Home
Mobile

தூக்கி சாப்பிடும் பட்ஜெட்டில் 5ஜி, 6500mAh பேட்டரி, IP64 Pro, அசத்தல் AI.. புது TECNO போன்.. நம்பி வாங்கலாமா?

டெக்னோ (TECNO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (Tecno Spark 50 5G) மாடலின் இந்திய விற்பனை தொடங்கி உள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி விலை விவரங்கள்: இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

தூக்கி சாப்பிடும் பட்ஜெட்டில் புது TECNO போன்.. நம்பி வாங்கலாமா?

தற்போது இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் சேனல்கள் மற்றும் ஆஃப்லைன் ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக - ஷாம்பெயின் கோல்டு, ஃபேண்டஸி பர்ப்பிள், இங்க் பிளாக் மற்றும் மின்ட் கிரீன் ஆகிய 4 கலர்களில் - வாங்க கிடைக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவும் உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைமென்சிட்டி 6400 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது 6என்எம் அடிப்படையிலான சிலிக்கான் சிப் ஆகும். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான டெக்னோவின் ஹைஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது எப்/1.85 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ கட்அவுட்டில் 8எம்பி கேமரா உள்ளது

பேட்டரி - இதன் சிறப்பம்சம் என்றே கூறலாம். இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடனான 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை - டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5மிமீ ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 2டிபி வரை மெமரி விரிவாக்கம், 8.18மிமீ ஸ்லிம் டிசைன் ஆகியவைகளை கூறலாம்.

OPINION - டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் நம்பி வாங்கலாமா? நிறைகளை பொறுத்தவரை - பேட்டரி கெப்பாசிட்டி உண்மையிலேயே நன்றாக உள்ளது. கட்டமைப்பை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ராணுவத் தரத்திலான MIL STD-810H பாதுகாப்பு மற்றும் IP64 ப்ரோ ரேட்டிங்கை கொண்டுள்ளது.

இதன் சாஃப்ட்வேரில் உள்ள சிறப்பு என்னவென்றால், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஏஐ வாட்ஸ்அப் அசிஸ்டன்ட், எல்லா (Ella) அலாரம் அனௌன்ஸ்மென்ட், ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட், ஏஐ எரேசர் 2.0, ஏஐ இமேஜ் எக்ஸ்டெண்டர் மற்றும் எல்லா-பவர்டு டூல்ஸ் போன்ற பல ஏஐ அம்சங்கள் இதில் உள்ளன இந்த விலைப்பிரிவில் உள்ள ஒரு ஸ்மார்ட்போன், அன்றாட பயன்பாட்டிற்குப் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஏஐ அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒட்டுமொத்தமாக ரூ.17,000க்குள் என்கிற பட்ஜெட்டில் அதிக எடை அல்லது அதிக திக்னஸை கொண்டிராமல், நீண்ட பேட்டரி லைஃப்பிறகு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கலாம். குறைகளை பொறுத்தவரை, அதிக பிரேம் விகிதங்களில் பிஜிஎம்ஐ (BGMI) போன்ற கேம்களை இயக்கும்போது, இந்த ஸ்மார்ட்போன் திணறுவதற்கான அறிகுறிகளை காட்டியதாக 91மொபைல்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதன் டிஸ்பிளே டிஸ்ப்ளே 720p-க்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், யூட்யூப் வீடியோக்கள் அல்லது ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, ​​ஒருவர் குறைந்தபட்ச டீட்டெயில்-ஐ மட்டுமே எதிர்பார்க்கலாம். இதே போன்ற விலையில் வேறு நல்ல ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் ரூ.14,999 க்கு கிடைக்கும் மோட்டோ ஜி57 பவர் மாடலை கருத்தில் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 50 5G India Sale Started Price Starts Rs 16999 Is It worth purchasing or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X