ஏப்.2 க்கு அப்புறம் இதுதான்.. செல்பீ மிரருடன் Realme போன்.. 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. SONY கேமரா!
இந்தியாவின் முதலாவது செல்பீ மிரர் கொண்ட மாடலாக ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கேமரா, டிஸ்பிளே, பேட்டரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களுடன் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேமரா பீச்சர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏனென்றால், கேமரா பீச்சர்களை பார்த்து ஸ்மார்ட்போனை வாங்கும் கஸ்டமர்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. இவர்களை தட்டித்தூக்கும்படி செல்பீ மிரர் (Selfie Mirror) கொண்ட ஸ்மார்ட்போனாக ரியல்மி 16 5ஜி களமிறங்குகிறது.

செல்பீ மிரர் (Selfie Mirror)
இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனின் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இந்த கேமரா பாருக்கு அருகிலேயே செல்பீ மிரர் கொடுக்கப்பட்டு உள்ளது. ஃபிளாஷ் இடம்பெறும் இடத்தில் அதைவிட கொஞ்சம் பெரிதாக இந்த மிரர் இருக்கிறது. ஆகவே, ரியர் கேமராவில் செல்பீ எடுத்து கொள்ளலாம். சரியாக கிளிக் செய்ய மிரரை பயன்படுத்தி கொள்ளலாம்.
அரிசோன்டல் டிசைனில் கேமரா கிடைப்பதால், லேட்டஸ்ட் டிசைனை விரும்பும் கேமரா பிரியர்களுக்கும் இது பக்காவாக இருக்கும். அதேபோல பேக் பேனலில் விங்க் டெக்ச்சர் (Wing Texture) கிடைக்கிறது. ஏர் ஒயிட் (Air White) மற்றும் ஏர் பிளாக் (Air Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதேபோல மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன.
ரியல்மி 16 5ஜி அம்சங்கள் (Realme 16 5G Specifications)
4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.57 இன்ச் டிஸ்பிளேவை இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுத்து உள்ளது. 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 6 வருட ஹெல்த் புரொடெக்சன் கிடைக்கிறது. ஏஐ ஸ்மார்ட் சார்ஜிங் மற்றும் ஏஐ ஸ்மார்ட் பவர் சேவிங் போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது.
8.1 எம்எம் தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொடுக்கிறது. 6 வருடங்களுக்கு ப்ளூயன்சி புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. 6050 எம்எம் ஏர்ப்ளோவ் விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது. ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 300 சதவீத ஆடியோ பூஸ்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
50 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. சோனி சென்சார் கிடைக்கிறது. லூமா கலர் இமேஜிங் டெக்னாலஜி (LumaColor Imaging Technology) ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ், ஏஐ லைட் மீ மற்றும் ஏஐ ஸ்டைல் மீ உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், லைவ் மாஸ்டர் மோட் உள்ளிட்ட பிரத்யேக கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த பீச்சர்களுடன் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகவே, இந்த தளத்தில் முழு பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. விலை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் ரியல்மி 15 5ஜி மாடலானது ரூ.27,999 விலைக்கு கிடைத்தது.


Click it and Unblock the Notifications








