பிளே ஸ்டோரில் வேறு பெயரில் களம் புகுந்துள்ள ஆபத்தான செயலிகள்.!

தற்போதைய டெக்னாலஜி உலகில் பாதுகாப்பான செயலிகளை கண்டுபிடிப்பதே ஒரு பெரிய சவாலாக உள்ளது.

|

தற்போதைய டெக்னாலஜி உலகில் பாதுகாப்பான செயலிகளை கண்டுபிடிப்பதே ஒரு பெரிய சவாலாக உள்ளது. நமது டிவைசை அட்டாக் செய்யாமல் இருக்கும் செயலிகளை மட்டும் பயன்படுத்தினால் மட்டுமே நல்லது. குறிப்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பிரச்சனைக்கு பின்னர் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் கூட நம்பிக்கையை இழந்துவிட்டன. ஹேக்கர்களின் உதவியால் நமது டேட்டா திருடப்படாமல் இருக்க பாதுகாப்பான செயலிகளை தேடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிளே ஸ்டோரில் வேறு பெயரில் களம் புகுந்துள்ள ஆபத்தான செயலிகள்.!

இந்த நிலையில் கூகுள் பிளேஸ்டோரில் பாதுகாப்பான செயலிகள் என்று விளம்பரத்துடன் பல செயலிகள் புதியதாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செயலிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது கேள்விக்குறியே.

ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறும்போது இதுபோன்ற புதிய செயலிகள் 45 உல்ளதாகவும், ஆனால் இந்த 45 செயலிகளில் ஒருசில மீண்டும் புதிய பெயரில் வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது கூகுள் பிளேஸ்டோரில் பாதுகாப்பற்றது என நீக்கப்பட்ட ஒருசில செயலிகள் பெயரை மற்றும் மாற்றிக்கொண்டு மீண்டும் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறாது.


மீண்டும் பிளேஸ்டோரில் களம் புகுந்துள்ள இந்த செயலிகள், பாதுகாப்பானது என்றும் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்கும் வகையில் இருப்பதாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது. அதேபோல் எம்ஜீ கீபோர்டு, ஸ்டோரேஜ் சுத்தம் செய்தல், செயலிகளை லாக் செய்தல், கால் ரிகார்டர்கள் மற்றும் கால்குலேட்டர் வசதிகளும் இதுபோன்ற செயலிகளில் உள்ளதாம். ஆனாலும் இதன் பின்னணியில் ஆபத்தையும் உணர வேண்டும் என்பது உண்மை. இதுபோன்ற செயலிகளை இன்ஸ்டால் செய்தால் நம்முடைய முக்கிய டேட்டாகள் திடீரென மறைவது, அழிப்பது ஆகியவற்றில் இந்த செயலிகள் ஈடுபடும்.

மேலும் ஒருசில நிறுவனங்கள் 38 செயலிகள் குறித்து விளம்பரங்கள் செய்துள்ளது. இது விளம்பரங்களைப் போல செயல்படுவதற்குப் பதிலாக பல்வேறு மோசமான, ஆபத்தான வலைத்தளங்களுக்கு திசைதிருப்பி விடுகிறது. அறிக்கையின் படி, பயனர்கள் தகவலை தெரிவிக்காமல் பின்னணியில் பல்வேறு யூ.ஆர்.எல் களை ஏற்றும்போது, பயன்பாடுகள் பெரும் அளவுகளை நுகரும்.

இந்த யூ.ஆர் எல்.கள் குறிப்பாக பிளாக்கை கொண்டு செல்கின்றன. இதனால் அந்த பிளாக்குகளுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதுபோன்ற செயலிகளை பெரும்பாலும் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஜப்பான், எகிப்து, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடனில் தான் அதிகம் நடமாடுகிறது.

பிளே ஸ்டோரில் வேறு பெயரில் களம் புகுந்துள்ள ஆபத்தான செயலிகள்.!

இதுபோன்ற தீங்கு செய்யும் செயலிகள் கவர்ச்சியான டைட்டிலுடன் வெளிவருகிறது. சுவிங் கேம்ஸ், பியானா கேம், கேம் பில்லியர்ட்ஸ், ஜெனரல் கல்ச்சர்ஸ் மற்றும் ஸ்விங் கேம் ஆகிய பெயர்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவையெல்லாம் பலர் டவுன்லோடு செய்த ஆபத்தான செயலிகள் ஆகும். நாம் கூறுவது என்னவெனில் இதுபோன்ற செயலிகளை கண்டறிந்து அவற்றை டவுண்லோடு செய்யாமல் பாதுகாப்பான, தேவையான செயலிகளை மட்டுமே டவுன்லோடு செய்து உங்கள் டேட்டாவை பாதுகாத்து கொள்ளுங்கள்.
Best Mobiles in India

English summary
Android Malware apps are returning on Play Store under a different name ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X