Home
Mobile

மிரளுது பிளிப்கார்ட்.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 8GB ரேம்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. பிஓஎல்இடி டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றம் சோனி சென்சார் போன்ற பீச்சர்களில் மட்டுமல்லாமல், ஐபி69 ரேட்டிங், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் சர்டிபிகேஷன் போன்ற டியூரபிலிட்டியிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டிசைன் மற்றும் டியூரபிலிட்டியில் மோட்டோரோலா நிறுவனம் தனி கவனம் செலுத்தி வருகிறது. 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளேவை எட்ஜ் சீரிஸ் மாடல்களில் கொடுத்து வருகிறது. இதில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) டிஸ்பிளே புரொடெக்சனை கொடுத்து உள்ளது.

மிரளுது பிளிப்கார்ட்.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

மொத்தமாக எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. மேலும், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்டை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ கொடுக்கிறது. ஆகவே, கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக இருந்தாலும், குவாலிட்டியில் எந்த குறையும் இருக்காது. டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும்.

இதுபோக கேமரா, சிப்செட், பேட்டரி பீச்சர்களும் மிரளவிடும்படி இருக்கிறது. இப்போது, பிளிர்கார்ட் தளத்தில் 18 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.29,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.28,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பான்டோன் டேஸ்லிங் ப்ளூ (Pantone Dazzling Blue), பான்டோன் ஷேடோ (Pantone Shadow), பான்டோன் ஸ்பார்க்லிங் கிரேப் (Pantone Sparkling Grape) மற்றும் பான்டோன் வால்நட் (Pantone Walnut) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் கொண்ட மடாலாக மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ இருக்கிறது.

1.5 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு பாலிசி பக்காவாக இருக்கிறது. 3 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்.கேட்ச் மீ அப் (Catch Me Up) உள்ளிட்ட மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்களை கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 60 Pro Specifications): 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 720Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் 4என்எம் (Octa Core Dimensity 8350 Extreme 4nm) சிப்செட் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. சோனி சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி உள்ளது. 50X ஜூமிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Motorola Edge 60 Pro With 6000mAh Battery 90W Charging Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X