தள்ளுபடி விலையில் கிடைக்கும் பிரபல நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி: முழு விவரம்.!

|

பிரபலமான நிறுவனமான iFFALCON நிறுவனம் தனது 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு விலையை குறைத்துள்ளது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை பிளிப்கார்ட் தளத்தில் 56 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

எவ்வளவு விலைகுறைப்பு?
அதாவது 40-இன்ச் iFFALCON TCL F53 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது முன்பு ரூ.36,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் பிரபல நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி

ஃபுல் எச்டி ஆதரவு
iFFALCON TCL F53 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி ஆதரவு இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம். அதேபோல் ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ஆதரவைக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

தரமான பிராசஸர்
CA55 x 4 பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த iFFALCON TCL F53 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் மென்பொருள் வசதிக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

1ஜிபி ரேம் வசதி
AI-Picture Engine மற்றும் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டு இந்த அசத்தலான 40-இன்ச் iFFALCON TCL F53 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. மேலும் 1ஜிபி ரேம் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் மைக்ரோ Dimming ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் iFFALCON TCL F53 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேமிங் பயன்களுக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மிக அருமையாக பயன்படும்.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் பிரபல நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி

எச்டிஆர் 10

டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை வழங்குகிறது இந்த iFFALCON ஸ்மார்ட் டிவி. எனவே சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு எச்டிஆர் 10 ஆதரவைக் கொண்டு இந்த 40-இன்ச் iFFALCON TCL F53 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக பட்ஜெட் விலையில் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த iFFALCON TCL F53 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது. அதேபோல் இந்நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
40-inch iFFALCON TCL F53 Smart TV is 56 percent off on Flipkart: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X