இந்த Noise ஸ்மார்ட்வாட்சை வாங்க 1 இல்லை நிறைய காரணம் இருக்கு.! கண்ணை மூடிட்டு கூட வாங்கலாம்.!

|

ஸ்மார்ட் வாட்ச்கள் (Smart Watch) மற்றும் ட்ரு வயர்லெஸ் ஸ்டீரியோ (True Wireless Stereo) ப்ளூடூத் (Bluetooth) சவுண்ட் சாதனங்கள் ஆகியவற்றிற்குப் பெயர் போன நாய்ஸ் (Noise) நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சமீப காலமாக இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நாய்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 4 ஜிபிஎஸ் ஸ்மார்ட் வாட்ச்சை (Noise ColorFit Pro 4 GPS Smart Watch) வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் வாட்சில் பெரிய டிஸ்பிளே, பில்ட் இன் ஜிபிஎஸ் (Built-in GPS), ஒரு வாரம் தாங்கக்கூடிய பேட்டரி, ப்ளூடூத் அழைப்பு (Bluetooth Calling) போன்ற பல கவர்ச்சிகரமான அம்சங்கள் உள்ளன. நாய்ஸ் நிறுவனத்தின் முந்தைய அறிமுகங்களான கலர் ஃபிட் ப்ரோ 4 (ColorFit Pro 4), கலர் ஃபிட் ப்ரோ 4 மேக்ஸ் (ColorFit Pro 4 Max), கலர் ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா (ColorFit Pro 4 Alpha) ஆகியவற்றில் இருந்து இது வேறுபட்டிருக்கிறது.

இந்த Noise ஸ்மார்ட்வாட்சை வாங்க 1 இல்லை நிறைய காரணம் இருக்கு.!

இந்த புதிய அறிமுகமான கலர் ஃபிட் ப்ரோ 4 ஜிபிஎஸ்-ஐ தனித்து காட்டும் சிறப்பம்சங்களாக அதன் பெரிய டிஸ்பிளே, ப்ளூடூத் அழைப்புக்கான வசதி மற்றும் பில்ட் இன் ஜிபிஎஸ் ஆகியவை கருதப்படுகிறது. இந்த நாய்ஸ் கலர் ஃபிட் 4 ஜிபிஎஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் இதர அம்சங்கள், இந்திய சந்தையில் இதன் விலை ஆகியவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரூபாய் 2,999 என்ற அறிமுக விலைக்கு இந்திய சந்தையில் விற்பனையை ஆரம்பிக்கும் இந்த நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 4 ஜிபிஎஸ் ஸ்மார்ட் வாட்ச் - ஜெட் பிளாக் (Jet Black), காப்பர் பிரவுன் (Copper Brown), கோல்ட் வைன் (Gold Wine), ஆக்டிவ் ப்ளூ (Active Blue), ஷேடோ பிளாக் (Shadow Black) என்ற ஐந்து நிறங்களில் வருகிறது. தின் பிலிம் ட்ரான்சிஸ்டர் (Thin Film Transistor) கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய 1.85 இன்ச் திரையுடன் வருகிறது.

நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 4 ஜிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்மார்ட் வாட்ச் 240 x 284 பிக்சல் ரெசல்யூசன் (Pixel Resolution) மற்றும் 600 நிட்ஸ் (Nits) பிரைட்னஸ் (Brightness) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சில் இருக்கும் ஜிபிஎஸ் அம்சம் நடைப்பயிற்சி, ரன்னிங் (Running), கடந்த தூரம் (Distance Travelled), வழி (Route) ஆகியவற்றைக் கண்காணிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட் போனுடன் இணைத்து இந்த அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த Noise ஸ்மார்ட்வாட்சை வாங்க 1 இல்லை நிறைய காரணம் இருக்கு.!

மேலும் இந்த ஸ்மார்ட் போனில் உடல் நலத்தைக் கண்காணிக்கும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஹார்ட் ரேட் (Heart Rate), எஸ்பிஒ2 (SpO2), ஸ்லீப் ட்ராக்கிங் (Sleep Tracking), மூச்சுப் பயிற்சி, ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் (Stress Management), பெண்களுக்கான உடல்நல, மாதவிடாய் ட்ராகர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் (Sports Mode) இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ளது.

நாய்ஸின் ட்ரூ சிங்க் தொழில்நுட்பம் (Tru Sync Technology) மூலம் உருவாக்கப்பட்ட ப்ளூடூத் அழைப்பு அம்சம் நிலையான இணைப்பையும், குறைந்த பவர் கன்சம்ப்ஷனுடன் (Power Consumption) வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் உங்கள் ஸ்மார்ட்போனுடன் விரைவாகப் பேர் ஆகும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரி லைப்-ஐ பொறுத்தவரை இந்த கலர் ஃபிட் ப்ரோ 4 ஜிபிஎஸ்-இன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரை நீடிக்கும் என்று அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

ப்ளூடூத் அழைப்பு ஆன் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மட்டுமே பேட்டரி நீடிக்குமாம். இந்த புது பட்ஜெட் வாட்சில் மேலும் சில சிறப்பம்சங்களாக ஐபி68 (IP68) தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust and Water Resistance), 250 mAh பேட்டரி மற்றும் நாய்ஸ் ஃபிட் ஆப் சப்போர்ட் (Noise Fit App Support) ஆகியவற்றை கூறலாம். அமேசான் மற்றும் நாய்ஸ் இ-தளத்தில் (Noise e-Store) தற்போது விற்பனையில் இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை உடனே சென்று வாங்குவதற்கு இதற்கு மேலும் காரணங்கள் வேண்டுமா?

Best Mobiles in India

English summary
Noise ColorFit Pro 4 GPS With Bluetooth Calling Launched In India Price and Specification Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X