Home
Mobile

ஏப்.2 முதல் புதிய விலை.. ஒரே நேரத்தில் 9 Realme போன்கள் விலை உயர்வு.. என்னென்ன மாடல்கள்?

ஸ்மார்ட்போன் சந்தையில் நிகழும் விலை உயர்வுகள் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்பது போல் தெரியவில்லை. ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பல வகையான ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதில் சில மாடல்கள் அறிமுகம் ஆன சில மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக விலை உயர்வை பெற்றுள்ளன.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் விலை சுமார் ரூ.1,000 வரை அதிகரித்துள்ளது, அதே சமயம் ரியல்மி பி4 ப்ரோ, ரியல்மி 15 ஆகிய மாடல்களின் விலைகள் ரூ.4,000 விலை உயர்ந்துள்ளது; சில மாடல்கள் ரூ.6000 விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் புதிதாக வந்த போன்கள் அதிக விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏற்கனவே உள்ள மாடல்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. என்னென்ன மாடல்கள் எவவ்ளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஏப்.2 முதல் புதிய விலை.. ஒரே நேரத்தில் 9 Realme போன்கள் விலை உயர்வு!

எக்ஸ் தளத்தில் கேட்ஜெட்ஸ்டேட்டா (GadgetsData) வெளியிட்ட ஒரு பதிவின்படி, மொத்தம் ஒன்பது ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ரியல்மி பி3 அல்ட்ராவில் இருந்து தொடங்கினால், அதன் 8ஜிபி + 256ஜிபி வேரியண்டின் விலை இப்போது ரூ.3,000 அதிகரித்துள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.27,999 ஆக இருந்தது.

சுவாரஸ்யமாக, இந்த வேரியண்ட் ரியல்மி இணையதளத்தில் ரூ. 28,999 க்கு விற்கப்படுகிறது. புதிய விலை நிர்ணயம் விரைவில் அதிகாரபூர்வமாக பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.2,000 உயர்த்தப்பட்டு, அதன் விலை ரூ. 31,999 ஆக மாறி உள்ளது.

மற்றொரு பி-சீரிஸ் ஸ்மார்ட்போனான ரியல்மி பி4 ப்ரோ (Realme P4 Pro) ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,000 உயர்த்தப்பட்டுள்ளது. இது ரூ. 24,999 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது இதன் ஆரம்ப விலை ரூ.28,999 ஆகும். இது ரூ. 4,000 விலை உயர்வைக் குறிக்கிறது

இதேபோல், ரியல்மி 15 ஸ்மார்ட்போனின் விலையும் ரூ.4,000 அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ரியல்மி 15டி (Realme 15T) மற்றும் ரியல்மி 15எக்ஸ் (Realme 15x) ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில் இருந்து ரூ.6,000 விலை உயர்வை பெற்றுள்ளன. புதிய மாடல்களில், ரியல்மி 16 ப்ரோவின் (Realme 16 Pro) விலை மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது.

இது ரூ.31,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் ரூ.34,999 ஆக விலை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.36,999 என்கிற விலையில் வாங்க கிடைக்கிறது. லோ பட்ஜெட் ரியல்மி சி-சீரிஸ் மாடல்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரியல்மி சி71, ரியல்மி சி83 மற்றும் ரியல்மி சி85 ஆகியவை அடங்கும். ரியல்மி சி71 மாடலின் விலை தற்போது ரூ.1,300, ரியல்மி சி83 மாடலின் விலை ரூ.1,000 மற்றும் ரியல்மி சி85 மாடலின் விலை ரூ.4,500 அதிகரித்துள்ளது.

OPINION: மேற்கண்ட விலைகள் ஆனது அந்தந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களை முன்பை விட இப்போது மிகவும் விலை உயர்ந்த மாடல்களாக மட்டுமே மாற்றவில்லை; கூடவே முற்றிலும் வேறுபட்ட விலைப்பிரிவிலும் கொண்டுபோய் வைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.6000 வரையிலான இந்த நேரடி விலை உயர்வானது - ஸ்மார்ட்போன் துறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிச்சம் [போட்டு காட்டுகிறது

மேலும் முன்பு போல, போன்கள் ஒரு குறிப்பிட்ட விலையில் அறிமுகமாகும் என்றும் இனி நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும் ஒரே பிரிவில் உள்ள போன்களை ஒப்பிட்டு, எது சிறந்த மதிப்பை தருகிறது என்கிற முடிவுக்கும் எளிமையாக வர முடியாது. அடுத்த முறை ஸ்மார்ட்போன் வாங்கும் போது - ஒரு போனுக்காக அதிக விலை கொடுப்பதை தவிர்க்க, முடிந்தபோதெல்லாம் தள்ளுபடிகள் அல்லது சலுகைகளை பெற முயற்சி செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
9 Realme Smartphones Price Hike Up to Rs 6000 in India From April 2 Including Realme 16 Pro Realme C85
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X