Home
News

Jio SIM க்கு கும்பிடு.. மாதம் ரூ.300 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

ஜியோ கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.300 க்கும் குறைவான செலவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமானது, அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஏகப்பட்ட கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த வருடாந்திர திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் திட்டமாக, ஜியோ ரூ.3,599 திட்டம் (Jio Rs 3,599 Plan) இருக்கிறது. இதில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், ரூ.299 மட்டுமே வருகிறது. ஆகவே, ரூ.300 க்கும் குறைவான செலவில் வருடாந்திர திட்டத்தை பெற்று கொள்ளலாம்.

Jio SIM க்கு கும்பிடு.. மாதம் ரூ.300 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ.3,599 வருடாந்திர திட்டம் (Jio Rs 3599 Yearly Plan): அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை 365 நாட்கள் முழுவதும் கொடுத்து உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) பயன்படுத்த கிடைக்கிறது. ஆகவே, 4ஜி டேட்டாவை 365 நாட்களுக்கும் சேர்த்து 912.5 ஜிபியாக கிடைக்கிறது. இந்த டேட்டா கணக்கில் எடுக்காமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, அதிகப்படியான டேட்டாவை வருடம் முழுவதும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்போது, கூடுதல் சலுகைகளுக்கு வரலாம். இந்த வருடாந்திர திட்டத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் டிவி (JioHotstar Mobile & TV) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 3 மாதங்களுக்கு சந்தா கிடைக்கும். ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி முடிவதற்கு முன்னதாகவே ஓடிடி சந்தா முடிந்துவிடும். ஜியோ டிவி (Jio TV) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது.

ஆனால், இது பிரீமியம் சலுகையை கொடுக்காது. இலவமாக கிடைக்கும் கன்டென்ட்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களை மட்டுமே பார்த்து கொள்ள முடியும். இந்த ஜியோ ஆப்களின் சலுகைகள் போக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். ஆனால், ஜியோ மொபைல் நம்பரில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும், ஜெமினி ப்ரோ சந்தாவை பெற்று கொள்ளலாம். 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதில் நானோ பனானா மற்றும் 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதுபோக ப்ரோ சந்தாவில் கிடைக்கும் ஒட்டுமொத்த சலுகைகளும் கொடுக்கப்படும். இந்த சலுகைகள் எல்லாமே மாதத்துக்கு ரூ.300 க்கும் குறைவான செலவில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டத்தை பெற விரும்பினால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட வாய்ல் ஒன்லி திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.1748ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப சலுகைகளை கொடுத்து உள்ளது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த 336 நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தலாம். மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகை கிடைக்கும். இதைத்தவிர வேறு எந்த சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Yearly Plan Unlimited Voice Calls 2.5 GB Daily Data 100 SMS At Rs 299 Monthly Cost
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X