ஜி மெயிலில் உள்ள ஷார்ட் கட்ஸ்...!

Posted By:

இன்றைக்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மெயில் எது என்றால் அது ஜி மெயில் தான் எனலாம்.

மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன.

முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.

/<(Search): உங்களுடைய கர்சரை சர்ச் பாக்ஸில் கொண்டு சென்று வைத்திடும்.k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.

j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு - இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்.

ஜி மெயிலில் உள்ள ஷார்ட் கட்ஸ்...!

p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்.o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும்.

u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்.

English summary
this is the article about the gmail keyboard shortcut keys
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot