அடடே., வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கா: சேமிப்புக்கான சிறந்த வழி


வாட்ஸ் அப் சேட்டிங்கை நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய மில்லியன் கணக்கான பயனர்களுக்கும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி ஆகும்.

Advertisement

வாட்ஸ் அப் மெசேஜ்கள் முக்கியம்

வாட்ஸ்அப் சேட்டிங்கில் முக்கியமான சில தகவல்களை சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை வாட்ஸ்அப் அன்இன்ஸ்டால் ஆனால் மொத்த மெசேஜ்ஜூம் டெலிட் ஆகி விடும். பேக் அப் செய்து வைத்தாலும் மொத்த மெசேஜும் சரியாக வருமா என்றால் அது சந்தேகம் தான். இதையடுத்து தற்போது வாட்ஸ் அப் மெசேஜை பிடிஅப் ஃபைலாக கன்வர்ட் செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

Advertisement
மெசேஜ்களை சேமிக்க வழி தெரியவில்லையா

வாட்ஸ் அப் சேட்டிங்கை ஸ்கிரீன் சாட் எடுத்து வைத்து சேமித்து வைத்து கொள்வதற்கு பதிலாக, மெசேஜ்களை பிடிஆப் ஆக கன்வெர்ட் செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை கூகுள் டிரைவ் போன்ற வற்றிலும் பாதுகாப்பாக சேமித்து கொள்ளலாம். அதேபோல் வணிக பயன்பாடு, அலுவலக வேலை போன்றவற்றுக்கும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி

WPS Office செயலியை பதிவிறக்கம் செய்யவும்

WPS Office செயலியை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம். இது முக்கியமாக காப்புப்பிரதிகள் மற்றும் வாட்ஸ்அப் அரட்டைகளை மீட்டெடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் .txt ஃபைலில் கோப்புகளை ஏற்றுமதி செய்யலாம், ஆனால் இதில் PDF-க்கு ஏற்றுமதி செய்வது பொதுவாக அனுமதிக்கப்படாது. ஆனால் அதை பி.டி.எஃப் வடிவத்தில் ஏற்றுமதி செய்வது அவசியம். இது எளிதானது என்றாலும், பி.டி.எஃப் வடிவத்தில் அரட்டைகளை ஏற்றுமதி செய்ய பல்வேறு முறைகள் உள்ளது.

வாட்ஸ் அப் மெசேஜ்களை ஓபன் செய்து சேமிக்கவும்

1: பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து பதிவிறக்கிய பிறகு WPS அலுவலக பயன்பாட்டை உபயோகிக்கவும்.

2: இதை நிறுவிய பின், உங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு படி பயன்பாட்டை ஓபன் செய்யவும். நீங்கள் PDF வடிவத்தில் ஏற்றுமதி செய்ய விரும்பும் மெசேஜ்களை எடுத்து கொள்ளவும்.

மீடியா அல்லாது முறையை தேர்ந்தெடுக்கவும்

3: மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஐகானைக் காணலாம். இது ஸ்கிரீன் மேல் வலது மூலையில் உள்ளது. பின்னர் ஏற்றுமதி மெசேஜ்களை அழுத்தவும்.

4: பின்னர் நீங்கள் ஒரு பாப்-அப் சாளரத்தைக் காண்பீர்கள். அங்கு நீங்கள் மீடியா அல்லது என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.!

Gmail To ஐடியில் தங்களின் இமெயில் ஐடியை போடவும்

5: பகிர் மெனுவைக் காண்பீர்கள். அங்கிருந்து, Gmail ஐத் தேர்ந்தெடுக்கவும்.

6: ஜிமெயிலில், நீங்கள் கிளிக் செய்த மெசேஜ்களை பெறுநருக்கு அனுப்ப வேண்டும், இதில் ஃபைலாக கன்வெர்ட் ஆகி வந்து நிற்கும் To ஐடியில் தங்கள் அழைப்பையே பகிரவும். சென்ட் பட்டனை அழுத்தவும். அது தங்களின் இன்பாக்ஸில் வந்து நிற்கும்

PDF ஆக கன்வெர்ட் செய்து சேமித்து வைத்து கொள்ளலாம்

7: இன்பாக்ஸ் ஓபன் செய்து முழு ஃபைலும் டவுன்லோட் செய்யவும். முடிந்த பிறகு அந்த ஃபைலை கிளிக் செய்தவுதன் ஓபன் ஆப்ஷனில் WPS செயலி காண்பிக்கும். அதை ஓபன் செய்யவும்.

8: பின்னர் மீண்டும் WPS செயலியை கிளிக் செய்தால் PDF ஆப்ஷன் காண்பிக்கும்.

9: அந்த ஃபைல் PDF க்கு ஏற்றுமதி என்ற விருப்பம் காண்பிக்கும் அதை தேர்ந்தெடுக்கவும்.

பின்பு தானாக PDF ஃபைலாக மாறி தங்களின் Document இடத்தில் சேமிக்கப்படும்.

Best Mobiles in India

English Summary

How To Export WhatsApp Chat As PDF