பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! இன்னும் 90 வினாடிகள் தான் மிச்சமா?

|

உலகத்தின் அழிவைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுடைய செயல்பாடுகளின் விளைவுகளால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உலகத்தில் அழிவை நம்மை நோக்கி நகர்த்திக் கொண்டு வருகிறது என்றே கூறலாம்.

உலகத்தின் அழிவு இப்படி தான் இருக்கும், இத்தனை ஆண்டுகள் கழித்து உலகம் அழியும் என்று பல கூற்றுகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகத்தின் அழிவைக் கணக்கிடும் பல சாதனங்களில் ஒன்றாகத் திகழ்வது தான் 'டூம்ஸ் டே கிளாக் (Dooms day Clock)' என்ற கடிகாரம். இதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! 90 நொடி மிச்சமா?

'டூம்ஸ் டே கிளாக்' என்றால் என்ன? இது எப்படி பூமியின் அழிவு நாளை கணக்கிடும்?

இந்த 'டூம்ஸ் டே கிளாக்' என்பது உலகத்தின் அழிவிற்கு இன்னும் எவ்வளவு காலம் மீதம் இருக்கிறது என்பதனை சுட்டிக்காட்ட உருவாக்கப்பட்டுள்ள ஒரு கடிகாரமாகும். இது சாதாரண கடிகாரம் போல் செயல்படாது. புல்லட்டின் ஆஃப் அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் (Bulletin of Atomic Scientists) என்ற ஒரு குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் சேர்ந்து இந்த டூம்ஸ் டே கடிகாரத்தை உருவாக்கி, இயக்கி வருகின்றனர்.

இதில் டூம்ஸ் டே என்பது உலகத்தின் அழிவு நிகழும் இறுதி நாளைக் குறிக்கிறது. இதனை அறிவியல் மொழியில் அப்போகாலிப்ஸ் (Apocalypse) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த கடிகாரத்தில் அழிவு நாளை மிட் நைட் என்று குறிப்பிட்டுள்ளனர். கேட்பதற்குக் கொஞ்சம் விநோதமாகவும், வித்தியாசமாகவும் இருப்பது போல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், விஞ்ஞானிகள் இந்த கடிகாரத்தை முழுமையாக நம்புகிறார்கள் என்பதே உண்மை.

பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! 90 நொடி மிச்சமா?

எப்போது இந்த டூம்ஸ் டே கிளாக் முதன் முதலில் ON செய்யப்பட்டது தெரியுமா?

1945 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் இந்த டூம்ஸ் டே கடிகாரத்தின் முள்ளை, அந்தக் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அன்றைய காலநிலையைக் கணக்கிட்டு நகர்த்தி வைப்பர். முள்ளை எவ்வளவு நகர்த்த வேண்டும் என்பதனை கணிக்க ஒவ்வொரு ஆண்டும் அந்த குழு கூடி ஆலோசனை நிகழ்த்தும். சமீபத்தில், இந்த குழு திடீரென ஒன்று கூடி, டூம் டே கிளாக் இன் முள்ளை நகர்த்தியுள்ளது.

டூம் டே கிளாக் இன் முள்ளை நகர்த்திய பின், அந்த குழு மக்களை எச்சரிக்கையாகவும், பொறுப்பாகவும் இருக்கக்கோரி ஆலோசனை கூறியுள்ளது. 1947ஆம் ஆண்டு, இந்த டூம்ஸ் டே கடிகாரம் அறிமுகம் செய்யப்பட்ட போது, பூமியின் அழிவு நாளிற்கு இன்னும் ஏழு நிமிடங்கள் இருப்பது போல அதன் முள் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கோல்ட் வார் (Cold War) சமயங்களில், நேர வித்தியாசம் குறைக்கப்பட்டு, 2 நிமிடங்கள் இருப்பது போல மாற்றி வைக்கப்பட்டது.

பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! 90 நொடி மிச்சமா?

மிட்நைட் அழிவிற்கு இன்னும் '90 விண்டிகள்' தான் மிச்சம் உள்ளதா?

2020ஆம் ஆண்டு பல்வேறு காலநிலை மாற்றங்கள் காரணமாக, பூமியின் அழிவு நாளிற்கான காலக்கெடு 100 நொடிகளாகக் குறைக்கப்பட்டது. சமீப காலமாக ஏற்பட்டு வரும் கொரோனா பெரும் தொற்று, இயற்கை சீற்றங்கள், காலநிலை மாற்றங்கள், மக்களின் அலட்சியம் போன்ற காரணங்களால் பூமியின் அழிவு நாளிற்கான தற்போதைய புதிய காலக்கெடு, மேலும் பத்து நொடிகள் குறைக்கப்பட்டு, இப்போது வெறும் 90 நொடிகளாக மாற்றப்பட்டுள்ளது.

75 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு, மிகவும் வேகமாக 'டூம்ஸ் டே கிளாக்' அழிவை நெருங்கிவிட்டதாக இந்தக் கடிகாரம் காண்பிக்கிறது. இந்த 90 வினாடி என்பது நார்மல் கடிகாரத்தில் குறிக்கும் நேரமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது எத்தனை ஆண்டுகளை குறிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் குழுவே தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இந்த முள் மீண்டும் நகர்த்தப்படலாம்.

பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! 90 நொடி மிச்சமா?

எந்த அடிப்படையில் இந்த முறை டூல்ஸ் டே கிளாகின் கடிகார முள் நகர்ந்தபட்டது?

இந்த மாற்றத்திற்கு இயற்கை தொடர்பான காரணங்கள் மட்டுமின்றி, உக்கிரன் மீது ரஷ்யா தொடுத்த போர், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் அணு ஆயுத மேம்பாடுகள் ஆகியவையும் காரணமாகக் கருதப்படுகிறது என்று குழு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை மாற்ற மக்கள் காலநிலை மாற்றத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், காலநிலையைச் சீராக்கத் தேவையான செயல்பாடுகளில் மனிதர்கள் ஈடுபட வேண்டும் என்றும் இந்த புல்லட்டினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு பாண்டமிக் (Pandemic) வராத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், உலக நாடுகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது அறிவுறுத்தி வருகிறது.

நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, மக்களாகிய நாம் அனைவரும் மேலும் பொறுப்பாக இருந்து இயற்கையைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது நன்றாகப் புரிகிறது. இந்த டூம்ஸ் டே கிளாக் பற்றிய உங்களது கருத்து என்ன என்பதை கமெண்டில் தெரிவிக்கவும். மனிதர்கள் பூமியை காப்பாற்ற என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் பதிவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Earth's End Is Near: Dooms Day Clock Is 90 Seconds Closest To Midnight in History

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X