Home
Mobile

OnePlus ஆட்டம் ஆரம்பம்.. ஏப்.9 SALE.. 9000mAh பேட்டரி, 50MP சோனி LYTIA கேமரா, IP69K.. எந்த மாடல், என்ன விலை?

ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனின் அறிமுகம் - ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிக முக்கிய அறிமுகங்களில் ஒன்றாகும். ஏனென்றால் இதுதான் ஒன்பிளஸ் இந்தியா ஷட்டவுன் ஆகிறது (மூடப்படுகிறது) என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிமுகமாகும். இது ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சேல் டேட்: 2026 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ள ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ​​ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது நோர்ட் 6 மாடலுக்கான விற்பனை தேதியையும் அறிவித்துள்ளது.

OnePlus ஆட்டம் ஆரம்பம்.. ஏப்.9 SALE.. 9000mAh பேட்டரி!

எப்போது? ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஆனது ஏப்ரல் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அமேசான் இந்தியாவிலும் வாங்க கிடைக்கும்.

ஆன்லைன் ஒன்லி: சில நாட்களுக்கு முன்பு, ஒன்பிளஸ் நிறுவனம் தனது போன்களை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய போவதாக அறிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது விரைவில் "ஒரு கட்டத்தில்" ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளில் தனது ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்த போகிறது. ஆனால் இது உடனே நடக்கப்போவதில்லை வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலானது ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களிலும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? தனது அதிகாரப்பூர்வ டீசர்களில், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் சரியான ஆரம்ப விலை ஏப்ரல் 7 அன்று (வெளியீட்டின் போது) அறிவிக்கப்படும்.

நோ சர்ப்ரைஸ்: மேற்குறிப்பிட்ட பட்ஜெட் உண்மையாக இருந்தால், கடந்த ஆண்டு ரூ.31,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இந்த போனின் விலை சற்று அதிகமாகவே இருக்கும். உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறையின் காரணமாக, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் லேட்டஸ்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலைகள் கூட அதிகரித்துள்ளதால், இது ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள்: கடந்த சில நாட்களாகவே, ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இது பிரம்மாண்டமான 9000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது நோர்ட் 5 மாடலில் உள்ள 6,800mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது, மிகப்பெரிய அப்கிரேட் ஆகும். இதன் மூலம், ஒரே சார்ஜில் 2.5 நாட்களுக்கும் மேலான பேட்டரி லைஃப் கிடைக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நோர்ட் 5 ஸ்மார்ட்போனிலுள்ள ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டின் "இயல்பான" நெக்ஸ்ட் ஜெனரேஷன் சிப்செட் ஆகும். ஆக முந்தைய மாடலை விட சிபியு மற்றும் ஜிபியு செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

வடிவமைப்பை பொறுத்தவரை, முந்தைய மாடலில் இருந்த பில் ஷேப்ட்டு ரியர் கேமரா செட்டப்பிற்கு பதிலாக, ஒன்பிளஸ் நோர்த் 6 ஸ்மார்ட்போனில் ஸ்கொயர் ஷேப்ட்டு ரியர் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. அதாவது இது ஒன்பிளஸ் 15 மாடலில் இருந்து இன்ஸ்பையர் ஆனது போல் தெரிகிறது. ஒன்பிளஸ் 15 மாடலில் இருந்து "எடுக்கப்பட்ட" மற்றொரு அம்சம் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளே ஆகும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் நீடித்து உழைக்கும் தன்மையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்களை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் IP65 ரேட்டிங் மட்டுமே இருந்தது. கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி லிடியா ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா ஆகியவைகள் உள்ளன.

OPINION - ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலை காத்திருந்து வாங்கலாமா? இதுவரை வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நீங்கள் சுமார் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரையிலான பட்ஜெட்டில் ஒரு ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், ஒன்பிளஸ் நார்ட் 6 மாடலுக்காக காத்திருப்பது மதிப்புக்குரியது தான். தற்போது ரூ.40,000 க்கும் குறைவான விலைப்பிரிவில் உள்ள வேறு எந்த போனும் 165ஹெர்ட்ஸ் டிஸ்பிளே மற்றும் 9000mAh பேட்டரி காம்பினேஷனை வழங்கவில்லை. இதுவே ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலை இந்த விலைப்பிரிவில் ஒரு தனித்துவமான இடத்தை அளிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 India Sale Date April 9 Confirmed Price Range Also Confirmed Who can Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X