ஸ்மார்ட்போன் வழியாக இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி.?

|

உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வலைத்தளத்தை உருவாக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா.? ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு என இரண்டு இயங்குதளங்களுக்குமே ஒரு குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி15 நிமிடங்களுக்கும் குறுகிய நேர இடைவெளியில் இதை செய்ய முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.?

அக்ட்மின் வெப்சைட் பில்டர் ஆப் (Akmin Website Builder app) ஆனது உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கக்கூடிய ஒரு இலவசப் பயன்பாடாகும். நீங்கள் இந்த பயன்பாட்டைப் கொண்டு ஒரு தொழில்முறை தேடு வலைத்தளத்தை உருவாக்க முடியும். இந்த பயன்பாடானது, நீங்கள் உருவாக்கிய இணையதளத்திற்கு வடிவங்கள், புகைப்பட ஆல்பம், ஷாப்பிங் கார்ட் போன்றவை போன்ற பயனுள்ள அம்சங்களைச் சேர்ப்பதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது.

ஒரு முழுமையான செயல்பாட்டு வலைத்தளம்

ஒரு முழுமையான செயல்பாட்டு வலைத்தளம்

குறிப்பாக, இந்த தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சகாப்தத்தில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஹோபோன் அல்லது ஐபோன் பயன்படுத்தி ஒரு முழுமையான செயல்பாட்டு வலைத்தளம் உருவாக்குவது என்பது சாத்தியமாகவே உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து வலைத்தளத்தை உருவாக்கம் செய்ய வேண்டியது மட்டும் தான்.

எந்த சாதனத்திலும்

எந்த சாதனத்திலும்

இந்த அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் வலைத்தளம் எந்த சாதனத்திலும் நன்றாக வேலை செய்யும், அதாவது இது ஒரு மடிக்கணினி, டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் என எதிலும் சிறப்பாக வேலை செய்யும்.

அனைத்து பயனுள்ள அம்சங்களுடனும்

அனைத்து பயனுள்ள அம்சங்களுடனும்

அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாடானது மிகவும் எளிமையான ஒரு ஆப் ஆகும். இதன் மூலம் சிறிய வியாபார உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்திற்கான ஒரு வலைத்தளத்தை அனைத்து பயனுள்ள அம்சங்களுடனும் உருவாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும்.

சிறிய அல்லது வீட்டு வணிக உரிமையாளர்

சிறிய அல்லது வீட்டு வணிக உரிமையாளர்

மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த தளத்தில் ஒரு ஷாப்பிங் கார்ட் வண்டியைச் சேர்ப்பதும் சாத்தியம் தான். இந்த அம்சம் குறிப்பாக சிறிய அல்லது வீட்டு வணிக உரிமையாளர்களுக்கு எந்த இணைய வடிவமைப்பாளர் அல்லது ஒரு நிறுவனத்தின் உதவும் இல்லாமல் சொந்த வலைத்தளம் கிடைக்கும் வாய்ப்பு அதிகப்படுத்தும்.

டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும்

டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும்

இந்த பயன்பாட்டின் சிறப்பம்சமாக எந்தவொரு குறியீடும் இல்லாமல் ஒரு வலைத்தளம் உருவாக்க முடியும் என்பது தான். நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும், டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும், அதேபோல தனிப்பயனாக்கவும், வலைப்பக்கத்திற்கான உள்ளடக்கத்தையும் படங்களையும் சேர்க்கலாம், பின்னர் நிமிடங்களில் உங்கள் வலைத்தளத்தை வெளியிடவும்.

பதிவிறக்கம்ஆண்ட்ராய்டு

பதிவிறக்கம்ஆண்ட்ராய்டு

இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் மூலம் முறையே உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் இதை www.akmin.net என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் பிசி அல்லது லேப்டாப்பில் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Create a website for free using your smartphone with this app. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X