ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் ரூ.289 திட்டம்.!

ஏர்டெல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏர்டெல் நிறுவனம் இப்போது ஜியோவிற்கு போட்டியாக ரூ.289 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

Advertisement

அதன்படி ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதே விலையில் மற்ற நிறுவனங்கள் அறிவித்துள்ள சிறப்பு சலுகைகளைப் பார்ப்போம்.

Advertisement

ஐடியா:

ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.295 ப்ரீபெய்ட் திட்டத்தில் 5ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ:

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் ரூ.449 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகயை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English Summary

Airtel launches Rs 289 prepaid plan with unlimited voice calls 1GB data: Read more about this in Tamil GizBot