"டக்"கென்று சூரியன் காணமால் போய்விட்டால் என்ன நடக்கும்?

அருகாமையில் உள்ள ஆல்பா சென்டரி எனும் நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்றாலும் கூட, அதற்கு 4.7 ஒளியாண்டு ஆண்டுகள் அதாவது சுமார் 377,000 ஆண்டுகள் தேவை.

|

இதென்ன டா சூரியனுக்கு வந்த சத்திய சோதனை என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இது ஒரு புதிர்மிக்க கேள்வி என்பதையும், இன்றோ அல்லது நாளை காலையோ நிகழப்போகும் ஒரு சம்பவம் இல்லை என்பதை நாங்களும் அறிவோம். இருந்தாலும், இந்த கேள்வியில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் இருப்பதால் சற்று ஆராய்ந்து பார்ப்போம். வாருங்கள் சூரிய குடும்பத்திற்குள் குழப்பம் விளைவிக்கும் கேள்விக்குள் நுழைவோம் -டக்கென்று சூரியன் மறைந்து விட்டால் என்ன நடக்கும்?


சூரியன் ஆனது பூமியின் பரப்பளவை விட சுமார் 333,000 மடங்கு பெரியது மற்றும் அதன் ஆற்றலை பொறுத்தவரை ஒவ்வொரு விநாடியும் 100 பில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தியை உற்பத்தி செய்கிறது. சூரியனின் மாபெரும் வெகுஜனம் (மாஸ்) ஆனது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து எட்டு கிரகங்களையும் ஈர்ப்பு விசையினால் சுற்றுப்பாதைக்குள் பூட்டி வைத்து உள்ளது. அதே சூரியன் தான், அதன் மகத்தான எரிசக்தி மூலம் போதிய அளவுக்கு - அதாவது, திரவ நீருக்கான சரியான - வெப்பநிலையை பூமியின் மேற்பரப்பு மீது பாய்ச்சி, அதை வாழத் தகுந்த கிரகமாக உருவாக்கி வைத்துள்ளது. இப்படியான நிலைப்பாட்டில், நாம் சூரியனை இழந்தால் என்ன நடக்கும்?

சூரியன் மறைந்து போகும் அடுத்த நொடி என்ன நடக்கும்?

சூரியன் மறைந்து போகும் அடுத்த நொடி என்ன நடக்கும்?

உடனடியாக புவியீர்ப்பு தளர்ந்து போகும். பூமி உட்பட மற்ற எல்லா கிரகங்களும், விண்வெளியில் "கண்ணா பின்னா"வென்று பறந்து செல்லும். இது நமது சூரிய மண்டலத்தில் உள்ள அணைத்து விண்வெளி பொருளுக்கும் பொருந்தும், இதன் விளைவாக ஒரு மாபெரும் மற்றும் முழுமையான குழப்பம் உண்டாகும்.

சரியாக எட்டு நிமிடங்கள் கழித்து!

சரியாக எட்டு நிமிடங்கள் கழித்து!

மறுகையில் சூரிய ஒளி உள்ளது. இதுவொன்றும் உடனடி கடந்து வரும் ஒரு விடயம் அல்ல: இது ஏறக்குறைய 671 மில்லியன் மைல்களுக்கு பயணித்து, ஏறக்குறைய 8 நிமிடங்கள் கழித்தே பூமியை எட்டும். ஆகையால், சூரியன் காணாமல் போன எட்டு நிமிடங்கள் கழித்து, பூமி கிரகம் இருளில் மூழ்கும். ஒளியின் வேகம் நிலையானது மற்றும் ஈர்ப்பின் வேகம் உடனடியானது என்பது உண்மை என்றால், சூரியன் மறைவதை நாம் பார்க்கும் முன்னரே, அது மறைந்து போனதின் விளைவுகளை நாம் உணர்வோம்.

ஆனால் உண்மை என்னவெனில்?

ஆனால் உண்மை என்னவெனில்?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1915 இல் அறிமுகப்படுத்திய பொது சார்பியல் கொள்கையின் படி, ​​புவியீர்ப்பு விசை ஆனது உடனடியானது அல்ல. உண்மையில், அது ஒளியின் வேகத்திற்கு இணையாக பயணம் செய்யும் என்பதால், சூரியன் மறைந்துவிட்டாலும் கூட, அதன் விளைவாக பூமிக்கு ஏற்படும் தவிர்க்க முடியாத தீங்குகள் ஆனது எட்டு நிமிடங்கள் தள்ளி வைக்கப்படும்.

அடர்த்தியான இருட்டில் மிதக்குமா பூமி?

அடர்த்தியான இருட்டில் மிதக்குமா பூமி?

கிடையாது. சூரியன் மறைந்தாலும் கூட பூமி முழுமையான இருளில் சிக்காது. ஏனெனில் நட்சத்திரங்கள் இன்னும் பிரகாசிக்கும், மற்றும் மின்சாரம் தொடர்ந்து வேலை செய்யும். ஆக நகரங்களில் மின்சார சக்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் வரை அது இருளால் சூழாது. பூமி மட்டுமில்லாது இதர கிரகங்களும் ஒரு குறுகிய நேரத்திற்குத் காட்சிப்படும். எடுத்துக்காட்டாக, வியாழன் கிரகமானது பூமிக்கு மிக அருகில் - சுமார் 33 ஒளி நிமிடங்கள் தொலைவில் - இருக்கிறது. உடன் அது ஒரு பெரிய கிரகம் என்பதால், சூரியன் மறைந்த அடுத்த ஒரு மணிநேரத்திற்கு அதை காண முடியலாம்.

சூரியன் இல்லாமல் செடி கொடிகள் மரங்கள் என்னவாகும்?

சூரியன் இல்லாமல் செடி கொடிகள் மரங்கள் என்னவாகும்?

நிச்சயமாக பாதிக்கப்படும். பூமிக்கு கிடைக்கும் எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, சூரிய ஒளி இல்லாத காரணத்தினால் ஒளிச்சேர்க்கை (photosnythesis) எனப்படும் தாவரங்களுக்கான உணவு உற்பத்தி செயல்முறை - உடனடியாக நிறுத்தப்பபடும். பெரும்பாலான மிகச் சிறிய தாவரங்கள் முதல் நாளிலேயே இறந்து போகும். முதல் வாரத்தில், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை ஆனது 32 டிகிரி பாரன்ஹீட் வரை வீழ்ச்சியடையும். முதல் ஆண்டில், அது "வாழ்வியலுக்கு எதிர்மறையான" 150 டிகிரி பாரன்ஹீட் என்கிற கட்டத்தை அடையும்.

பூமியை ஒரு பனிக்கட்டி உலகமாக மாறும்!

பூமியை ஒரு பனிக்கட்டி உலகமாக மாறும்!

ஒருகட்டத்தில், பூமியின் பெருங்கடல்கள் எப்போதும் குளிர்ச்சியாய் இருக்கும், இறுதியில் உறைபனியாக மாறி, பூமியை ஒரு பனிக்கட்டி உலகமாக மாற்றும். நல்ல விஷயம் என்னவெனில், கடலின் மேற்பரப்பு மட்டும் தான் உறைந்து போய் இருக்கும். ஆனால் உள்ளே திரவக் கடலானது வழக்கம் போல அலைந்து திரியும். அதுதான் குளிரிலும் தப்பிப்பிழைத்த மனிதர்களுக்கு இருக்கும் ஒரே அடைக்கலம். ஸ்டீவன்ஸின் கூற்றுப்படி, கடல் தரையில் புவிவெப்ப வாயுக்கள் இருக்கும். அவைகள் பூமியின் நுழைவாயிலிலில் உஷ்ணத்தை உமிழ்கின்றன.

கடுமை மற்றும் தனிமை!

கடுமை மற்றும் தனிமை!

இம்மாதிரியான வாழ்க்கை முறை மோசமாகவும், இருட்டாகவும், தனிமையாகவும் இருக்கும், மேலும் இந்த நிலைமைகளின் கீழ் மனித இனம் நீண்ட காலம் நீடிக்குமா என்பதே சந்தேகம் தான். சரி எதெல்லாம் தப்பி பிழைக்கும்? மேற்கூறப்பட்ட பூமியின் நுழைவாயிலில் கிடைக்கும் உஷ்ணத்தின் கீழ் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த விலங்குகள் மட்டுமே, சூரியன் மறைந்த பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னரும் கூட உயிரோடு இருக்கும். ஏனென்றால், இந்த மிருகங்களுக்கு சூரியன் தேவையில்லை. மாறாக, குறிப்பிட்ட புவிவெப்ப வாயில்களில் இருந்து வெளியேறும் வெப்பத்திலிருந்து தான் அவைகள் உணவையும் சக்தியையும் பெறுகின்றன.

பூமி எப்போது தான் முழுமையாக அழியும்?

பூமி எப்போது தான் முழுமையாக அழியும்?

வேறு கிரகங்கள், நட்சத்திரங்கள் அல்லது வால்மீன்களுடன் மோதிக் கொள்ளாத வரை பூமியானது முற்றிலுமாக அழியாது. அருகாமையில் உள்ள ஆல்பா சென்டரி எனும் நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்றாலும் கூட, அதற்கு 4.7 ஒளியாண்டு ஆண்டுகள் அதாவது சுமார் 377,000 ஆண்டுகள் தேவை. மனிதர்கள் இல்லாமல், கால் போன போக்கிலே திரியும் பூமியானது சுமார் 1 பில்லியன் ஆண்டுகள் கழித்து கிட்டத்தட்ட 100,000 ஒளி ஆண்டுகள் அல்லது முழு பால்வெளி மண்டலத்தின் நீளத்தை தாண்டி எங்கோ சென்றிருக்கும்.

Best Mobiles in India

English summary
Here's what would happen if the sun disappeared right now: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X