப்ரல் 15) சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 (Xiaomi TV S Mini LED Series 2026) மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சீரிஸில் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் என ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அமேசான், எம்ஐ.காம் போன்ற தளங்களில் இந்த டிவிகள் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த டிவிகளின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 அம்சங்கள் (Xiaomi TV S Mini LED Series 2026 specifications): புதிய சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் 4கே டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். 3840 × 2160 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), 94 சதவீதம் டிசிஐ பி3 கலர் உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த புதிய சியோமி டிவி மாடல்களில் இருக்கும்.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புதிய சியோமி டிவிகள்..  எந்த மாடல்?

சியோமி அறிமுகம் செய்ய உள்ள 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் மாடல்கள் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த புதிய சியோமி ஸ்மார்ட்டிவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதுவும் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 85-இன்ச் மற்றும் 98-இன்ச் மாடல்கள் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகள் மேம்பட்ட திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த புதிய டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் வெளிவரும். ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கும்.

பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவிகளில் உள்ளன. ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) போன்ற அம்சங்களும் இந்த புதிய சியோமி மாடல்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புதிய சியோமி டிவிகள்..  எந்த மாடல்?

குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் உடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவிகளில் பல்வேறு ஆடியோ அம்சங்களும் உள்ளன.

மேலும் எச்டிஎம்ஐ போர்ட், வைஃபை 5, புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். இந்த டிவிகளின் ஆரம்ப விலை ரூ.70,000 என தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photos credits: mstore, mi.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Mini LED Series 2026 to be launched in India tomorrow: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X