Vivo அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 200MP கேமரா.. 6600mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்300 அல்ட்ரா (vivo X300 Ultra) ஸ்மார்ட்போன் நேற்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள் (vivo X300 Ultra specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) உடன் விவோ எக்ஸ்300 அல்ட்ராஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 6.82-இன்ச் 2கே எல்டிபிஒ AMOLED டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங், ஆர்மர் கிளாஸ் புரொடெக்சன் (Armor Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
போட்டோகிராஃபர் கிட் உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான கேமரா அனுபவத்தைத் தரும். அதுவும் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி Sony LYTIA 901 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ர வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இந்த போனின் ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. VS1+ இமேஜிங் சிப் ஆதரவும் இந்த போனில் உள்ளது. OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த விவோ 300எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
6600mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) போன்ற பல வசதிகள் இந்த விவோ போனில் உள்ள. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், ஏ-ஜிபஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா விலை
- 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 அல்ட்ரா மாடலின் விலை 6,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.95,925)
- 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 அல்ட்ரா மாடலின் விலை 7,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,02,780)
- 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 அல்ட்ரா மாடலின் விலை 7,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,09,650)
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Satellite Edition) மாடலின் விலை 8,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,23,330)
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 அல்ட்ரா(Satellite Edition + Photographer Kit) மாடலின் விலை 8,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,64,445)


Click it and Unblock the Notifications








