விண்வெளி பிரசவம்! நட்சத்திரம் பிறக்கும் அரிய காட்சி.. வியப்பில் ஆழ்த்திய James webb தொலைநோக்கி!

|

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி நட்சத்திரம் உருவாகும் நிகழ்வை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் நட்சத்திரம் இன்னும் உருவாகவில்லை இறுதியில் கிரகங்களாக கூட மாறக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. நாசா விண்ணில் ஏவிய உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கி தான் ஜேம்ஸ் வெப் ஆகும். இந்த தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தின் பல்வேறு ரகசியங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.

டாரஸ் என்ற நட்சத்திரம் உருவாகும் பகுதி

டாரஸ் என்ற நட்சத்திரம் உருவாகும் பகுதி

450 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள டாரஸ் என்ற நட்சத்திரம் உருவாகும் பகுதியில் இருந்து இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ஒரு வெடிப்பு தென்படுகிறது. தூசி, ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிக்கிறது இந்த புகைப்படம். இதை சுற்றியுள்ள தூசி மற்றும் வாயுவின் கருமேகங்கள் L1527 என்று அழைக்கப்படுகிறது.

400 பில்லியன் நட்சத்திரங்கள்

400 பில்லியன் நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரம் நட்சத்திரமாக மாறுவதற்கு அதன் சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஏற்படும் அழுத்தமே காரணம் ஆக இருக்கும். பால்வெளி மண்டலத்தில் சுமார் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நட்சத்திரம் பிறப்பு இறப்பு

நட்சத்திரம் பிறப்பு இறப்பு

ஹாட் கோர்ஸ் இல் ஹைட்ரோஜன் இணைவு நடைபெறும் போது நட்சத்திரம் உருவாகத் தொடங்குகிறது. பால்வெளி மண்டலத்தில் இருக்கும் தூசிக்களும் வாயுக்களும் இணைந்து முகில்கள் போன்று அமைப்பை உருவாக்கிறது. இந்த உருவாக்கமானது நேப்யுலா என அழைக்கப்படுகிறது.

நேப்யுலாவில் ஏற்படும் ஈர்ப்பு விசைக் காரணமாக இது சுருங்கி விரிகிறது. இதற்குள் ஏற்படும் செயல்பாடுகள் மூலமாகவே நட்சத்திரம் உருவாகிறது. நட்சத்திரத்துக்கு பிறப்பு இருப்பது போல் இறப்பும் இருக்கிறது. நட்சத்திரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அணுக்கல் குறையும் போது அதன் ஈர்ப்பு விசை குறையும் இதனால் அதன் சுருங்கும் தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டு நட்சத்திரம் கருந்துளையாக மாறிவிடுகிறது.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்ட படத்தில், இந்த நடசத்திரமானது தூசி மற்றும் வாயுவின் நடுவில் பொதிந்துள்ளது. காலப்போக்கில் தான் தெரியும் இது முழுமையான நட்சத்திரமாக உருவாகிறதா என்று. ஜேம்ஸ் வெப் பதிவு செய்யப்பட்ட படத்தின் மையத்தில் இருப்பது புரோட்டோபிளானட்டரி டிஸ்க் ஆகும். நட்சத்திரத்தின் மேலேயும் கீழேயும் இருப்பது அதில் இருந்து வெளிப்படும் பிரகாசிக்கும் ஒளியாகும்.

விண்வெளி ரகசியங்கள்

இதுபோன்ற பல அரிய நிகழ்வுகளை அறிவதற்கு காரணம் நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி தான். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவிய நாள் முதல் பல விண்வெளி ரகசியங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகிறது. இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆனது பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடினமான உழைப்பில் உருவாக்கப்பட்டது.

நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு

நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் நோக்கம் பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதே ஆகும். ஜேம்ஸ் வெப் இன் பல நோக்கங்களில் இதுவும் ஒன்று.

ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசு

ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசு

இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆனது ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்த தொலைநோக்கி ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டதாகும். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது. இதன் அகலம் 21.32 அடி ஆகும். பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக இருக்கிறது.

இறந்த நட்சத்திரங்கள்

இறந்த நட்சத்திரங்கள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது பல்வேறு நோக்கங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் தோன்றியது எப்படி என்று கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். இப்படி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த நட்சத்திரங்கள் குறித்தும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Star Born! NASA James webb Space Telescope Capture and Reveals Birth of a Star

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X