Just In
- 5 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 5 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 5 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- News
என்னது எடிட்டா? நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால்!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
நீங்க சூப்பர்மேன் மாதிரி பறக்கணுமா? அப்போ இந்த கிரகத்திற்கு தான் போகணும்.!
இந்த பிரபஞ்சத்துல (Universe) இருக்க ஒவ்வொரு கிரகங்களுக்கு (planets) ஒரு தன்மை இருக்கும். மனிதர்கள் அந்த கிரகங்களுக்கு செல்லும் போது அந்த தன்மைக்கு ஏற்றவாறு அவர்களுடைய செயல்பாடு மாறுபடும். மனிதர்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும் காரணிகளில் முக்கியமான ஒன்று கிரகங்களின் ஈர்ப்பு (Gravity) விசையாகும். கிரகங்களின் அளவு, அவற்றை உருவாகியுள்ள மூலக்கூறுகள் போன்றவற்றைப் பொருத்து அதன் ஈர்ப்புவிசை (Gravitational force) அமைகிறது.

பூமியில நீங்க சாதாரண மனுஷனா இருக்கலாம்.. ஆனா இங்கே போன நீங்க சூப்பர்மேன் தான்.!
துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபர் டான்சு ஏகன் என்பவர் டிஜிட்டல் துறையில் 1991 ஆம் ஆண்டு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அவர், சமீபத்தில் தனது டிவிட்டர் (twitter) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு மனிதன் பூமியிலிருந்து (Earth) குதிப்பதற்கும் மற்ற கிரகத்திலிருந்து குதிப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை AI தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார்.

ஈர்ப்பு விசை எவ்வளவு முக்கியமானது? எந்த கிரகத்தில் எந்த அளவு ஈர்ப்பு உள்ளது?
இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாகவே விண்வெளிக்கு சென்றால் அங்குள்ள குறைந்த ஈர்ப்பு விசை காரணமாக ஒரு மனிதன் சாப்பிடுவது, மூச்சு விடுவது, ரத்த ஓட்டம் போன்ற அனைத்து செயல்பாடுகளுமே பாதிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான்.
தற்போது விண்வெளியில் அமைந்திருக்கும் ஒரு ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் படும் பாடை வீடியோ மூலம் நாம் பார்த்திருப்போம். நிலாவிலும் இதே நிலைமை தான்.

AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சொன்ன சூப்பர் மேட்டர்.!
அதே மற்ற கிரகங்களில் எப்படி என்ற ஆர்வம் உங்களுக்கு தோன்றுகிறதல்லவா ? அந்த சந்தேகம் டான்சுவிற்கும் வந்திருக்கும் போல..ஆனால், அந்தந்த கிரகங்களில் நேரில் சென்று பார்க்க முடியாதல்லவா?
அதனால் தான் மனிதனின் இயல்பான செயல்பாடான குதித்தலைத் (Jumping) தேர்வு செய்து, வெவ்வேறு கிரகங்களின் குதித்தால் எப்படி இருக்கும் என்பதை AI மூலம் கண்முன் காட்சிப்படுத்து பார்த்துள்ளார்.

சில கிரகத்தில் சூப்பர் மேனாகவே ஆகலாம்.. உண்மையா தான் பாஸ்.!
ஒரு கிரகத்தில் சாதாரண மனிதனாக இருக்கும் நீங்கள் சில கிரகத்தில் சூப்பர் மேனாகவே (Superman) ஆகலாம். அது எதுணு தெரிஞ்சுக்கனுமா? அப்போ இந்த பதிவ முழுசா படிங்க.
அந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒருவர் பூமியின் மேலே குதிப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக ஒரு மனிதன் சராசரியாக 0.45 மீட்டர் அளவு குதிக்க முடிகிறது. அதுவே வியாழன் (Jupiter) கிரகத்தில் அவர் 0.17 மீட்டர் மட்டுமே குதிக்க முடிகிறது.

இங்கே போன உங்க எடை 300 மடங்கு அதிகமாகிடும்.!
இதற்கான காரணம் என்னவென்றால், வியாழன் கிரகம் பூமியை விட 300 மடங்கு அதிகம் எடை கொண்டது.
இதன் காரணமாக அதன் ஈர்ப்பு விசை மிகவும் அதிகமாகவே இருக்கும். இதனால் தான் அந்த மனிதனால் ஜூப்பிட்டரில் பூமியை விடக் குறைந்த உயரமே குதிக்க முடிகிறது.
அதுவே நெப்ட்யூன் (Neptune) கிரகத்தில் குதிப்பவர் 0.39 மீட்டர் உயரம் உயரத்தை அடைய முடிகிறது. ஆனால், நெப்டியூனிலும் பூமியை விட ஈர்ப்பு விசை அதிகம் என்பதால் குதிக்கும் அந்த நபரின் உயரம் பூமியில் அடையும் உயரத்தை விட குறைவாகவே இருக்கிறது.

இங்கே சென்றால் சாதாரண மேன் ஆக கூட இருக்க முடியாது.!
ஒரு மனிதன் வெள்ளி (Venus) கிரகத்தின் மேல் நின்று குதித்தால் சுலபமாக 0.49 மீட்டர் உயரம் வரை அடைய முடியும் என்று அந்த வீடியோபில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யுரேனஸ் (Uranus) மற்றும் சனி (Saturn) கிரகங்களில் இருந்து குதித்தாலும் இதே உயரத்தைச் சுலபமாக அடைய முடியுமாம்.
மேலே கூறப்பட்டுள்ள கிரகங்கள் அனைத்தும் பூமிக்கு இணையான அல்லது பூமியை விட அதிக எடை கொண்டவையாக இருப்பதால் ஒரு மனிதன் குதிக்க முடியும் சராசரி அளவு ஒரு மீட்டரை விடக் குறைவாகவே உள்ளது.

நிலவில் நீங்கள் குதித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
இதுவே எடை குறைவாக உள்ள கிரகங்களில் எப்படி இருக்கும்? பார்க்கலாம் வாங்க.. பூமியை விட 15 சதவிகிதம் குறைவான எடை மற்றும் அளவு கொண்ட செவ்வாய் (Mars) கிரகத்தில் ஒருவர் குதிக்கும் போது கூடைப்பந்து வீரராகவே மாறி சராசரியாக 1.1 மீட்டர் உயரம் வரை குதிக்க முடியுமாம்.
அதுவே நம்முடைய நிலாவில் 2.72 மீட்டர் வரை உயரத்தில் குதிக்க முடியும். இதற்குக் காரணம் பூமியை விட நிலவின் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பது தான்.
|
அடேங்கப்பா.! இந்த கிரகத்தில இவ்வளவு உயரம் போலாமா?
பூமியில் குதிக்கும் அதே வேகத்தை செலுத்தி ப்ளூட்டோவில் (Pluto) குறித்தால் ஒரு மனிதன் 7.77 மீட்டர் உயரம் வரை செல்ல முடியும்.
ப்ளூட்டோவை போலவே மற்றொரு லேசான கோள் ஆன சீரஸ் (Ceres) கிரகத்திலிருந்து ஒரு மனிதன் குதித்தால் 15.75 மீட்டர் உயரத்தை அடைய முடியும்.
இந்த சீரஸ் கிரகம் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

சூப்பர்மேன் போல பறக்கணுமா அப்போ இந்த இடத்திற்கு தான் போகணும்.!
அதேபோல, வியாழன் கிரகத்தின் மிராண்டா (Miranda)நிலவிலிருந்து குதிக்கும் ஒரு மனிதன் சராசரியாக 57 மீட்டர் உயரம் வரை அடைய முடியுமாம். இங்கே நீங்கள் மேட்ரிக்ஸ் பட ஹீரோவாக ஆகிடலாம்.
இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கே.! செவ்வாய் கிரகத்தின் ஒரு நிலவான ஃபோபொஸிலிருந்து (Phobos) குதித்தால் நீங்கள் திரும்பத் தரைக்கு வரவே முடியாது.
அதிகபட்சமாக சுமார் 773 மீட்டர் உயரம் வரை செல்ல முடியும்.

நீங்க எந்த கிரகத்தில் ஜம்ப் ஆக ஆசைப்படுகிறீர்கள்?
அதுக்கப்புறம் எங்க இருந்து கீழே திரும்ப வரது. அப்படியே சூப்பர்மேன் போல அந்த நிலவை சுற்றி ஒரு ரவுண்ட் வர வேண்டியது தான்.
நம் பால்வளியின் முதன்மை நட்சத்திரமான சூரியனிலிருந்து குதிக்க முயற்சி செய்தால் உங்களால் குதிக்கவே முடியாது. காரணம், சூரியனில் உள்ள ஈர்ப்பு விசை பூமியை விட பல மடங்கு அதிகம்.
இப்போ நீங்க சொல்லுங்க.. இதுல எந்த கிரகத்தில் இருந்து குதிக்க உங்களுக்கு ஆசையாக இருக்கிறது என்று.. சூப்பர்மேன் ஆகணுமா இல்லை மேட்ரிக்ஸ் ஹீரோவாகணுமா?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470