அமெரிக்காவில் இளம்அறிஞர் விருது வாங்கிய நம்ம ஊர் பொண்ணு.!

மேலும் ராராஜலட்சுமி தெரிவித்தது என்னவென்றால், நான் எப்போதுமே சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக்ஞைகளை கண்டறிவதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பினேன்.


இப்போது உள்ள இளைஞர்கள் தொழில்நுட்ப துறையில் பல்வேறு சாதனைகளை படைக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். இந்த பெண் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக்கத்தில் பி.எச்.டி ஆராய்சி படிப்பு படித்து வருகிறார்.

Advertisement

மதுரையை சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில்நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும். அதுவும் ஒருவரின் உடலை 'சோனர்" சாதனம் தொடாமலேயே கண்டுபடிக்க முடியுமாம்.

Advertisement

மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது

ராஜலட்சுமியின் இந்த புதிய கண்டுபிடிக்காக, 2018-ஆம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது கிடைத்து உள்ளது. இந்த பெண் வாங்கிய விருது 5ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது.

புதிய தொழில்நுட்பம்:

ராஜலட்சுமி கண்டுபடித்த இந்த புதிய தொழில்நுட்பம் உயிராபத்தான உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னை

ராராஜலட்சுமி நந்தகுமார் சென்னையில் படித்து கம்ப்யூட்டர் அறிவியில் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர், குறிப்பாக இவர் சாதராண ஸ்மார்ட்போனை சோனர் சாதனமாக மாற்றி புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார், இந்த சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழல்நுட்பம் என்று கூறப்படுகிறது.

இதயத்துடிப்பு

மேலும் ராராஜலட்சுமி தெரிவித்தது என்னவென்றால், நான் எப்போதுமே சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக்ஞைகளை கண்டறிவதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பினேன். ஏனென்றால் அவைதான், உடல் நலம் சார்ந்த
கருவிகளுக்கு சாதாரணமாக பயன்படும் சமிக்ஞைகளாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English Summary

India Born Woman Student To Get Young Scholar Award In US: Read more about this in Tamil GizBot