Home
News

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. பணத்தை அனுப்ப வரும் அதிரடி மாற்றம்!

ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் பணத்தை அனுப்புவதில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. இந்த விதிகள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட உள்ளன. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களும் இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேங்க் அக்கவுண்ட்களை பயன்படுத்தி பணத்தை அனுப்பும்போது ஓடிபி கேட்கப்படும். இது யுபிஐ போன்ற லிமிட் இருக்கும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. ஆர்ஜிடிஎஸ் (RTGS), நெப்ட் (NEFT), ஐஎம்பிஎஸ் (IMPS) போன்ற பரிவர்த்தனைகளை செய்யும்போது மட்டுமே கேட்கப்படும். இந்த பரிவர்த்தனைகள் குறைந்தது ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும்.

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல்!

ஆகவே, பெரிய தொகைகளை டிஜிட்டலாக பரிமாற்றம் செய்யும்போது மட்டுமே, பேங்க் அக்கவுண்ட்டுடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படுகிறது. இதை உறுதி செய்த பிறகே பரிவர்த்தனை செய்து முடிக்கப்படுகிறது. ஆனால், வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிஜிலாக்கர் வெரிபிகேஷன் விதிகள் (DigiLocker Verification Rules) அமலுக்கு வருகின்றன.

இந்த விதிகள் வந்துவிட்டால், ஓடிபி மட்டுமல்லாமல், டிஜிலாக்கர் அடிப்படையில் கூடுதல் வெரிபிகேஷன் செய்யப்படும். இதை செய்த பிறகே பரிவர்த்தனை முடித்து வைக்கப்படும். இது யுபிஐ போன்ற சிறிய தொகைகளை பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கு பொருந்தாது. ஆர்ஜிடிஎஸ், நெப்ட், ஐஎம்பிஎஸ் போன்றவற்றில் பெரிய தொகைகளை அனுப்பும்போது பொருந்தும்.

ஆகவே, பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு டிஜிலாக்கர் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இதில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது, டிஜிலாக்கரில் ஆதார் மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் ஆவணங்களை டிஜிட்டலாக பதிவு செய்து வைத்து கொள்ள முடியும்.

வெரிபிகேஷன்களுக்கு இந்த டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்தி கொள்ளலாம். சொல்லப்போனால், டிஜிலாக்கர் சேவையானது, இந்திய அரசால் கொடுக்கப்படுகிறது. ஆகவே, அரசு தொடர்பான வெரிபிகேஷன்கள் மற்றும் பேங்க் வெரிபிகேஷன்களுக்கு இதை பயன்படுத்த இந்திய அரசு பல்வேறு விதிகளை கொண்டுவருகிறது. இப்போது, பேங்க் பரிவர்த்தனைகளுக்கு கொண்டு வந்துள்ளது.

இதில் ஆதார் கார்டு (Aadhaar Card) விவரங்களை கொடுத்து, மொபைல் நம்பர் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். பிறகு ஆதார் கார்டு டிஜிட்டலாக அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். இதே போல பான் கார்டு (PAN Card) விவரங்கள் உள்ளிட்டவற்றையும் பதிவு செய்ய முடியும். இதனால், பேங்க் பரிவர்த்தனைகளை (Bank Transactions) செய்யும் நேரடியாக டிஜிலாக்கர் வழியாக வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம்.

இதை பேங்குகளும் அனுமதிக்கும், அதேபோல இந்திய அரசுக்கு சொந்தமான டிஜிலாக்கர் ஆப் வழியாக வெரிபிகேஷன் செய்யப்படுவதால், பெரிய தொகைகளை அனுப்பும்போது அதில் பாதுகாப்பும் கிடைக்கும். டிஜிலாக்கர் ஆப் வழியாக ஈ-கேஒய்சி (e-KYC) முறை கொண்டுவரப்படுகிறது. இதனால், பாஸ்போர்ட், பேங்க் உள்ளிட்ட பெரும்பாலான வெரிபிகேஷன்களுக்கு டிஜிலாக்கர் கட்டாயமாக்கப்பட உள்ளது.

அதே நேரத்தில் பிசிகலாக எதையும் கொண்டு செல்ல வேண்டியது இருக்காது. ஆதார் நம்பரை கொடுத்தால் போதும், ஒட்டுமொத்த ஆவணங்களும் டிஜிலாக்கர் வழியாக வெரிபிகேஷன் செய்யப்பட்டுவிடும். ஏற்கனவே, ஓடிபி அடிப்படையில் செய்யப்படும், பேங்க் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வெரிபிகேஷனை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவர இருக்கிறது.

இதில் ஃபிங்கர்பிரிண்ட், பேசியல் ரிககனைசேஷன் கொண்டுவரப்பட உள்ளது. இந்த நேரத்தில் டிஜிலாக்கர் வெரிபிகேஷன் விதிகள் அமலுக்கு வருவதால், ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட ஃபிங்கர்பிரிண்ட் அடிப்படையில் வெரிபிகேஷன் செய்யப்பட்டு பரிவர்த்தனைகள் முடிக்கப்பட இருப்பது தெரிகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules For Bank Transactions Come To Effect From April 1 2026 Check DigiLocker Verification Rule
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X