புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம "இது" இருக்கானு கேளுங்க! இல்லனா வாங்காதீங்க!

|

"இது தான் மார்க்கெட்லயே லேட்டஸ்ட் மாடல்ங்க! சூப்பரான பொருளுங்க! இதுல எல்லாமே இருக்குங்க.. New Fridge-ங்க!" - அப்படி இப்படினு ஆயிரம் சொல்லுவாங்க!

அதையெல்லாம் அப்படியே நம்பி, கண்களை மூடிக்கொண்டு கொடுக்கும் பொருளை வாங்கிக்கொண்டு வரும் பழக்கம் / வழக்கம் உங்களிடம் இருந்தால்.. தயவு செய்து அதை உடனே மாற்றிக்கொள்ளவும்!

குறிப்பாக வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் போது!

குறிப்பாக வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் போது!

ஏனெனில் டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், க்ரைண்டர், மிக்ஸி போன்றவைகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றக்கூடிய பொருட்கள் அல்ல, நிச்சயமாக குறைந்தது 4 முதல் 8 ஆண்டுகளாவது பயன்படுத்துவோம் அப்படி இருக்கும் போது, அந்த பொருளை மிகவும் கவனமாக பார்த்து வேண்டியது அவசியமாகிறது.

ஒருவேளை நீங்கள் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்க திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால், "ஒரு முக்கியமான விஷயத்தை" மறந்தும் கூட கேட்காமல் இருக்க வேண்டாம்! ஒருவேளை "அந்த முக்கியமான விஷயம்" நீங்கள் வாங்கும் ஃப்ரிட்ஜில் இல்லை என்றால்.. அதை வாங்காமல் இருப்பதே நல்லது!

Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!

அப்படி என்ன முக்கியமான விஷயம்?

அப்படி என்ன முக்கியமான விஷயம்?

அது, மின்சார கட்டணம் தொடர்பான நன்மைகளை வழங்கும் - Vacation Mode (வேக்கேஷன் மோட்) எனப்படும் ஒரு நவீன ரெஃப்ரிஜிரேட்டர் தொழில்நுட்பம் ஆகும்.

லேட்டஸ்ட் ஆக அறிமுகமான பிரிட்ஜுகள் பல வகையான நவீன அம்சங்களுடன் வருகின்றன. அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் என்றால் அது - வேக்கேஷன் மோட் தான்!

நாம் இங்கே பேசும் வேக்கேஷன் மோட் ஆனது, நீண்ட நேரம் தங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும் நுகர்வோர்களுக்கு உதவும் ஒரு அம்சமாகும். இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த அம்சம் உங்கள் மின்சார கட்டணத்தை சேமிக்க உதவும்.

Fridge-களில் உள்ள Vacation Mode எப்படி வேலை செய்யும்?

Fridge-களில் உள்ள Vacation Mode எப்படி வேலை செய்யும்?

இந்த வேக்கேஷன் மோட் ஆனது, நீங்கள் விடுமுறை காலத்தில் அல்லது இரண்டு வாரங்களுக்கு மேலான "வணிகம் தொடர்பான பயணத்தில்" இருக்கும்போது, ​​உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் மின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தின்கீழ், உற்பத்தியாளர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன அம்சமாகும்.

இது செயல்பாட்டில் இருக்கும் போது, குளிர்சாதன பெட்டியை "சாதாரணமாக" இயங்க வைக்கும். அதே சமயம் மற்ற கம்பார்ட்மென்ட்களின் (Compartments) வெப்பநிலையை 15 டிகிரி செல்சியஸில் பராமரிக்கும்.

இன்னும் எளிமையாக கூறவேண்டும் என்றால், மூன்று வாரங்களுக்கு மேல் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்கும் பட்சத்தில், இந்த வேக்கேஷன் மோட் ஆனது மின் பயன்பாட்டை குறைக்கும்!

இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

எந்தெந்த Fridge-களில் வேக்கேஷன் மோட் அம்சம் அணுக கிடைக்கும்?

எந்தெந்த Fridge-களில் வேக்கேஷன் மோட் அம்சம் அணுக கிடைக்கும்?

இது பாரம்பரியமான (டிஸ்பிளே அல்லது கண்ட்ரோல் பேனல் இல்லாமல் வரும்) குளிர்சாதன பெட்டிகளுக்கான ஒரு அம்சம் அல்ல. இது டிஸ்ப்ளேக்கள் மற்றும் கண்ட்ரோல் பேனல்கள் கொண்ட நவீன குளிர்சாதன பெட்டிகளுக்கான ஒரு அம்சம் ஆகும்.

இந்த வேக்கேஷன் மோட் ஆனது பெரும்பாலான சைட்-பை-சைட் அல்லது பிரஞ்சு டோர் குளிர்சாதன பெட்டிகளில் அணுக கிடைக்கிறது. பொதுவாக இந்த அம்சம், டிஸ்ப்ளே பேனல், கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றில் வைக்கப்படும் அல்லது இதற்கென தனி பட்டன் இருக்கும்.

எனவே நீங்கள் புதிய பிரிஜ்ட் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அதில் வேக்கேஷன் மோட் அம்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்!

சாதாரண ஃபிரிட்ஜ்களை வைத்து இருப்பவர்களுக்கு எந்த டிப்ஸும் இல்லையா?

சாதாரண ஃபிரிட்ஜ்களை வைத்து இருப்பவர்களுக்கு எந்த டிப்ஸும் இல்லையா?

ஏன் இல்லை? உங்கள் ஃபிரிட்ஜில் வேக்கேஷன் மோட் இல்லை என்றாலும் கூட, சில அடிப்படை "திருத்தங்களை" செய்வதன் வழியாக, குளிர்சாதன பெட்டியால் உண்டாகும் சில தலைவலிகளை நீங்கள் குறைக்க முடியும்!

- நீங்கள் வாரக்கணக்கில் வெளியே செல்வதாக இருந்தால், உங்கள் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் அனைத்து உணவுகள் மற்றும் ஐஸ்களை அகற்றி விடவும்.

- பிரிட்ஜில் இருந்து நீர் கசிவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், மறக்காமல் வாட்டர் வால்வ்-ஐ மூடி வைக்கவும்.

- மறக்காமல் குளிர்சாதன பெட்டிக்கான பவர் சப்ளையை துண்டிக்கவும்

- உள்ளிருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை துடைத்து, கதவுகளைத் திறந்து விடவும். இது துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும்.

Photo Courtesy: LG, Samsung

Best Mobiles in India

English summary
Planning to Buy New Fridge Make Sure it has Vacation Mode Why this feature is important

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X