Home
Mobile

OPPO இறங்கிட்டான்.. 7000mAh பேட்டரி, IP69 ரேட்டிங் உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

2026 ஏப்ரல் மாதமானது ஏற்கனவே படுவேகமான முறையில் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை கண்டு வருகிறது. ரியல்மி 16 5ஜி, ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி, விவோ வி70 எப்இ 5ஜி என ஏற்கனவே 3 முக்கிய பிராண்டுகளின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி விட்டன.

ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி உட்பட இன்னும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. இதற்கிடையில் "செம்ம சர்ப்ரைஸ்" ஆக ஒப்போ (OPPO) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எப்-சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களும் இந்த பட்டியலில் இணையும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

OPPO இறங்கிட்டான்.. 7000mAh பேட்டரி, IP69 ரேட்டிங் உடன் புது 5ஜி போன்!

எந்தெந்த ஒப்போ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன? பெயர் குறிப்பிடப்படாத தொழில் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஒப்போ எப்33 (OPPO F33) மற்றும் ஒப்போ எப்33 ப்ரோ (OPPO F33 Pro) ஆகிய 2 மாடல்களும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று 91மொபைல்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கூடவே இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் குறித்த விவரங்களையும் பகிர்ந்துள்ளது .

ஒப்போ எப்33 சீரிஸ் என்ன விலைக்கு அறிமுகமாகும்? மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, இவ்விரு மாடல்களும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ எப்31 (OPPO F31) மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ (OPPO F31 Pro) மாடல்களுக்கு அடுத்தபடியாக வரும் ஸ்மார்ட்போன்களாகும்.

நினைவூட்டும் வண்ணம் ஒப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், அதே 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட ஒப்போ எப்31 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 க்கும் அறிமுகமானது. ஆக ஒப்போ எப்33 சீரீஸ் ஆனது ரூ.25,000 முதல் ரூ. 35,000 வரையிலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ எப்33 சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒப்போ எப்31 மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ மாடல்களை போலவே வரவிருக்கும் புதிய ஒப்போ எப்33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் மிட்-ரேன்ஞ் விலையில் நல்ல பேட்டரி லைஃப் மற்றும் நீடித்து உழைக்கும் கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் தற்போதுள்ள மாடல்களில் 7000mAh பேட்டரி யூனிட்களும், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 + IP68 + IP66 தரமதிப்பீடுகளும் உள்ளன. ஆக ஒப்போ எப்33 சீரீஸில் இதை விட பெட்டர் ஆன அல்லது இதேபோன்ற அம்சங்களை கூட நாம் எதிர்பார்க்கலாம்.

ஒப்போ எப்31 மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் மற்ற முக்கிய அம்சங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. இரண்டிலுமே 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது

இந்த இரண்டு மாடல்களிலும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடனான 7000mAh பேட்டரி உள்ளது. முக்கிய வேறுபாடாக ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவும், ப்ரோ மாடலில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளன. மேலும் ஒப்போ எப்31 ப்ரோ, மீடியாடெக் டைமென்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட்டை கொண்டுள்ளது, அதே சமயம் எப்31 மாடலில் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் உள்ளது.

OPINION - ஒப்போ எப்33 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை காத்திருந்து வாங்கலாமா? விலை அடிப்படையில், அதாவது உண்மையிலேயே இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வந்தால்.. ஒப்போ எப்31 சீரீஸ்-ஐ விட கொஞ்சம் நல்லபடியான அம்சங்களை பேக் செய்தாலே கூட "வொர்த்" ஆன ஸ்மார்ட்போன்களாக மாறிவிடும்.

இந்த சீரிஸ் - ஏற்கனவே சந்தையில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70), ரெட்மி நோட் 15 ப்ரோ (, Redmi Note 15 Pro) மற்றும் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியாக வந்து நிற்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இதையும் கூட விலை நிர்ணயம் தான் முடிவு செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo F33 and Oppo F33 Pro Expected to Launch in India India on April Price Range Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X